என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கர்நாடகா மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தியவர் கைது.
    • லாரியுடன் 17 டன் அரிசி பறிமுதல்

    ஓசூர் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக, ஓசூர் டி.எஸ்.பி. பாபு பிரசாந்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவரது மேற்பார்வையில் ஓசூர் ராயக்கோட்டை சாலை, அசோகா பில்லர் ரிங்ரோடு அருகே, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், விழுப்புரம் பகுதியிலிருந்து 17 டன் ரேஷன் லாரி, கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து அரிசி பாரத்துடன் லாரியை, பறிமுதல் செய்து, குடியாத்தத்தை சேர்ந்த டிரைவர் ராம்கி (40) என்பவரை கைது செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட அரிசி லோடு, கிருஷ்ணகிரியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • எண்ணற்ற ஆடை ரகங்கள் விற்ப னைக்காக வைக்க ப்பட்டுள்ளன.
    • ரூ.2 ஆயிரத்திற்கு மேல் ஆடைகள் வாங்கும் வாடிக்கை யாளர்களுக்கு நிச்சய பரிசுகள் வழங்கப்படுகின்றன.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரியில் கே.தியேட்டர் சாலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலசின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் இயங்கி வருகிறது. இங்கு தீபாவளி பண்டிகைைய முன்னிட்டு சிறப்பு விற்பனை நடந்து வருகிறது. இது குறித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் உரிமையாளர் எம்.பி.ரமேஷ், இயக்குனர்கள் விஷ்ணு, விஷால் ஆகியோர் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எண்ணற்ற ஆடை ரகங்கள் எங்களின் வெங்கடேஸ்வரா சில்க்சில் விற்ப னைக்காக வைக்க ப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள முன்னணி நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 6 லட்சத்திற்கும் மேலான புத்தம் புது கலெக்சன், வண்ண வண்ண உடைகள், உற்பத்தி விலைக்கே விற்பனை செய்து வருகிறோம். இந்த தீபாவளிக்கு ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் ஆடைகள் வாங்கும் வாடிக்கை யாளர்களுக்கு நிச்சய பரிசுகள் வழங்கப்படுகின்றன.

    அதே போல ரூ.5 ஆயி ரத்திற்கும் மேல் தாம்பூல தட்டு, ரூ.10 ஆயிரத்திற்கும் மேல் 3 லிட்டர் குக்கர், ரூ.15 ஆயிரத்திற்கும் மேல் 5லிட்டர் குக்கர், ரூ.25 ஆயிரத்திற்கும் மேல் ஸ்டீல் ட்ரம், ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் ஆடைகள் வாங்க கூடிய வாடிக்கை யாளர்களுக்கு கிரைண்டர் ஆகியவை வழங்கப்ப டுகின்றன. இதே போல எங்களின் வெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலசில் வைர நகைகள் மேளா வருகிற 10-ந் தேதி முதல், 20-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் வைர நகைகளுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறோம். அதே போல தங்கம் பவுனுக்கு ரூ.2 ஆயிரம் தள்ளுபடி வழங்குகிறோம். வெள்ளி நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை. ஏ.சி.பி.எல். வகைகளுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறோம். வைர நகைகள் வாங்க கூடிய வாடிக்கை யாளர்கள் அனைவருக்கும் வெள்ளி அன்பு பரிசு வழங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • மின் கட்டண உயர்வை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தின.
    • சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மனு கொடுக்கும் போராட்டம் மேற்கொள்ளப் பட்டது.

     ஓசூர் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் சங்கத்தின் (ஹோஸ்டியா) தலைவர் மூர்த்தி, நேற்று நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஓசூர் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் சங்கமும், தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்ட மைப்பும் இணைந்து, கடந்த ஆண்டு தமிழக அரசால் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தின.

    அதன் தொடர்ச்சியாக, இன்று 7-வது கட்ட போராட்டமாக, சட்டமன்ற த்தை கூட்டி மின் கட்டண உயர்வுக்கு எதிராக நமது சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மனு கொடுக்கும் போராட்டம் இன்று மேற்கொள்ளப் பட்டது. அதன் அடிப்படை யில், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் மற்றும் வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ.

    கே.பி. முனுசாமி ஆகியோ ரிடம் ஹோஸ்டியா சார்பில், நேரில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், மின்சார உயர்வு கட்டணத்தை அடுத்து 2 வருடங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும், நிலை கட்டணம் 150- லிருந்து பழைய கட்டணமான ரூபாய் 35-க்கு மாற்ற வேண்டும். பீக் அவர் கட்டணம் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை கள் வலியுறுத்த ப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    அப்போது, சங்க செயலாளர். ஸ்ரீதரன், பொருளாளர் வடிவேல் மற்றும் துணைத் தலை வர்கள், இணை செயலா ளர்கள், செயற்குழு உறுப்பி னர்கள். மற்றும் உறுப்பி னர்கள் உடன் இருந்தனர்.

    • கிருஷ்ணகிரி அருகே மின்னல் தாக்கி 9 ஆடுகள் பலி ஆனது.
    • பேரிடர் நிவாரண நிதி மூலம் நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை-

    கிருஷ்ணகிரி வட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள திம்மசந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். விவசாயி.

    இவர் சொந்தமான சுமார் 50 ஆடுகளை வளர்த்து வருகிறார். அந்த ஆடுகளை நேற்று மாலை 5 மணியளவில் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மேய்த்து கொண்டு இருந்தார். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.இதில் ஆடுகளின் மீது திடீரென மின்னல் தாக்கியதில் 9 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டது. மேலும் 2 ஆடுகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    இறந்த ஆடுகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை வந்த பின்பு பேரிடர் நிவாரண நிதி மூலம் நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என கிருஷ்ணகிரி வட்டாட்சியர் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கிருஷ்ணகிரியில் வெவ்வேறு இடங்களில் 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்சூர் அருகேயுள்ள பண்ண சீமளூர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜன் மகன் அன்பழகன் (28). இவர் ராயக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் அன்பழக னுக்கும் ஒரு இளம்பெண்ணக்கும் இடையே காதல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதற்கு அன்பழகன் குடு்ம்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் மனம் உடைந்த அன்பழன் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் ஒசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதே போன்று மத்தகிரி கூடப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அபிஷேக்(26) இவர் தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த பெண் விவகாரத்து பெற்று சென்று விட்டார். இதில் மன வருத்தத்தில் இதில் மன வருத்தத்தில் இருந்து வந்த அபிஷேக் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பொங்கல் பரிசு தொகுப்புடன் மண் பானை, அடுப்பு வழங்க கோரிக்கை
    • ஏரிகளின் மண் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மாநிலத் துணைத் தலைவர் வக்கீல் எஸ்.எம்.முருகேசன் தலைமையில், பொங்கல் பண்டிகைக்கு வழங்கும் பரிசுத் தொகுப்புடன் மண் பானை மற்றும் அடுப்பையும் சேர்த்து வழங்கக்கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குலாலர் சமூகத்தினர் ஒன்றிணைந்து பல கோரிக்கைகளை அரசாங்கத்திற்கு பலமுறை வலியுறுத்தியும் கண்டு கொள்ளாத நிலையில் உள்ளது. பொங்கல் திருநாளில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு அரிசி, கரும்பு உள்ளிட்ட வைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் பொங்கலுக்கு மிக முக்கியமானது மண்பானை. அதுதான் பாரம்பரியம். அலுமினியம், பித்தளை பாத்திரங்கள் வந்தபின் மண்பானை தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு, இத்தொழில் செய்ப வர்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்பட்டு மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது.

    எனவே இந்த ஆண்டிலிருந்து தமிழக முதல்-அமைச்சர் அரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றுடன் சேர்த்து, எங்கள் குலத் தொழில் பாதிக்கப்படாமல் இருக்க ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும், மண் பானை மற்றும் அடுப்பை வழங்க வேண்டும். மண்பானை மற்றும் மண் அடுப்பை வழங்குவதில் சிக்கல் உள்ளதாக கருதி னால், எந்த ரேஷன் கடைக்கு எவ்வளவு மண்பானை, அடுப்பு வேண்டும் என்று சொன்னால் நாங்களே முன்னின்று பாதுகாப்புடன் மண்பானையுடன் அடுப்பை யும் ஒப்படைப்போம்.

    அதே போல் ஏரிகளில் களி மண் எடுக்க எங்களுக்கு தொடர்ந்து இடையூறுகள் உள்ளன. அவற்றையும் களைந்து எந்த நிபந்தனையும் இன்றி குலாலர்கள், ஏரிகளின் மண் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிருஷ்ணகிரி அருகே மாமரங்களை வெட்டி அழித்த மர்ம நபர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
    • அதிகாரிகள் விசாரணை

    சின்னகுட்டை கிராமத்தை விவசாயிகள் கலெக்டரை சந்தித்து கொ டுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி அணைக்கு நிலம் கொடுத்தவர் விவசா யிகள் ஒரு தரப்பினர், அகரம் அருகே சின்ன குட்டையில மலை கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் அணைக்கு நிலம் கொடுத்த தற்காக, வழங்கப்பட்ட நிலத்தில் விவசாயிகள் மரக்கன்றுகள் வைத்து வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்து றையினர் என கூறி கொண்டு மர்ம நபர்கள் 3 பேர், மாந்தோட்டத்தில் இருந்த 30 மரங்களை வெட்டி அழித்துள்ளனர். ஏற்கனவே நாங்கள் விவசா யம் செய்யும் நிலத்திற்கு பட்டா வழங்காமல் காலதா மதம் செய்து வரும் நிலை யில், தற்போது எங்களது தோட்டத்தை அழித்து, எங்களை அங்கிருந்து வெளியேற்றிட திட்டமிட் டுள்ளனர்.

    எனவே, மாமரங்களை வெட்டி அழித்த மர்ம நபர்கள் 3 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • தென்பெண்ணை ஆற்றில் கழிவுகள் கலந்த தண்ணீர் வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • கால்நடைகள், பொது மக்களுக்கும் நோய் பரவும் அபாயம்

    தென்பெண்ணை ஆற்றில், கர்நாடகா பகுதி பெங்களூர் பெரும்நகர் பகுதிகளில் உள்ள தொழிற் சாலையில் இருந்து வெளி வரும் ரசாயன கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றத்துடன் கருமைநிறத்தில் நீர் வெளியேறி வருகிறது.

    ஒசூர் அருகே கெலவரப் பள்ளி அணையின் மதகு கள் சீரமைப்பு காரணமாக நீர் சேமிக்கப்படாமல் வரத்தாக உள்ளநீர் அப்ப டியே தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படு கிறது. சூளகிரி தாலுகாவில், பாத்தக்கோட்டா, ஆழியா ளம், கனுஞ்சூர் பகுதிகளில் தென்பண்ணை ஆற்று கரை யோம் தென் பண்ணை ஆற்றை நம்பி பல ஏக்கர் நிலப்பரப்பில் நெல், வாழை, புதினா ஆகிய வற்றை விவசாயிகள் சாகு படி செய்து வருகின்றனர்.

    சமீப நாட்களாக அதிகப் படியான கழிவுநீர் கலப்பால் தென்பெண்ணை ஆற்றுநீர் கருமை நிறத்தில் சகதி போல் வந்தாலும் விவசா யிகள் வேறு வழியின்றி அதனையே தங்களது விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சி வருவதால் நிலம் கருப்பாக காட்சியளிப்ப துடன் விளைச்சல் பெரும ளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஆற்றங்கரை யோர கிராம மக்களும், விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர். விளைநி லங்கள் பாதிக்கப்படுவது டன், கால்நடைகள், பொது மக்களுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

    • கிருஷ்ணகிரி அருகே தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதில் 140 பேர் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றியத்தில் 50 ஊராட்சிகள் இருக்கின் றன. இந்த ஊராட்சிகளில் பணி யாற்றும் தூய்மை பணியா ளர்கள் மற்றும் மேல்நிலை குடிநீர் தொட்டி டேங்க் ஆப்ரேட்டர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோருக்கு கடந்த 3 மாதம் சம்பளம் வழங்கபடவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் மேல்நிலை நீர்தேக்க தொட்டி டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோருக்கு 3 மாத சம்பளம் வழங்கா ததை கண்டித்து ஒட்ஷா கூட்டமைப்பு சங்கம் மாநில தலைவர் லட்சுமனன் தலைமையில் தளி ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் சுமார் 140 பேர் கலந்து கொண்டனர்.

    இதனால அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது,

    • தேன்கனிக்கோட்டை அருகே டிப்பர் லாரி மீது கார் மோதி பெண் உயிரிழந்தார். கர்நாடகாவில் இருந்து ஒகேனேக்கல் வந்தபோது விபத்து
    • கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்த 5 பேர் ஒரு காரில் ஒகேனேக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்த 5 பேர் ஒரு காரில் ஒகே னேக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அம்போது தேன்கனி கோட்டை மர கட்டா கிரா மத்தின் அருகே ஒர் வளைவில் திரும்பும்போது எதிரே வந்த டிப்பர் லாரி மீது நிலை தடுமாறிய கார் மோதியுள்ளது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இதில் ஒரு பெண் சம்ப இடத்திலே யே உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தேன்கனிக் கோட்டை போலிசார் விரைந்து வந்து பெண் உடலை கைபற்றி தேன்கனிக் கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு தேன்கனிக் கோட்டை அரசு மருத்துவம னையில் சிகிச்சை அளித்து மேற்கி ச்சைக்காக பெங்களூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணை யில் இறந்தவர் வைசாலி (54) காயம் அடைந்தவர்கள் இஷான் (32) தினேஷ் (27) பவினா (27) ஹேமந் குமார்( 67) ஆகிய 4 பேர் என தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தேன்கனிக்கோட்டை அருகே சுற்றித் திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்.
    • வனப்பணியாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம். தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட, தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தண்டரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட, இஸ்லாம்பூர் கிராமம் அருகில், சனத்குமார் ஓடைப் பகுதியில் கடந்த மாதம் 28-ந் தேதி அப்பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த ஆடுகளை சிறுத்தை ஒன்று தாக்கி, ஒரு ஆட்டினை இழுத்து சென்றதாக தகவல் கிடைக்கப்பெற்றது.

    இந்த தகவலின் பேரில், தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் விஜயன், தலைமையிலான வனப்பணியாளர்கள் அடங்கிய குழுவினர், மேற்படி இடத்தை தணிக்கை செய்து, சிறுத்தை நடமாட்டம் இருப்பதற்கான தடயங்கள் கண்டறியப்பட்டது.

    சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க, தானியங்கி கேமராக்கள் பொருத்தப் பட்டு, வனச்சரக அலுவலர் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் மற்றும் வன கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் பிரகாஷ், ஆகியோர் இரவு பகலாக தொடர் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    சிறுத்தை நடமாட்டம் உள்ள தேன்கனிக்கோட்டை காப்புக்காட்டிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியைச் சுற்றி சாமிபுரம், அடவிசாமிபுரம், அடைகலபுரம், தண்டரை, இஸ்லாம்பூர், பன்டேஸ்வரம், பேலூர், எண்ணேஸ்வரம். பெண்ணங்கூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிரா மங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் உள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பா கவும், எச்சரிக்கையாகவும் இருக்கும்படி வனப்பணி யாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    கடந்த 4-ந் ேததி சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட மேற்படி பகுதியில் ஓசூர் வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலர் தலைமையில் தணிக்கை மேற்கொண்டு, டிரோன், தொலைநோக்கி கள் மற்றும் கேமராக்கள் கொண்டு மேற்படி பகுதியை ஆய்வு செய்து, வன கால்நடை உதவி மருத்துவர் ஆலோ சனைப்படி கூண்டுகள் வைக்கப்பட்டு உள்ளது.

    • தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
    • ஏராளமான பெண் கள் பூசணி மற்றும் தேங்கா யில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில், நேற்று தேய்பிறை அஷ்டமி யையொட்டி சிறப்பு வழிபா டுகள் நடந்தன.

    காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், அஸ்ட திக்பதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹா லட்சுமி ஹோமம், காலபை ரவ மஹா ஹோமம், பூர்ணா ஹூதி, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரா தனை, தீர்த்தப்பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டன.

    தங்கக் கவச அலங்கா ரத்தில் காலபைரவர் அருள் பாலித் தார். பகல் 12 மணிக்கு கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன.இதில், ஏராளமான பெண் கள் பூசணி மற்றும் தேங்கா யில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர். கிருஷ் ணகிரி மாவட்டத்தின் பல் வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை, 165 கிராமங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். அனைவருக்கும் அன்னதா னம் வழங்கப்பட்டன.

    இதே போல், கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் கால பைரவர் கோவில் மற்றும் சூரன் குட்டை தஷ்ண கால பைரவர் கோவிலில், தேய்பி றை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர் கள் பங்கேற்றனர்.

    ×