என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் நிறுவன ஊழியரிடம் ஆன்லைன் மூலம் ரூ.6.40 லட்சம் மோசடி
    X

    தனியார் நிறுவன ஊழியரிடம் ஆன்லைன் மூலம் ரூ.6.40 லட்சம் மோசடி

    • ஒசூரில் தனியார் நிறுவன ஊழியரிடம் ஆன்லைன் மூலம் ரூ.6.40 லட்சம் மோடி செய்தார்.
    • கடந்த மாதம் 14ந்தேதி இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேசேகர் (வயது35) இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 14ந்தேதி இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ் செய்தி வந்துள்ளது. அதில் யூடிப்பில் பகுதி நேர வேலை உள்ளது. இதில் முதலீடு செய்து வேலை ப் பார்த்தால் பல லட்சங்கள் வரை சம்பா திக்காலம் என்று இருந்து ள்ளது. இதனை நம்பி அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு ராஜ சேகர் போன் செய்து பேசினார்.

    அதில் பேசிய நபர் சொன்ன வங்கி கணக்கு எண்ணில் ரூ. 6.39.439 பணத்தை செலுத்தியுள்ளார். அதன் பிறகு அந்த செல் போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜசேகர் இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×