என் மலர்
உள்ளூர் செய்திகள்

10-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
- கிருஷ்ணகிரி பி.எஸ்.வி. கல்லூரியில் 10 ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
- முன்்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பங்கேற்பு
கிருஷ்ணகிரியில் சென்னை தேசிய நெடுஞ்சா லையில் இயங்கி வரும் பி.எஸ்.வி. பொறியியல் மற்றும தொழில் நுட்ப கல்லூரியில் 10-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை பி.எஸ்.வி. கல்வி குழுமங்களின் செய லாளர் எஸ்.விவேக் தொ டங்கி வைத்தார். கல்வி குழுமங்களின் நிறுவனத் தலைவர் பி.செல்வம், இயக்குனர் புஷ்பா செல்வம், இணை செயலாளர் சாந்த மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்லூரி முதல்வர் பி.லாரன்ஸ் வரவேற்று பேசினார். அவர் 2022-2023-ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா அறிக்கையை வாசிக்கும் போது நிகழ்ச்சியில் பட்டம் பெறும் யு.ஜி. மற்றும் பி.ஜி. 362 மாணவர்கள் விவரங்க ளையும், நடப்பு ஆண்டு அண்ணா பல்கலைக்கழக தர பட்டியல் விவரங்க ளையும், பி.எச்.டி. பெறும் பேராசிரியர் விவரத்தையும், நடப்பு ஆண்டு பி.எச்.டி-க்கு பதிவு செய்துள்ள பேராசிரியர்கள் விவரங்க ளையும் எடுத்து கூறினார். மேலும் கல்லூ ரியில் 2022-2023-ம் ஆண்டில் நடத்தப் பட்ட கருத்தரங்கு கள், பயிற்சி முகாம்களில் மாணவர்கள் பங்கேற்று பயன் பெற்ற விவரங்களை யும் விரிவாக எடுத்து கூறினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற முன்னாள் டி.ஜி.பி. சைலேந் திரபாபு கலந்து கொண்டு 362 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றி னார். அவர் பேசும் போது பட்டம் பெறும் மாணவர்கள் தங்களுடைய ஆற்றலை திறமை மூலமாக வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தங்களு டைய தாய் தந்தையை எவ்வாறு மதிக்க வேண்டும் என்றும், எவ்வாறு அன்பு செலுத்த வேண்டும் என்றும் எடுத்து கூறினார்.
நிகழ்ச்சியில் பட்டம் பெற்ற மாணவரகள், அவர்களின் பெற்றோர்கள், கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள், ஆசிரி யர்கள். கல்லூரியின் அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






