என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கோவையில் வருகிற 17ந் தேதி நடைபெறவுள்ள ஜவுளி தொழில் முனை வோர்கள் கருத்தரங்கில் பங்கேற்க முன்பதிவு செய்ய வேண்டும்.
    • ஜவுளி தொழில் முனை வோர்கள் கலந்து கொள்ளலாம்,

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    இந்தியாவில் துணிநூல் மற்றும் ஆயத்த ஆடைகள் சந்தையில் தொழில்நுட்ப ஜவுளிகள் 13 சதவீதம் பங்க ளிப்பு வழங்குகின்றன. தொழில்நுட்ப ஜவுளித்துறை ஆண்டிற்கு 12 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடை யும் என்றும், 2030ஆம் ஆண்டிற்குள் சந்தை மதிப் பில் 45 பில்லியன் அமெ ரிக்க டாலர் அளவிற்கு உயரும் என எதிர் பார்க்கப்ப டுகிறது.

    நமது நாட்டில் தொழில் நுட்ப ஜவுளித்துறை நேரடி யாக 12 லட்சம் நபர்களுக்கு, மறைமுகமாக 50 லட்சம் நபர்களுக்கும் வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது.

    இந்திய தொழில் கூட்ட மைப்பு மூலமாக வருகிற 17ம் தேதியன்று, கோவையில் உள்ள ஹோட்டல் லீமெரிடி யனில் தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை, மத்திய அரசின் ஜவுளித்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து தொழில் நுட்ப ஜவுளி கருத்தரங்கம் நடத்த உள்ளது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வல்லுனர்கள் தொழில் நுட்ப ஜவுளித் துறையில் உள்ள வாய்ப்புகள், வளர்ச்சி, புதிய முதலீடுகள், பன்னாட்டு சந்தை மற்றும் அதனுடைய போக்குகள் குறித்து கலந்து ரையாடல்கள் நடக்க உள்ளது.

    இதில் கலந்து கொள்வதற்கு முன்ப திவு செய்வதற்கான இணை யதள இணைப்பு (https://bit.ly/CIITechnicalTextiles) மேற்படி கருத்தரங்கில் ஜவுளி தொழில் முனை வோர்கள் கலந்து கொள்ள லாம். மேலும் விவரங்களுக்கு, மண்டல துணை இயக்குனர், அம்சவேணி, மண்டல துணை இயக்குனர் அலுவல கம், துணிநூல் துறை, சங்ககிரி மெயின்ரோடு குகை, சேலம் 636006, 0427 2913006 என்ற விலாசத்தில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தனது செய்திக் குறிப்பில் கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார். 

    • மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேர பயிற்சி பெற விண்ணப்பிக்க லாம்.
    • அலுவலக வேலை நாட்களில் விலையின்றி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட் டுள்ள அறிக்கையில்:-

    மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப்பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பி னர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி யில் சேரலாம்.

    இத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவோர் விண் ணப்பம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையத ளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை, துணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட உதவி இயக்குனர் அலுவலகங்க ளில் அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்றுக் கொள்ளலாம்.

    விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை யின் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து, உதவி இயக்குனர் அலுவலகம், கிருஷ்ணகிரி மீன்பண்ணை எதிரில், கே.ஆர்.பி., அணை அஞ்சல், கிருஷ்ணகிரி 635101 என்ற முகவரிக்கு வரும் 18ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்க ளுக்கு 04343 235745 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்க பட்டுள்ளது.

    • கிருஷ்ணகிரி அருகே இளம் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே கே.திப்பனபள்ளியில் உள்ள சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் திலகவதி (வயது24).

    சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர் இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் விரக்தி அடைந்த திலகவதி கடந்த மாதம் 21-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    இதனை கண்ட அவரது உறவினர்கள் திலகவதியை மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்து குருபரப் பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கர்நாடக பகுதி மக்கள் ஆண்டு தோறும் தமிழகத்திற்கு வந்து தான் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.
    • ஆண்டுக்கு ஒரு முறை தான் குழந்தைகளுக்காக இங்கு பட்டாசுகளை வாங்க வருகிறோம் எனவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் கடந்த மாதம் 7 ந்தேதி பட்டாசு விற்பனை கடை மற்றும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர், இதன் காரணமாக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் இந்த வருடம் பட்டாசு விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

    மேலும் கர்நாடகா மாநிலத்தில் பட்டாசு அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிகிறது. இதன் காரணமாக அருகேயுள்ள தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் விடுமுறை தினமான நேற்று மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து தேவையான பட்டாசுகளை வாங்கிச் சென்றனர்.

    இந்தாண்டு தமிழக அரசு 2 மணி நேரம் மட்டுமே தங்கள் வீடுகளில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளதால், தமிழக மக்கள் தற்போது பட்டாசுகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கர்நாடக பகுதி மக்கள் ஆண்டு தோறும் தமிழகத்திற்கு வந்து தான் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.

    குறிப்பாக கர்நாடகவில் விலை கூடுதலாக உள்ளதால் தொடர்ந்து தமிழகத்திற்கு படையெடுத்து வருகின்றனர். தவிர, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கடைகளில் மட்டுமில்லாமல் சாலைகளிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. இந்த ஆண்டு புதிய ரக பட்டாசுகளும் அதிகளவில் வந்துள்ளதால் அதனை சிறுவர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர், பட்டாசுகளை பொறுத்த வரை இந்த வருடம் விலை ஏற்றம் என்பது சற்று குறைவாகவே காணப்படுகின்றது என பட்டாசு வாங்க வந்தவர்கள் தெரிவித்தனர்.

    குறிப்பிட்ட கடைகளில் மட்டும் வாங்க வருவதால் அவர்கள் அதிகளவில் தள்ளுபடி கொடுக்கிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பெரும்பாலானோர் பட்டாசுகளை வாங்குவதற்கு கார்களில் வந்தனர். இதனால், கார்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால் தேசிய நெடுஞ்சாலையோரமும் சர்வீஸ் சாலையிலும் கார்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசலும் அதே போல் கடைகளிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை தான் குழந்தைகளுக்காக இங்கு பட்டாசுகளை வாங்க வருகிறோம் எனவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • கோவில் புதுப்பிக்கும் பணியின் போது இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது.
    • வீடுகளுக்கு தீ வைக்க முயன்ற சம்பவமும் நடந்தது.

    கிருஷ்ணகிரி, 

     கிருஷ்ணகிரி அடுத்த சோக்காடியில் இரு சமூகத்தினரிடையே நடந்த மோதல் சம்பத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை ஆதிதிராவிடர் நல ஆணைய இயக்குநர் நேரில் ஆய்வு செய்தார்.

    கிருஷ்ணகிரி அடுத்த சோக்காடி கிராமத்தில், மாரியம்மன் கோயில் புதுப்பிக்கும் பணியின் போது இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கற்கள் வீசி தாக்கியும், வீடுகளுக்கு தீ வைக்க முயன்ற சம்பவமும் நடந்தது. இதில் பலர் காயமடைந்தனர்.

    இந்நிலையில் சோக்கா டியில் இருதரப்பினரிடையே நடந்த மோதல் பகுதிகளை, மாநில ஆதிதிராவிடர் நல ஆணைய இயக்குனர் ரவிவர்மன், மாநில ஆதிதிராவிடர் நல ஆணைய ஆலோசகர் ராமசாமி ஆகியோர், மாவட்ட கலெக்டர் சரயு முன்னிலையில் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தும் ஆறுதல் கூறிய அவர்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்திலும் பங்கேற்றனர். இதில், மாவட்ட எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரமேஷ்குமார், ஏடிஎஸ்பி விவேகானந்தன், கிருஷ்ணகிரி டிஎஸ்பி தமிழரசி, தாசில்தார் விஜயகுமார், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

    • குழந்தை திருமணத்தை தடுக்கும் வழிமுறைகள் குறித்து எடுத்து ரைக்கப்பட்டது.
    • குழந்தைகள் நல அலுவலர் கஸ்தூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மதுவிலக்கு, சைபர் கிரைம், குழந்தை திருமணம் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் தலை வரும், முதன்மை நீதிப தியுமான சுமதிசாய் பிரியா தலைமை தாங்கி பேசியபோது ஆன்லைன் கடன், பண இரட்டிப்பு மோசடி, குறித்தும் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேசினார். தொடர்ந்து, மொபைல் ஆப் மூலம் பணத்தாசை காட்டி மோசம் செய்வது, கஞ்சா, போதை பழக்கங்களால் உடல்ந லத்துடன் குடும்பங்களும் சீரழிவது, குழந்தை திருமணத்தை தடுக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்தும் எடுத்து ரைக்கப்பட்டது.

    மாவட்ட குடும்ப நல நீதிபதி நாகராஜன், கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல் நிலைய கண்காணிப்பாளர் சரண்யா, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கஸ்தூரி ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு ழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான ஜெனிபர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு பள்ளிகளில் பணியாற்றும் என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், உள்பட, 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    • வடகிழக்கு பருவ மழை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஏரியில் விழுந்த ஒருவரின் உயிரை காப்பாற்றுவது போல நிகழ்த்தி காட்டினர்.

    சூளகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட துரை ஏரியில் இன்று தமிழ்நாடு தீயணைப்பு மீட்புத்துறை, வருவாய் துறை சார்பில் வடகிழக்கு பருவ மழை வருகை எதிரொலியாக பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஒசூர் தீயணைப்பு நிலைய அலுவலர் நாக விஜயன் தலைமை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக சூளகிரி தாசில்தார் சக்திவேல், வருவாய் அலுவலர் ரமேஷ், கிராம அலுவலர் அகிலன் மற்றும் பொதுமக்கள் முன்னிலை வகித்தனர். இதில் தீயணைப்பு மீட்புகுழு வினர் மிக தத்துருபமாக ஏரியில் விழுந்த ஒருவரின் உயிரை காப்பாற்றுவது போல நிகழ்த்தி காட்டினர்.

    கிணறு , ஏரி, குளம் பகுதிகளில் விழுந்த வர்களை பொதுவாக பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபடும் போது பிளாஸ்டிக் கேன்கள் , பிளாஸ்ட்டி பாட்டில்கள், காளி சிலிண்டர்களை இடுப்பில் கட்டி கொண்டு காப்பாற்ற முன்வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நிகழ்த்தி காட்டினர்.

    • ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • மருத்துவர்கள் நேற்று அவரை டிஸ்சார்ஜ் செய்து அனுப்பி வைத்தனர்.

    கிருஷ்ணகிரி,  

    மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரிந்த வடமாநில வாலிபருக்கு 93 நாள் சிகிச்சை அளித்து டாக்டர்கள் குணமாக்கினர். கிருஷ்ணகிரியில் மன நலம் பாதிக்கப்பட்ட நிலை யில் சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவர், தான் யார் என்ற விவரம் கூட தெரியாத அளவில் இருந்தார். அவருக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர்.பூவதி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.சந்திரசேகரன் ஆகியோர் தலைமையில் மன நல மருத்துவர்கள் பூங்கொடி, முனிவேல், சுவேதா மற்றும் செவிலியர் குமார் அடங்கிய குழுவினர் தொடர் சிகிச்சை அளித்தனர்.

    தொடர்ந்து, 80 நாட்கள் சிகிச்சையளித்தும் சுயநினை வின்றி இருந்த வாலிபருக்கு, 81வது நாளில் சுயநினைவு மெதுவாக திரும்பியது. அவர் தன் பெயரை கூறாமல், ஒரிசா மாநிலம் கதிகானியா என்னும் அவரது ஊர் பெயரை மட்டும் திரும்ப திரும்ப கூறியுள்ளார். இது குறித்து டாக்டர்கள் அனுப்பிய விவரங்களுடன் போலீசார், மனநலம் பாதிக்கப்பட்டவர் ஒரிசா மாநிலம், கதிகானியாவை சேர்ந்த அஜய்,(வயது18) என்பதை கண்டறிந்தனர்.

    இதையடுத்து அஜய்யை அழைத்து செல்ல அவரது உறவினர் பிஜய்குமார் என்பவர் வந்த நிலையில் அஜய்யின் ஆவணங்களை போலீசார் சரிபார்த்து அவருடன் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து 93 நாட்கள் சிகிச்சை பெற்று குணமடைந்த அஜய்யை, ஒரிசா மருத்துவமனையில் சிகிச்சையை தொடருமாறு கூறிய மருத்துவர்கள் நேற்று அவரை டிஸ்சார்ஜ் செய்து அனுப்பி வைத்தனர்.

    • கிருஷ்ணகிரி மேற்பார்வையாளர் ஆய்வு
    • 1,090 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் மேற்பார்வை யாளராக, மீன்வளம் மற்றும் மீனவர் நல ஆணையர் பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இவர் நேற்று, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024 குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட கலெக்டர் சரயு முன்னிலையில் நடந்த கூட்டத்தில், மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் பேசியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, கிருஷ்ணகிரி மாவட் டத்தில் வாக்காளர் பட்டியல் -2024 சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள் நடைபெற்று வருகின்றது.

    வருகிற 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தகுதியேற்பு நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்கள் இன்று(5ம் தேதி), வருகிற 18 மற்றும் 19ம் தேதிகளில் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 1,090 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

    முகாம் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் இலவச கட்டணமில்லா தொலை பேசி எண் 04343-1950 என்கிற எண்ணில் அழைத்து தங்களின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் பெறலாம். இந்த சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2024-ல் பெறப்பட்ட படிவங்கள் இறுதி செய்யப்பட்டு முறையான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்றார்.

    முன்னதாக பையூர், காவேரிப்பட்டணத்தில் 9 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமினை, வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் பாபு, ஓசூர் துணை ஆட்சியர் (பொ) பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டரின் நேர்முகஉதவியாளர் சுந்தரராஜன், தேர்தல் தாசில்தார் ஜெயசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பொட்டு, மயிலை, நாடு, செம்மறி என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிடாய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
    • 15 கிலோ எடை கொண்ட ஆடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையாகின.

    மத்தூர்:

    தீபாவளி பண்டிகையையொட்டி போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஜோராக நடைபெற்றது. அந்த ஆடுகளை வாங்குவதற்காக போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிற்றுகிழமை தோறும் கூடுவது வழக்கம். இச்சந்தையில் குண்டூசி முதல் தங்கம் வரை அனைத்தும் விற்கப்படுவதால், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் வாரச்சந்தைக்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.

    இந்நிலையில் வருகிற 12-ந்தேதி அன்று தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், தருமபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆர்வத்துடன் ஆடுகளை வாங்கி சென்றனர். இதன் காரணமாக ரூ. 1 கோடி வரை ஆடுகள் வியாபாரம் நடந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கிராமங்களில் பண்டிகைகளை எதிர்பார்த்து விவசாயிகள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் விற்பனை செய்யும்போது சராசரி விலையை விட சற்று கூடுதல் விலைக்கு விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    வெள்ளாடு மற்றும் செம்மறி ஆட்டுக் கிடாய்கள் வரத்து அதிகமாக இருந்தது. பொட்டு, மயிலை, நாடு, செம்மறி என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிடாய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 15 கிலோ எடை கொண்ட ஆடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையாகின.

    சுமார் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • மடக்கிபிடித்து அவரிடமிருந்த 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் மூர்த்தியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே ஜெ. காருப்பள்ளி பகுதியில் கர்நாடக மாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்யபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் கெலமங்கலம் போலிசார் ஜெ. காருப்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் கர்நாடக மாநில மதுபாட்டில்கள் பதுக்கிவைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்து கொண்டிருந்தார். உடனே அவரை மடக்கிபிடித்து அவரிடமிருந்த 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

    மேலும், பிடிப்பட்ட வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் உள்ள காமையூர் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி (வயது 24) என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மூர்த்தியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்
    • தொடர்ந்து 8 கி.மீ.தூரம் நடைபயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

     முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், சென்னையில் இன்று காலை சுகாதாரத் துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டத்தை, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து , கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு, ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையாளர் சினேகா ஆகியோர் முன்னிலையில் முன்னிலையில், இந்த திட்டத்தை, ஓசூர் அண்ணாமலை நகரில் உள்ள நகர்புற நல மையம் அருகில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், துணை மேயர் ஆனந்தய்யா, சுகாதாரத்துறை அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர தொடர்ந்து 8 கி.மீ.தூரம் நடைபயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

    ×