என் மலர்
உள்ளூர் செய்திகள்

தென்பெண்ணை ஆற்றில் கழிவுகள் கலந்த தண்ணீர்
- தென்பெண்ணை ஆற்றில் கழிவுகள் கலந்த தண்ணீர் வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- கால்நடைகள், பொது மக்களுக்கும் நோய் பரவும் அபாயம்
தென்பெண்ணை ஆற்றில், கர்நாடகா பகுதி பெங்களூர் பெரும்நகர் பகுதிகளில் உள்ள தொழிற் சாலையில் இருந்து வெளி வரும் ரசாயன கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றத்துடன் கருமைநிறத்தில் நீர் வெளியேறி வருகிறது.
ஒசூர் அருகே கெலவரப் பள்ளி அணையின் மதகு கள் சீரமைப்பு காரணமாக நீர் சேமிக்கப்படாமல் வரத்தாக உள்ளநீர் அப்ப டியே தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படு கிறது. சூளகிரி தாலுகாவில், பாத்தக்கோட்டா, ஆழியா ளம், கனுஞ்சூர் பகுதிகளில் தென்பண்ணை ஆற்று கரை யோம் தென் பண்ணை ஆற்றை நம்பி பல ஏக்கர் நிலப்பரப்பில் நெல், வாழை, புதினா ஆகிய வற்றை விவசாயிகள் சாகு படி செய்து வருகின்றனர்.
சமீப நாட்களாக அதிகப் படியான கழிவுநீர் கலப்பால் தென்பெண்ணை ஆற்றுநீர் கருமை நிறத்தில் சகதி போல் வந்தாலும் விவசா யிகள் வேறு வழியின்றி அதனையே தங்களது விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சி வருவதால் நிலம் கருப்பாக காட்சியளிப்ப துடன் விளைச்சல் பெரும ளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆற்றங்கரை யோர கிராம மக்களும், விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர். விளைநி லங்கள் பாதிக்கப்படுவது டன், கால்நடைகள், பொது மக்களுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.






