என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானை, அடுப்பு வழங்க கோரிக்கை
- பொங்கல் பரிசு தொகுப்புடன் மண் பானை, அடுப்பு வழங்க கோரிக்கை
- ஏரிகளின் மண் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மாநிலத் துணைத் தலைவர் வக்கீல் எஸ்.எம்.முருகேசன் தலைமையில், பொங்கல் பண்டிகைக்கு வழங்கும் பரிசுத் தொகுப்புடன் மண் பானை மற்றும் அடுப்பையும் சேர்த்து வழங்கக்கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குலாலர் சமூகத்தினர் ஒன்றிணைந்து பல கோரிக்கைகளை அரசாங்கத்திற்கு பலமுறை வலியுறுத்தியும் கண்டு கொள்ளாத நிலையில் உள்ளது. பொங்கல் திருநாளில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு அரிசி, கரும்பு உள்ளிட்ட வைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் பொங்கலுக்கு மிக முக்கியமானது மண்பானை. அதுதான் பாரம்பரியம். அலுமினியம், பித்தளை பாத்திரங்கள் வந்தபின் மண்பானை தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு, இத்தொழில் செய்ப வர்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்பட்டு மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது.
எனவே இந்த ஆண்டிலிருந்து தமிழக முதல்-அமைச்சர் அரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றுடன் சேர்த்து, எங்கள் குலத் தொழில் பாதிக்கப்படாமல் இருக்க ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும், மண் பானை மற்றும் அடுப்பை வழங்க வேண்டும். மண்பானை மற்றும் மண் அடுப்பை வழங்குவதில் சிக்கல் உள்ளதாக கருதி னால், எந்த ரேஷன் கடைக்கு எவ்வளவு மண்பானை, அடுப்பு வேண்டும் என்று சொன்னால் நாங்களே முன்னின்று பாதுகாப்புடன் மண்பானையுடன் அடுப்பை யும் ஒப்படைப்போம்.
அதே போல் ஏரிகளில் களி மண் எடுக்க எங்களுக்கு தொடர்ந்து இடையூறுகள் உள்ளன. அவற்றையும் களைந்து எந்த நிபந்தனையும் இன்றி குலாலர்கள், ஏரிகளின் மண் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






