என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ.4 கோடி மதிப்பில் புதிய குளிர் பதன கிடங்கு
- ஒசூரில் ரூ. 4. கோடி மதிப்பில் புதிய குளிர் பதன கிடங்கை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
- ரூ.67 கோடியே 52 லட்சம் மதிப் பிட்டில் பல்வேறு திட்டங் கள் அறிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தமிழ்நாடு பட்டு வளர்ச்சி பயிற்சி நிலைய வளாகத்தில், ரூ.4 கோடி மதிப்பில் ஒரு கோடி பட்டு முட்டைத் தொகுதிகள் பதப்படுத்தும் புதிய குளிர் பதன அலகினை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் மற்றும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் நேற்று திறந்து வைத்து, பார்வையிட்டனர்.
தொடர்ந்து, ஓசூர்- தளி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், மாநில அள வில் 788 பட்டு விவசாயி களுக்கு ரூ.19 கோடியே 47 இலட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளை வழங்கி னர். முன்னதாக, பட்டு வளர்ச்சித் துறை இயக்குநர்
சந்திரசேகர் சாகமூரி வரவேற்றார். மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கி பேசினார். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), மதியழகன் (பர்கூர்), .டி.ராமச்சந்திரன் (தளி), மற்றும் ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகி யோர் முன்னிலை வகித்த னர். இதில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: "
நமது பட்டு நூல் தேவையை ,நாமே பூர்த்தி செய்து கொள்வதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். நடப்பாண்டு 2023-24 பட்ஜெட்டில், பட்டு விவசாயிகள் மற்றும் பட்டு தொழில் முனை வோர்க ளுக்காக ரூ.67 கோடியே 52 லட்சம் மதிப் பிட்டில் பல்வேறு திட்டங் கள் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் அதிகரித்து வரும் வெண்பட்டு முட்டை தேவைக்காக, கோவை மாவட்டம், சின்னவே டம்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், கிருஷ்ண கிரி ஆகிய இடங்களில் தலா 20 லட்சம் என மொத்தம் 60 லட்சம் வெண்பட்டு முட்டைகள் பதப்படுத்தும் குளிர்பதன கிடங்குகள் செயல்பாட்டில் உள்ளது. இந்த வசதியை மேலும் கூடுதலாக்கி தர வேண்டும் என்ற பட்டு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சரின் உத்தர வுப்படி, இன்று ஒசூர், பட்டு வளர்ச்சி பயிற்சி நிலைய வளாகத்தில், ஒரு கோடி வெண்பட்டு முட்டைகளை பதப்படுத்தும் குளிர்பதன கிடங்கு ரூ.4 கோடி மதிப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் விழாவில் பேசினார்.






