என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • ஓசூரில் நடைமேடை அமைக்கும் இடத்தில் மேயர் சத்யா நேரில் ஆய்வு செய்தார்.
    • 8 கி.மீ தொலைவிற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது.

    தமிழகம் முழுவதும் நடப்போம் நலம் பெறுவோம், என்கிற திட்டத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் விதமாக வருகிற 4-ந் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    இதனையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, 5 வது வார்டிற்கு உட்பட்ட அண்ணாமலை நகர் பகுதியில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள 8 கி.மீ தொலைவிற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது.

    இதனை ஒசூர் மேயர் எஸ்.ஏ.சத்யா நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதமாக முடிக்க அறிவுறுத்தினார்.

    இதில் மாநகர நல அலுவலர் பிரபாகர், மண்டல தலைவர் ரவி, கவுன்சிலர் நாகராஜ், மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • ஓசூர் பிரத்தியங்கிரா தேவி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • தமிழகம் மட்டுமின்றி,கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி கோவிலில் ராகு கேது பெயர்ச்சியையொட்டி, நேற்று சிறப்பு யாகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ராகு, கேது பெயர்ச்சியானது கடந்த மாதம் 8-ந் தேதி நடைபெற்றது.

    திருக்கணித வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நேற்று அதன் முழுமை நிறைவு பெற்றதை அடுத்து, ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் இடம் பெயர்ந்து பிரவேசித்தனர்.

    ஓசூர் பிரத்தியங்கிரா தேவி கோவிலில், ராகு பகவான் மற்றும் கேது பகவான் மூலவராக ஒரே சந்நிதியில் காட்சி தந்து அருள் பாலித்து வருவது சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நிலையில் இக்கோவிலில் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. இதில், தமிழகம் மட்டுமின்றி,கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து பரிகார பூஜைகளில் கலந்து கொண்டனர்.முன்னதாக மூலவர் ராகு கேது பகவானுக்கு பால், தயிர்,வெண்ணை, சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.

    பின்னர் வெள்ளிக் கவசம் அணிவித்து மலர் அலங்காரத்தில் காட்சி தந்த மூலவர்களுக்கு மகா தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

    • ஒசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் கழிவுகள் கலந்த தண்ணீர் வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடை்தனர்.
    • ஆற்றின் கரையில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் உள்ளன.

    கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் தென்பெண்ணை ஆற்றின் அருகே ஏராளமான தனியார் தொழிற் சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் ஓசூர் கெல வரப்பள்ளி அணை நீரில் கலந்து துர்நாற்றத்துடனும், நுரை பொங்கி வெளியேறி வருகிறது. இந்த நிலையில் நேற்று ஓசூர் அருகே தொரப்பள்ளி பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றுக்கு வந்த நீர், கறுப்பு நிறமாகவும், நுரையுடன் ஓடி வந்ததை கண்டு விவசாயிகளும், பொதுமக்களும் அதிர்ச்சிய டைந்தனர். மேலும் இந்த நீர் விஷத்தன்மை கலந்த நீர் என்றும் அவர்கள் அச்சமடைந்துள்ளனர். தொரப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான நிலப்பரப்பில் நெல், கேழ்வரகு மற்றும் தக்காளி, முட்டைக்கோஸ், பீன்ஸ் போன்ற காய்கறிகளும் சாமந்தி போன்ற பூக்களும் விளைவிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், நச்சுத் தன்மையுடன் கறுப்பு நிறத்தில் தண்ணீர், தென் பெண்ணை ஆற்றில் பாய்ந்து வருவதால் விவசாயப் பயிர்கள் மிகவும் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் வேதனை அடைந் துள்ளனர். மேலும் இது சம்பந்தமாக அதிகாரிகள் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சூளகிரி அரசு பள்ளியில் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் , சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மஞ்சப்பை விழிப்பு பேரணி நடந்தது.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கி மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து பள்ளி மாண வர்கள் ஒசூர்-கிருஷ்ணகிரி சாலையில் பேரணியாக சென்று விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கொண்டு பொது மக்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ராம சந்திரன், ஒருங்கி ணைப்பாளர் வெங்கடேஷ் , ஆசிரியர்கள் , பள்ளியின் தேசிய பசுமை படை ஒருங்கி ணைப்பாளர் ஆபிதா பானு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமன், துணைத் தலைவர் ஷானு, பொருளாளர் அஷ்பர் செயலாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பி னர்கள் சுதாகர், சேகர், ஜெபஸ்றின்மற்றும் உறுப்பி னர்கள் , மாண வர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர் .

    நிகழ்ச்சிக்கான ஏற்பா டுகளை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கி ணைப்பாளர் தீர்த்தகிரி மற்றும் ஓசூர் மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பாலாஜி ஆகியோர் செய்து இருந்தனர். ஆசிரியர் கணேசன் , முகமது அலி, கோவிந்தராஜ், செல்வம் உடன் இருந்தனர்.  

    • வணிகர்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகிறது.
    • ஆன்லைன் வர்த்தகம் என்பது ஏமாற்று வேலை யாகும்.

    கிருஷ்ணகிரி:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வணிகர்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகிறது. கொரோனா காலத்தில் 2 ஆண்டுகள் வணிகர்கள் பொது மக்களுக்கு எந்த அளவில் உறுதுணையாக இருந்தார்கள் என்பதை அறிவீர்கள். ஆன்லைன் வர்த்தகம் என்பது ஏமாற்று வேலை யாகும். அன்னிய நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒன்றுக்கு 4 இலவசம், 2-க்கு 2 இலவசம் என்று மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

    பொதுமக்கள் உள்நாட்டு வணிகத்தை பாதுகாக்க முன் வர வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தை புறக்கணியுங்கள். தற்போது தீபாவளி பண்டிகை வர உள்ளது. அனைத்து கடைகளுக்கும் சென்று பொது மக்கள் பொருட்கள் வாங்க முன் வர வேண்டும். இந்த நேரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை என்ற பெயரில், கடைகளுக்குள் நுழைந்து வணிகர்களிடையே அச்சுறுத்த கூடாது.

    தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிக்கப்படும். இந்த நேரத்தில் பட்டாசு கடைக்காரர்களுக்கு அரசு துறை அதிகாரிகள் அச்சுறுத்தலை தந்து வருகிறார்கள். சில்லறை பட்டாசு விற்பனை கடைகளில் எங்காவது விற்பனை நடந்துள்ளதா? உற்பத்தி செய்யும் இடங்களில் விபத்துக்கள் நடந்திருக்கலாம். எனவே பட்டாசு கடைகளுக்கு அதிகாரிகள் உடனே உரிய அனுமதி வழங்க வேண்டும்.

    இது தொடர்பாக நாங்கள் சென்னையில் அதிகாரிகளை சந்தித்துள்ளோம். இதே நிலை நீடித்தால் ஒரிரு நாட்களில் பிரச்சினை தீராவிட்டால் முதலமைச்சரை ஒரிரு நாட்களில் சந்தித்து தமிழ்நாடு முழுவதும் பட்டாசு கடைகளை திறக்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    பக்கத்து மாநிலங்களில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அனுமதி இல்லை. ஆனால் நமது மாநிலத்தில் அப்படி இல்லை. சாமானிய வணிகர்களை காக்க முதலமைச்சர் முன் வர வேண்டும்.

    உள்நாட்டு வணிகர்களை காக்க வேண்டும். அதற்காக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தொடர்ந்து வலியுறுத்தும். ஜி.எஸ்.டி. அதிகமாக கட்ட கூடிய மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஆனால் நமது மாநிலத்திற்கு வரக்கூடிய தொகை குறைவாகும். ஜி.எஸ்.டி.யில் அடிக்கடி மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.

    கவுன்சிலிங் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்படுவது வணிகர்கள் தான். வியாபாரிகளை, வணிகர்களை காக்க பிரதமர் முன் வர வேண்டும். பட்டாசு கடைகளை பொது இடத்தில் வைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. அதற்கான வழிமுறைகள் தற்போது இயலாது. சட்டத்தை உடனடியாக மக்களிடம் கொண்டு வந்தால் தொழில் நடத்த முடியாது. ஆகவே தகுந்த பாதுகாப்புடன் பட்டாசு கடைகளை வைக்க அறிவுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காட்டு யானையை யாரோ மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது தெரியவந்தது.
    • போலீசாரும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானையை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி அடுத்து சென்னமாலம் கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது.

    இந்த வனப்பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து தொடர் அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தளி அருகே காட்டு யானை தாக்குதலில் முதியவர் ஒருவர் பலியானார் மேலும் விளை பயிர்களையும் யானைகள் நாசப்படுத்தியுள்ளன.

    இந்த நிலையில் சென்னமாலம் கிராமத்தையொட்டி உள்ள கக்கமல்லேஸ்வரம் கோவில் பகுதியில் விவசாய தோட்டத்தில் நேற்று ஒரு காட்டு ஆண் யானை துப்பாக்கி குண்டு பாய்ந்து செத்து கிடந்தது. இதை பார்த்த கிராம மக்கள் ஜவளகிரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உதவி வனபாதுகாவலர் ராஜமாரியப்பன் ஜவளகிரி வனசரக அலுவலர் முரளிதரன் வனவர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது காட்டு யானையை யாரோ மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது தெரியவந்தது.

    இதையடுத்து வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் மற்றும் மருந்துவ குழுவினரை வரவழைக்கப்பட்டு யானையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அதிலிருந்த 2 தந்தங்களும் மீட்கபட்டு, அருகில் உள்ள வனப்பகுதியில் யானையின் உடல் புதைக்கப்பட்டது.

    துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட யானைக்கு 15 வயது இருக்கும் என்றும், அது ஆண் யானை என்றும், அந்த யானையை நாட்டு துப்பாக்கியால் மர்ம நபர்கள் சுட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    தொடர் அட்டகாசத்தில் காட்டு யானைகள் ஈடுபட்டு வந்ததால், மர்ம நபர்கள் ஆத்திரத்தில் காட்டு யானையை சுட்டுக் கொன்றிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கிறார்கள். அதன்பேரில் ஜவளகிரி வனத்துறையினரும், போலீசாரும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் உதவி வனப்பாது காவலர் ராஜமாரியப்பன் தலைமையில் 3வனசரக அலுவலர்கள் கொண்ட குழுவினரை அமைத்து மர்ம நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கோ பூஜையும், பெண்கள் பால்குடம் எடுத்தலும் நடந்தது.
    • அனைவருக்கும் அன்ன தானம் வழங்கபட்டது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை அருகே கலுகோப சந்திரம் அடுத்துள்ள பெனசப்பள்ளி கிராமத்தில் 16 அடி உயரத்தில் ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் சாமிக்கு புதிதாக கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் விழா நிறைவடைந்தது. 48-வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.

    இதையொட்டி நேற்று காலை கோ பூஜையும், பெண்கள் பால்குடம் எடுத்தலும் நடந்தது. தொடர்ந்து கணபதி பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹா பூர்ணாஹிதி, மஹா–அபிஷேகம், தீபாரதனை, தீர்த்த பிரசாதம் வழங்க பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டு அருள் பெற்ற னர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கபட்டது.

    • பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
    • 200 க்கும் மேற்பட்ட மலை வாழ் மக்கள் கலந்து கொண்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப்பகுதியில் வாச்சாத்தி முதல் அரசநத்தம், அக்கரைக்காடு, கலசப்பாடி, கோட்டக்காடு, ஆலமரத்து வளைவு, கருக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

    மேலும் இந்த கிராமங்களில் இருந்து பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கும் பயணம் செய்ய சாலை வசதி இல்லாததால் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

    இதனால் இச்சாலையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொது மக்களின் பங்களிப்போடு மண் சாலை அமைக்கபட்டது. இந்த மண் சாலையை தார் சாலையாக அமைத்து தர மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இன்று வரை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தார் சாலை அமைக்கவில்லை.

    இது சம்பந்தமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தருமபுரி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலசப்பாடி மலை கிராமத்திற்கு கொடியேற்ற வந்தவர் இங்குள்ள ஏழு மலை கிராம மக்களை ஒன்று திரட்டி உங்களுக்கு 28 கோடி மதிப்பில் மண்சாலை தார் சாலையாக அமைக்கும் திட்டம் தி.மு.க அரசால் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் மண் சாலையாக உள்ள சாலையை தார்சாலையாக மாற்றி அமைக்கப்படும் என வாக்குறிதி அளித்தார். ஆனால் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதளை கண்டிக்கும் வகையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மலைநாடு பழங்குடியினர் மற்றும் விவசாயிகள் முன்னேற்ற சங்கம் நிருவன தலைவர் ராமசாமி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பேசிய அவர்கள், இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இங்குள்ள மலை கிராமத்திற்கு செல்லும் மண் சாலைகளை தார் சாலைகளாக அமைக்காவிட்டால் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை இந்த ஏழு மலை கிராம மக்களும் புறக்கணிப்போம். மேலும் தமிழக அரசு வழங்கிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து விட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை தொடர்வோம் என எச்சரிக்கை விடுத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மலைவாழ் மக்களின் தேனாண்டை லட்சுமண குருக்களுடன் பாரம்பரிய உடையணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைதொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 200 க்கும் மேற்பட்ட மலை வாழ் மக்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.12 லட்சம் மதிப்பில், சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை நடந்தது.
    • பேரூராட்சி தலைவர் சீனிவாசன், பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தார்.

    தேன்கனிக்கோட்டை,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி 8-வது வார்டில், கித்வாய் தெருவில் ரூ.12 லட்சம் மதிப்பில், சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை நடந்தது.

    இதில் பேரூராட்சி தலைவர் சீனிவாசன், பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் மனோ கரன், பேரூராட்சி துணைத்த லைவர் அப்துல்கலாம், 8-வது வார்டு கவுன்சிலர் முஜாமில் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சீனிவாசன், துணை செயலாளர் இதயத்துல்லா, மாவட்ட பிரதிநிதி சக்திவேல், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மணிவண்ணன், ஒன்றிய பிரதிநிதி அல்லாபகஷ், சித்திக், தில்லு பாய், நவாஸ்கான், முதாசீர் பாஷா, முகமத் பரித், தாவுத்கான், முபாரக், சித்திக் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    • தகவலின் பேரில் போலீசார் ஸ்பா சென்டரை சோதனை செய்தனர்.
    • ஜனாப் கான் என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

    ஓசூர்,

    ஓசூரில் பாகலூர் சாலையில் நல்லூர் ஜங்ஷன் அருகில் ஸ்பா சென்டர் ஒன்று இயங்கி வருவதாகவும், அங்கு இளம்பெண்களை வைத்து விபசார தொழில் நடத்தி வருவதாகவும் அட்கோ போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் அந்த ஸ்பா சென்டரை சோதனை செய்தனர். அதில் அந்த ஸ்பா சென்டரில் இளம் பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து இளம்பெண்களை மீட்ட போலீசார், ஸ்பா சென்டரை நடத்தி வந்த ஜனாப் கான் (40) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். புதுடெல்லி பத்பூரை சேர்ந்த அவர் ஓசூர் நல்லூர் பகுதியில் தங்கி ஸ்பா சென்டர் பெயரில் இளம் பெண்களை விபசார தொழிலை நடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கலெக்டர் சரயு வழங்கினார்.
    • பொதுமக்கள் 344 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டததில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 344 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.

    மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் சரயு, அந்த மனுக்களின் மீது துறை சார்ந்த அலுவலர்கள் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.7 ஆயிரத்து 900 வீதம் ரூ.23 ஆயிரத்து 700 மதிப்பிலான சக்கர நாற்காலிகளை கலெக்டர் சரயு வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பன்னீர்செல்வம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ரமேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி தலைவர் தலைமையில் ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்காக பூமிபூஜை செய்தனர்.
    • ஆக்கிரமிப்பு செய்துள்ள ஒரு சிலர் ரேஷன் கடை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் ஒன்றியம் அச்செட்டிப்பள்ளி ஊராட்சிக்குட்பட்டது எடப்பள்ளி கிராமம், இந்த கிராமத்தில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும் என கிராமமக்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக கிராம சபை கூட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வந்தனர்.

    கிராமமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து எடப்பள்ளி கிராம மக்கள் கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ஒரு இடத்தில் நேற்று, ஊராட்சி தலைவர் தலைமையில் ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்காக பூமிபூஜை செய்தனர். இந்த நிலையில், அந்த இடத்தை ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்துள்ள ஒரு சிலர் ரேஷன் கடை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், மேலும் ரேஷன் கடை கட்டினால் அதனை இடித்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வாயில் பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் தாசில்தார் சுப்பிரமணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக வருவாய்த்துறையினர் கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் அனைவரும் அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் சப்-கலெக்டர் அலுவலகவளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×