என் மலர்
உள்ளூர் செய்திகள்

கித்வாய் தெருவில் ரூ.12 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை, பேரூராட்சி தலைவலர் சீனிவாசன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.
ரூ.12 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
- ரூ.12 லட்சம் மதிப்பில், சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை நடந்தது.
- பேரூராட்சி தலைவர் சீனிவாசன், பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி 8-வது வார்டில், கித்வாய் தெருவில் ரூ.12 லட்சம் மதிப்பில், சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை நடந்தது.
இதில் பேரூராட்சி தலைவர் சீனிவாசன், பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் மனோ கரன், பேரூராட்சி துணைத்த லைவர் அப்துல்கலாம், 8-வது வார்டு கவுன்சிலர் முஜாமில் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சீனிவாசன், துணை செயலாளர் இதயத்துல்லா, மாவட்ட பிரதிநிதி சக்திவேல், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மணிவண்ணன், ஒன்றிய பிரதிநிதி அல்லாபகஷ், சித்திக், தில்லு பாய், நவாஸ்கான், முதாசீர் பாஷா, முகமத் பரித், தாவுத்கான், முபாரக், சித்திக் ஆகியோர் கலந்து கொண்ட னர்.






