என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆயுத படை போலீஸ்காரர் ரோட்டோர பேரிகார்டு தடுப்பில் மோதி பலி
    X

    ஆயுத படை போலீஸ்காரர் ரோட்டோர பேரிகார்டு தடுப்பில் மோதி பலி

    • மத்தூர் அருகே போலீஸ்காரர் ரோட்டோர பேரிகார்டு தடுப்பில் மோதி பலியானார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த பார்த்திபன் இவரது மகன் சத்தியமூர்த்தி (வயது 35).

    இவர் 2013-ம் ஆண்டு காவலராக தேர்ச்சி பெற்று தற்பொழுது கிருஷ்ணகிரி மாவட்ட காவல் ஆயுத படையில் முதல் நிலை போலீசாக பணியாற்றி வந்தார். இவருக்கு நேத்ரா என்ற மனைவியும், 10 வயதில் ஒரு பெண் குழந்தையும், 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

    இந்நிலையில் இவர் குடும்பத்துடன் கிருஷ்ணகிரி காவலர் குடியிருப்பில் தங்கி பணியாற்றி வந்தார். போலீஸ்காரர் சத்தியமூர்த்தியின் சொந்த ஊரான ஊத்தங்கரைக்கு செல்ல கடந்த 2-ந் தேதி அன்று அவரது இருக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரியில் இருந்து மத்தூர் அருகே உள்ள அந்தப் பட்டி கூட்டுச் சாலையில் அருகே வந்த போது அங்கு பெங்களூரு திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையின் குருக்கே போலீசார் வைத்திருந்த பேரி கார்டு தடுப்பு கம்பி மீது நிலை தடுமாறி சத்தியமூர்த்தி இருசக்கர வாகனம் மோதியது.

    இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சைகாக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைகாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி போலீஸ்காரர் சத்தியமூர்த்தி நேற்று மாலை உயிரிழந்தார்.

    இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×