என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் வெவ்வேறு இடங்களில் 2 வாலிபர்கள் தற்கொலை
- கிருஷ்ணகிரியில் வெவ்வேறு இடங்களில் 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்சூர் அருகேயுள்ள பண்ண சீமளூர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜன் மகன் அன்பழகன் (28). இவர் ராயக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் அன்பழக னுக்கும் ஒரு இளம்பெண்ணக்கும் இடையே காதல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதற்கு அன்பழகன் குடு்ம்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் மனம் உடைந்த அன்பழன் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் ஒசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போன்று மத்தகிரி கூடப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அபிஷேக்(26) இவர் தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த பெண் விவகாரத்து பெற்று சென்று விட்டார். இதில் மன வருத்தத்தில் இதில் மன வருத்தத்தில் இருந்து வந்த அபிஷேக் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






