என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்குமுறை திருத்த பணிகள்
    X

    வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்குமுறை திருத்த பணிகள்

    • கிருஷ்ணகிரி மேற்பார்வையாளர் ஆய்வு
    • 1,090 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் மேற்பார்வை யாளராக, மீன்வளம் மற்றும் மீனவர் நல ஆணையர் பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இவர் நேற்று, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024 குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட கலெக்டர் சரயு முன்னிலையில் நடந்த கூட்டத்தில், மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் பேசியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, கிருஷ்ணகிரி மாவட் டத்தில் வாக்காளர் பட்டியல் -2024 சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள் நடைபெற்று வருகின்றது.

    வருகிற 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தகுதியேற்பு நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்கள் இன்று(5ம் தேதி), வருகிற 18 மற்றும் 19ம் தேதிகளில் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 1,090 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

    முகாம் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் இலவச கட்டணமில்லா தொலை பேசி எண் 04343-1950 என்கிற எண்ணில் அழைத்து தங்களின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் பெறலாம். இந்த சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2024-ல் பெறப்பட்ட படிவங்கள் இறுதி செய்யப்பட்டு முறையான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்றார்.

    முன்னதாக பையூர், காவேரிப்பட்டணத்தில் 9 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமினை, வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் பாபு, ஓசூர் துணை ஆட்சியர் (பொ) பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டரின் நேர்முகஉதவியாளர் சுந்தரராஜன், தேர்தல் தாசில்தார் ஜெயசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×