சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கிருஷ்ணகிரியில் சாலை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.மாணவ- மாணவியர் கலந்து கொண்டனர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
Published on

கிருஷ்ணகிரி காட்டி நாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது. இதற்கு தாளாரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவரும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினரு மான வள்ளி பெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை கல்லூரி முதல்வர் ஆறுமுகம் முகாமின் நோக்கம் குறித்து விளக்கி அனைவரையும் வரவேற்றார்.

இதில் சிறப்பு விருந்தினராக மகராஜகடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன், ஏட்டு கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் பேசும்போது, போக்குவரத்து விதிகளை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஒட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்கள் தான் வாகனம் ஓட்ட வேண்டும். அதிவேகமாக வாகனங்களை ஓட்ட கூடாது என்றனர். நிகழ்ச்சியில் தமிழ் துறை தலைவர் அறிவழகன் நன்றி கூறினார். இந்த முகாமில் நிர்வாக அலுவலர் சுரேஷ், துறை தலைவர்கள், பேராசிரி யர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com