என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • ஊத்தங்கரை அருகே மின்சார ஓயரை மிதித்த மாடு உயிரிழந்தது.
    • விவசாயி மருத்துவமனையில் அனுமதி

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஊனம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வேடியப்பன்(வயது70) என்பவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    இவர் தற்பொழுது 4 மாடுகளை வளர்த்து வருகிறார். இன்று வழக்கம் போல தனது 4 மாடுகளையும் மேய்ச்சலுக்காக விவசாய நிலபகுதிக்கு ஓட்டிக் கொண்டு செல்லும் வழியில் அறுந்து கிடந்த மின் ஒயரை ஒரு மாடு மிதித்து உள்ளது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மாடு சம்பவ இடத்திலேயே பலியானது. இதில் வேடியப்பன் மீதும் மின்சாரம் தாக்கியது. அவரை மீட்ட பொதுமக்கள் படுகாயங்களுடன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி சேர்த்துள்ளனர்.

    இறந்த மாட்டின் சந்தை மதிப்பு ரூ. 40 ஆயிரம் ஆகும். மின்சாரம் தாக்கி மாடு பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஓசூரில் இளம்பெண் ஒருவர் மாயம் ஆனார்
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஓசூரை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். கடந்த 1-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    தளி அருகே உளள கிராமத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். தனியார் கல்லூரியில் இளங்க லை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 31-ந் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற வர் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    அது குறித்து பெற்றோர் தளி போலீசில் புகார் செய்தனர். அதில் தளியை சேர்ந்த ஆறு முகம் என்பவர் மீது சந்தே கம் உள்ளதாக கூறியுள்ள னர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒசூரில் ரூ. 4. கோடி மதிப்பில் புதிய குளிர் பதன கிடங்கை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
    • ரூ.67 கோடியே 52 லட்சம் மதிப் பிட்டில் பல்வேறு திட்டங் கள் அறிவிக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தமிழ்நாடு பட்டு வளர்ச்சி பயிற்சி நிலைய வளாகத்தில், ரூ.4 கோடி மதிப்பில் ஒரு கோடி பட்டு முட்டைத் தொகுதிகள் பதப்படுத்தும் புதிய குளிர் பதன அலகினை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் மற்றும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் நேற்று திறந்து வைத்து, பார்வையிட்டனர்.

    தொடர்ந்து, ஓசூர்- தளி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், மாநில அள வில் 788 பட்டு விவசாயி களுக்கு ரூ.19 கோடியே 47 இலட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளை வழங்கி னர். முன்னதாக, பட்டு வளர்ச்சித் துறை இயக்குநர்

    சந்திரசேகர் சாகமூரி வரவேற்றார். மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கி பேசினார். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), மதியழகன் (பர்கூர்), .டி.ராமச்சந்திரன் (தளி), மற்றும் ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகி யோர் முன்னிலை வகித்த னர். இதில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: "

    நமது பட்டு நூல் தேவையை ,நாமே பூர்த்தி செய்து கொள்வதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். நடப்பாண்டு 2023-24 பட்ஜெட்டில், பட்டு விவசாயிகள் மற்றும் பட்டு தொழில் முனை வோர்க ளுக்காக ரூ.67 கோடியே 52 லட்சம் மதிப் பிட்டில் பல்வேறு திட்டங் கள் அறிவிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் அதிகரித்து வரும் வெண்பட்டு முட்டை தேவைக்காக, கோவை மாவட்டம், சின்னவே டம்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், கிருஷ்ண கிரி ஆகிய இடங்களில் தலா 20 லட்சம் என மொத்தம் 60 லட்சம் வெண்பட்டு முட்டைகள் பதப்படுத்தும் குளிர்பதன கிடங்குகள் செயல்பாட்டில் உள்ளது. இந்த வசதியை மேலும் கூடுதலாக்கி தர வேண்டும் என்ற பட்டு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சரின் உத்தர வுப்படி, இன்று ஒசூர், பட்டு வளர்ச்சி பயிற்சி நிலைய வளாகத்தில், ஒரு கோடி வெண்பட்டு முட்டைகளை பதப்படுத்தும் குளிர்பதன கிடங்கு ரூ.4 கோடி மதிப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் விழாவில் பேசினார்.

    • கிருஷ்ணகிரியில் மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
    • 24 முதல், 35 வயதிற்கு உட்பட்ட வர்கள் கலந்து கொள்ளலாம்.

    108 ஆம்புலன்ஸ் சேவை கிருஷ்ணகிரி மாவட்ட மேலாளர் ரஞ்சித் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    108 ஆம்புலன்ஸ் சேவைக் கான அவசரகால மருத்துவ உதவியாளர் மற்றும் டிரை வர் பணிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் கிருஷ்ண கிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவ னத்தில் நாளை (சனிக்கி ழமை) நடக்கிறது. இதில், மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு, பி.எஸ்.சி., நர்சிங், பி.எஸ்.சி. (விலங்கியல்) பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி அல்லது பிளஸ்-2 வுக்கு பிறகு மருத்துவதுறை சார்பில் இரண்டாண்டு படிப்பு படித்த, 19 முதல், 30 வரை உள்ள, இரு பாலரும் கலந்து கொள்ள லாம்.

    அதே போல டிரைவர் பணிக்கு, பத்தாம் வகுப்பு முடித்த, இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்தி ருக்கும், 162.5 செ.மீ., உயரம் குறையாமல் உள்ள, 24 முதல், 35 வயதிற்கு உட்பட்ட வர்கள் கலந்து கொள்ள லாம். மூன்று ஆண்டுகள் அனுபவம், ஒரு வருடபேட்ஜ் வாகன உரிமம் வைத்திருக்க வேண்டும்.

    இதில், எழுத்து தேர்வு, உடற்தகுதி உள்ளிட்டவை களுக்கு பின் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டு, 12 மணி நேர ஷிப்ட் முறையில். இரவு மற்றும் பகல் ஷிப்ட்டு களில் பணியமர்த்தப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

    • கிருஷ்ணகிரி பி.எஸ்.வி. கல்லூரியில் 10 ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
    • முன்்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பங்கேற்பு

    கிருஷ்ணகிரியில் சென்னை தேசிய நெடுஞ்சா லையில் இயங்கி வரும் பி.எஸ்.வி. பொறியியல் மற்றும தொழில் நுட்ப கல்லூரியில் 10-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியை பி.எஸ்.வி. கல்வி குழுமங்களின் செய லாளர் எஸ்.விவேக் தொ டங்கி வைத்தார். கல்வி குழுமங்களின் நிறுவனத் தலைவர் பி.செல்வம், இயக்குனர் புஷ்பா செல்வம், இணை செயலாளர் சாந்த மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கல்லூரி முதல்வர் பி.லாரன்ஸ் வரவேற்று பேசினார். அவர் 2022-2023-ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா அறிக்கையை வாசிக்கும் போது நிகழ்ச்சியில் பட்டம் பெறும் யு.ஜி. மற்றும் பி.ஜி. 362 மாணவர்கள் விவரங்க ளையும், நடப்பு ஆண்டு அண்ணா பல்கலைக்கழக தர பட்டியல் விவரங்க ளையும், பி.எச்.டி. பெறும் பேராசிரியர் விவரத்தையும், நடப்பு ஆண்டு பி.எச்.டி-க்கு பதிவு செய்துள்ள பேராசிரியர்கள் விவரங்க ளையும் எடுத்து கூறினார். மேலும் கல்லூ ரியில் 2022-2023-ம் ஆண்டில் நடத்தப் பட்ட கருத்தரங்கு கள், பயிற்சி முகாம்களில் மாணவர்கள் பங்கேற்று பயன் பெற்ற விவரங்களை யும் விரிவாக எடுத்து கூறினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற முன்னாள் டி.ஜி.பி. சைலேந் திரபாபு கலந்து கொண்டு 362 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றி னார். அவர் பேசும் போது பட்டம் பெறும் மாணவர்கள் தங்களுடைய ஆற்றலை திறமை மூலமாக வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தங்களு டைய தாய் தந்தையை எவ்வாறு மதிக்க வேண்டும் என்றும், எவ்வாறு அன்பு செலுத்த வேண்டும் என்றும் எடுத்து கூறினார்.

    நிகழ்ச்சியில் பட்டம் பெற்ற மாணவரகள், அவர்களின் பெற்றோர்கள், கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள், ஆசிரி யர்கள். கல்லூரியின் அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • இன்ஸ்டாகிராமை தொடர்பு கொண்டு பின்பற்றினால் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயக்கோட்டை சாலை நஞ்சுண்டேஸ்வரர் நகரை சேர்ந்தவர் நாகராசன் இவரது மகன் ஜெயக்குமார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இன்ஸ்டாகிராமை தொடர்பு கொண்டு பின்பற்றினால் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம். மேலும் இதில் பகுதி நேரமாக வேலை பார்த்தாலும் அதிக பணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனை தொடர்ந்து அதில் இருந்த எண்ணில் தொடர்பு கொண்டு ஜெயக்குமார் பேசியுள்ளார். அப்போது அதில் பேசிய மர்ம நபர் ஒரு்வர் வங்கி கணக்கை ஒன்றை கொடுத்து அதில் பணம் செலுத்த சொல்லியுள்ளார். அதன்படி ரூ. 14.50 லட்சம் பணத்தை வங்கி கணக்கில் ஜெயக்குமார் செலுத்தி உள்ளார். அதன் பிறகு அந்த சேல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை.

    பின்னர் இதில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயக்குமார் இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    அதே போன்று ஒசூர் ராயாக்கோட்டை பகுதியை சேர்ந்த பாண்டியன் மகள் தேவி (வயது 26) இவர் தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடந்த 15-ந் தேதி வாட்ஸ்அப்பில் வந்த குறுஞ்செய்தியில் கூகுள் மேப்பில் ரேட்டிங் போடும் வேலையில் பணியாற்ற முதலீடு செய்தால் பல லட்சம் சம்பாதிக்கலாம் என்று என்று கூறப்பட்டு இருந்தது. இதனை நம்பி அதில் இருந்த செல்போன் எண்ணில் பேசிய தேவி பேசினார். அப்போது அவரிடம் பேசிய நபர் பணம் செலுத்த சொன்ன வங்கி கணக்கில் ரூ. 15 லட்சம் பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் அந்த எண்ணில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை.

    இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்த கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

    ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபடும் நபர்கள் படித்தவர்களை தான் குறி வைக்கிறார்கள். அதில் படித்து விவரம் தெரிந்தவர்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு இது போன்ற மோசடிகளில் சிக்கி கொள்கிறார்கள். செயலிகள் மற்றும் வாட்ஸ்ஆப்பில் வரும் குறுஞ்செய்திகளை பார்ப்பதையும் டவுன்லோடு செய்வதையும் செல்போன் பயன்படுத்துபவர்கள் தவிர்க்க வேண்டும் என்றனர்.

    கிருஷ்ணகிரியில் கடந்த 2 மாதங்களில் இதுபோன்று 5 சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

    • முதல்-அமைச்சர் வருகிற 22-ந் தேதி கிருஷ்ணகிரிக்கு வருவதைதையொட்டி ஆய்வு கூட்டம் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடந்தது.
    • போலீசார் உரிய பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 22-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட் டத்திற்கு வருகிறார். இதை முன்னிட்டு முன்னேற்பா டுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் நேற்று நடந்தது.

    இதற்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை தாங்கினார். கலெக்டர் சரயு, ஓசூர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., ஓசூர் மாநக ராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர்பேசியதாவது;-

    தமிழக முதல்-அமைச்சர் கிருஷ்ணகிரி மாவட் டத்திற்கு வருகிற 22-ந் தேதி வருகை தருகிறார். அன்றைய தினம் அவர் திடீர் ஆய்வு பணிகள் மேற் கொள்ளலாம். எனவே அனைத்து அரசு அலுவ லகங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டு தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். அனைத்து அலுவலர்களும் தங்களது அலுவலகத்தின் அனைத்து பதிவேடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த புள்ளி விவரங்கள் தணிக் கைக்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    கேட்கும் விவரங்களை தெளிவாகவும், சுருக்கமா கவும் தெரிவிக்க வேண்டும். மாநகராட்சி மற்றும் நக ராட்சி குப்பைகளை தேங்க விடாமல் அகற்றப்பட்டும், கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட் சிகளில் குடி தண்ணீர் வழங்கும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

    தேசிய, மாநில நெடுஞ்சா லையின் இருபுறங்களிலும் குப்பைகள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் செடிகள் ஆகியவற்றை அப்புறப்ப டுத்தி தூய்மை செய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சா லையின் பொருத்தப் பட்டுள்ள மின் விளக்குகள் அனைத்தும் செயல்படு கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் சிறிய பழுதுகள் ஏற்பட்டிருப்பின் உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

    முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டப்ப ணிகள் ஆய்வு செய்ய நேரிடும் என்பதால் அனை த்து இடங்களிலும் தூய்மை பணியை மேற்கொண்டு உரிய நேரத்தில் காலை உணவு பரிமாற வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள் விடுப்பு எடுக்காத நிலையை உறுதி செய்ய வேண்டும். அங்கன்வாடி மையங்களை தூய்மைபடுத்தியும் குழந்தைகளின் வருகையை உறுதி செய்ய வேண்டும்.

    உரிய நடவடிக்கை

    மருத்துவ கல்லூரி, அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் அனைத்தும் தூய்மை பணிகளை மேற்கொண்டும் மருத்துவர்கள் விடுப்பில் செல்லாமல் அனைவரும் பணியில் இருக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் ஆங்கா ங்கே சாலையில் நிறுத்தி போக்குவரத்து நெரிசல் உண்டாக்குவதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவல்துறை உரிய பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து துறைகள் சார்பாக பொது மக்களிடமிருந்து இணைய தளம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் நிலுவை இல்லா மல் அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். மே லும், அனைத்து துறை முன் னேற்ற பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்-அமைச்சர் நடத்த ஏதுவா கவும் புள்ளிவிவரங்கள் தயார் நிலையில் வைத்தி ருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சரோஜ்குமார் தாக் கூர், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) பவ ணந்தி, மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) சுந்தராஜ், கிருஷ்ண கிரி உதவி கலெக்டர் பாபு, ஓசூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) பன்னீர் செல்வம், தோட்டக்க லைத்துறை இணை இயக்கு னர் பூபதி உள்ளிட்ட அனைத்து துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    • காதலன் சத்தியம்மணி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-பாகலூர் ரோட்டு பகுதியில் உள்ள என்.ஜி.ஒ காலனியில் வசித்து வருபவர் சையத் ஆலாம். இவரது மகள் சகிராபாத்திமா(வயது21). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சிங் படித்து வந்தார்.

    அதேபோல் ஓசூர் கே.வி.நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சத்தியம்மணி (23). இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இருவரின் பெற்றோர்களுக்கும் தெரியவந்ததை அடுத்து காதலர்கள் இருவரையும் இனி காதலிக்க கூடாது என்று கண்டித்துள்ளனர்.

    இதனை மீறி இருவரும் தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்துள்ளனர். தொடர்ந்து இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு அதிகரித்ததால் சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து வாழ முடியவில்லையே என்று மன விரக்தி அடைந்து காணப்பட்டனர்.

    இந்த நிலையில், இருவரும் பிருந்தாவன் பூங்காவில் ஆட்கள் இல்லாத பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர்.

    இதனை கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சகிராபாத்திமாவை மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சகிராபாத்திமா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்நிலையில் காதலன் சத்தியம்மணி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்து நர்சிங் மாணவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் விஷம் குடித்து வாலிபர் உட்பட 2 பேர் பலி யானார்கள்.
    • போலீசார் விசாரணை

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிந்தலகுண்டா பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா (வயது 27) இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நி லையில் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவ ரை காதலித்து வந்துள்ளார். இதற்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரி வித்து உள்ளனர்.

    இதில் மன வருத்தம் அடைந்த பாரதிராஜா நேற்று முன் தினம் வீட்டின் அருகே விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவ ரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பல னின்றி நேற்று இரவு இறந்தார். இது குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர். இதே போன்று கர்நாடகா மாநிலம் கோலார் அருகே யுள்ள ஜெகதேனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ் ணப்பா (வயது 58) இவர் தளி அருகேயுள்ள அங்க ளாப்பள்ளியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    இவருக்கு நீண்ட நாட்க ளாக வயிற்று வலி இருந் துள்ளது. அதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்தும் வலி தீரவில்லை யென்று தெரிகி றது. இதனை யடுத்து கடந்த 31ந்தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண் டார். இது குறித்து அவரது உறவி னர்கள் அளித்த புகாரின் பேரில் தளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஓசூரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிககள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஓசூரில், நேற்று காலை முதல் இரவு வரை நகரின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர். பொதுவாகவே ஓசூர் நகரில் வாகன போக்கு வரத்து அதிகளவில் இருந்து எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

    இந்த நிலையில், தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள், குடும்பத்துடனும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் துணி கடைகள், ஷோரூம்கள், மால்கள், பலகார கடைகளுக்கு கூட்டம், கூட்டமாக வாகனங்களில் வந்து செல்கின்றனர். இதனால், நகரின் முக்கிய பகுதிகளான எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு, பாகலூர் சாலை, தாலுக்கா அலுவலக சாலை, உழவர்சந்தை சாலை, ரெயில் நிலைய சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் நேற்று வழக்கத்தை விட அதிகளவில் வாகன போக்குவரத்து காணப்பட்டது.

    காலை முதல் இரவு 9 மணியை தாண்டியும் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து வாகனங்கள் அதிக எண்னிக்கையில் வந்து சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்தை கடக்க சுமார் 1 மணி நேரம் ஆனது.

    மேலும் அனைத்து வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக நீண்ட தொலைவிற்கு அணி வகுத்து நின்றன. இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ் வண்டிகள், அவசர பணிகளுக்காக செல்வோர், மற்றும் சாலையில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைய நேரிட்டது.

    தீபாவளி பண்டிகை முடியும் வரை, நகரின் முக்கிய பகுதிகளில் அதிகளவில் போக்குவரத்து போலீசாரை நியமித்து, போக்குவரத்தை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வீடுகளை சுகாதாரமாக பராமரிக்க கலெக்டர் அறிவுரை வழங்கினர்.
    • மழைக்காலம் என்பதால், காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலை முற்றி லும் தவிர்க்க அனைத்து வீடுகளையும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.

    டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க வீடுகளை பொதுமக்கள் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    கிருஷ்ணகிரி மாவட் டத்தில் நவம்பர் 1-ந் தேதி உள்ளாட்சி தினத்தை யொட்டி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சி கள், பேரூராட்சிகள், கிருஷ் ணகிரி நகராட்சி மற்றும் ஓசூர் மாநகராட்சி பகுதி களில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நேற்று நடந்தது.

    அதன்படி, கிருஷ்ணகிரி ஒன்றியம் கங்கலேரியில் நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    தற்போது மழைக்காலம் என்பதால், காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலை முற்றி லும் தவிர்க்க அனைத்து வீடுகளையும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக நீர் தொட்டிகள் குளோரின் கொண்டு சுத்த மாக வைத்துக்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்ச லை ஏற்படுத்தும் ஏ.டி.எஸ் வகை கொசுக்கள் சுத்தமான நீரில் தான் வளர்கிறது.

    எனவே, தண்ணீர் தொட்டிகள், பாத்திரங்கள் மூடிய நிலையிலேயே வைக்க வேண்டும். வீடுகளை சுற்றி மழைநீர் தேங்காதவாறு சுத்தப்படுத்த வேண்டும். காய்ச்சல் அறி குறி இருந்தால் சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளாமல், அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகா தார நிலையம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    அதே போல வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள தால், தாழ்வான மற்றும் மழைநீர் தேங்ககூடிய பகுதி களை அடையாளம் கண்டு, வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை நீக்கி மழைநீர் வழிந்தோடுவதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும். தங்கள் குழந்தைகளை தவ றாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

    மேலும், அவர்கள் பள்ளி யில் கல்வியை கற்பதோடு இல்லாமல், வீட்டிற்கு வந்த வுடன் தினந்தோறும் படிக் கின்றனரா என்பதை கண்கா ணிக்க வேண்டும். நமது மாவட்டத்தில், குறிப்பாக மலை கிராமங்களில் குழந் தை திருமணத்தை முற்றிலும் தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வா கம் சார்பில் பல்வேறு நடவடிக் கைககள் மற்றும் விழிப்பு ணர்வு ஏற்படுத் தப்பட்டு வருகிறது. குழந்தை திருமணத்தை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    அவ்வாறு குழந்தை திரு மணம் செய்பவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை கள் எடுக்கப்படும். அதேப் போல கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டறியும் ஸ்கேன் செய்வ தை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு ஆணா? பெண் ணா? என்பதை கண்டறியும் ஸ்கேன் சென்டர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று காலம் முதல் தற்போது முடிவடைந்து நம்ம ஊரு சூப்பர் இயக் கத்தில் தங்களை முழுமை யாக ஈடுபடுத்தி சிறப்பாக சேவை புரிந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் கிராம ஊராட்சியின் வளர்ச் சியில் முதுகெ லும்பாக திகழும் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஊக்கு விக்கும் பொருட்டு, சிறப் பாக செயல்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு பொன்னடை அணிவித்து, கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.

    கூட்டத்தில், வேளாண் மைத்துறை இணை இயக்கு நர் கிருஷ்ணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மகாதேவன், மாவட்ட கலெக் டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சீனிவாசன், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் செந்தில்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் ஜெயந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ராஜேஷ், தாசில்தார் விஜய குமார், ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேன்கனிக்கோட்டையில் டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுப்பாட்டில்களை திருடி சென்ற 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • ரூ.1.90 லட்சம் பணத்தை திருடி சென்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே இருதுக்கோட்டை கிராமத்தில் கடந்த மாதம் 16 ந்தேதி இரவு டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு உள்ளே புகுந்து 10 பாக்ஸ் மதுபானங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இது குறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் ராம–சாமி தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதேபோன்று தேன்கனிக் கோட்டை சாகர் லே அவுட்டை பகுதியை சேர்ந்தவர் ஜாகீர்(39). இவர் அந்த பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த மாதம் விபத்தில் காயமடைந்த தனது உறவினரை பார்க்க ஓசூர் சென்றார். அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் ரூ.1.90 லட்சம் பணத்தை திருடி சென்றனர். இந்த இரு திருட்டு சம்ப வங்கள் குறித்து சப் இன்ஸ்பெக்டர் ஜெய கணேஷ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் ஓசூர் அருகே உள்ள பேளகொண்டப் பள்ளியில் வசிக்கும் மாணிக்கம் மகன் வினோத் குமார் (31), மற்றும் ஓசூர் மூக்கண்டப்பள்ளி அன்னை சத்யா நகரை சேர்ந்த பிரபு (எ) தர்மலிங்கம் (33) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து தேன்கனிகோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    ×