என் மலர்
கிருஷ்ணகிரி
- காலை 6 மணிக்கு துவங்கிய வார சந்தையில் தற்போது விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- வாரச்சந்தை நடைபெறும் இடம் முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் வருகையால் களை கட்டியுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகேயுள்ள குந்தாரப்பள்ளி புகழ்பெற்ற வாரச்சந்தையில் வெள்ளிக்கிழமைதோறும் ஆடு, மாடு, கோழி விற்பனை நடைபெற்று வருகிறது.
தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம், திருச்சி மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக அழைத்து வந்துள்ளனர்.
செம்மறியாடு, வெள்ளாடு, மறிக்கை ஆடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு துவங்கிய வார சந்தையில் தற்போது விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை, வேலூர், மதுரை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு, பொள்ளாச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகா, பெங்களூரு, ஆந்திரா போன்ற பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆடுகளை வாங்க குவிந்துள்ளனர்.
ஒரு கிடா ஆடு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும் பெண் ஆடுகள் அதிகபட்சமாக ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆடுகள் வாங்கிச்செல்லும் வியாபாரிகள் கூடுதல் விலை விற்பதால் ஆட்டு இறைச்சியின் விலை அதிகரிக்கும் என்றும் வழக்கமாக ஒரு கிலோ 750 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில் தற்போது பண்டிகை காலங்களில் ரூ. 900க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.
சராசரியாக தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களும் வியாபாரிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்குவதால் விற்பனை அதிகரித்துள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் சுமார் ரூ. 7 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். வாரச்சந்தை நடைபெறும் இடம் முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் வருகையால் அந்த பகுதியே களை கட்டியுள்ளது.
- கிருஷ்ணகிரி அருகே விபத்துக்குள்ளான காரில் 347 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
- தப்பியோடிய டிரைவருக்கு வலைவீச்சு-
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சொகுசு கார் ஒன்று நேற்று முன்தினம் அதிகாலை வந்து கொண்டிருந்தது. அந்த கார் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகில் பையனப்பள்ளி பக்கமாக வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டைஇழந்து சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதியது.
இதையடுத்து கார் டிரைவர் காரை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இந்த நிலையில் கார் விபத்துக்குள்ளான தகவல் அறிந்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் அங்கு சென்றனர். அந்த நேரம் அவர்கள் காரை சோதனை செய்த போது காருக்குள் 347 கிலோ தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்டவை இருந்தது தெரிய வந்தது- அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 91 ஆயிரத்து 700 ஆகும்.
அதையும் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் பெங்களூருவில் இருந்து அந்த காரில் குட்கா கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அந்த காரை விட்டு சென்ற மர்ம நபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தேன்கனிக்கோட்டை அருகே அரசு பஸ்களுக்கு கிராம மக்கள் பூஜை நடத்தினர்.
- அரசு பஸ்களின் சேவையை பாராட்டி ஆண்டு தோறும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சாலிவாரம் கிராமத்திற்கு தமிழக அரசு 41 ஆகிய எண் கொண்ட டவுன் பஸ் மற்றும் சாலிவாரம் முதல் பெங்களூர் செல்லும் 2 கர்நாடக அரசு பஸ்கள் இயங்கி வருகிறது. இந்த பஸ்களின் பொதுமக்களின் சேவையை கருதி ஆண்டுதோறும் கிராம மக்கள் சார்பாக 3 பஸ்களுக்கும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நேற்று பூஜை நடத்தினர்.
முன்னதாக 3 பஸ்களையும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து, வாழை மரங்கள், மாவிலை தோரணங்கள் கட்டி மலர்களால் சிறப்பாக அலங்கரிப்பட்டது. சோமேஷ்வரர் கோயில் முன்பாக பஸ்களை நிறுத்தி மேளதாளங்கள் முழங்க வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஒலிக்க சிறப்பு பூஜைகள் செய்யபட்டது.
இதில் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பொது மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில்;-தங்கள் கிராமத்திற்கு வரும் 3 அரசு பஸ்களின் சேவையை பாராட்டி ஆண்டு தோறும் கிராம மக்கள் சார்பாக ஆயுதபூஜை விழா நடந்தி வருகின்றோம் என தெரித்தனர். இவ்விழாவில் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- ஒசூரில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் வாரச்சந்தையை மாற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- பாரம்பரிய சந்தை அழிந்து விடும் எனவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நகரின் மையப்பகுதியில், ஆர்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில், பல ஆண்டுகளாக வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் வாரச்சந்தை இயங்கி வருகிறது. இந்த சந்தையில், காய்கறிகள், தின்பண்டங்கள், மசாலா பொருட்கள், விவசாய கருவிகள், இரும்பு பொருட்கள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சந்தையின் மூலம் 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
ஒவ்வொரு புதன் கிழமையும் ஏராள மானோர் இந்த சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை மலிவு விலையில் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில், ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எம்ஜிஆர் மார்க்கெட்டில் உள்ள பழமையான கடைகள் இடிக்கப்பட்டு தற்போது புதிதாக கடைகள் கட்டப்பட்டு வருகிறது. இதனால், புதன்கிழமை தோறும் நடக்கும் சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக வேறு இடத்தையும் மாநகராட்சி நிர்வாகம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு புதன்கிழமை சந்தை வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் பாரம்பரியமிக்க இந்த சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற கூடாது. அதே இடத்தில் சந்தையை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்க வேண்டும் என சந்தை வியாபாரிகள் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இல்லை யென்றால் பாரம்பரிய சந்தை அழிந்து விடும் எனவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
இதே போல் ஓசூர் அருகே பாகலூர், கெலமங்கலம், சூளகிரி, மற்றும் குந்தாரப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாரத்தில் வெவ்வேறு நாட்களில், இது போன்ற பாரம்பரியமான வார சந்தைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- குழந்தைக்கு நேற்று இரவு உடல் நிலை சரியில்லாமல் போனதாக தெரிகிறது.
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கும்மாளத்தை அடுத்த முத்துநாயக்கன்போடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ்குமார்.
இவரது மனைவி மல்லிகா (வயது25). இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் மல்லிகா மீண்டும் கர்ப்பமானார். இவர் கடந்த சில நாட்களுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு நேற்று இரவு உடல் நிலை சரியில்லாமல் போனதாக தெரிகிறது. உடனே குழந்தையை ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து குழந்தையை பெற்றோர்கள் அடக்கம் செய்து விட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பேரிகை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் நன்றாக பிறந்த குழந்தை திடீரென்று இறந்ததால், குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பேரிகை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சப்பாடி கிராமத்தில் இதேபோன்று ஒரு குழந்தை மர்மமான முறையில் இறந்ததாக கூறி உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் முத்துநாயக்கன்போடூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கர்நாடகா மற்றும் ஓசூர் பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுள்ளது.
ஓசூர்:
கர்நாடக மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மற்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பரவலாக நாள்தோறும் மழை பெய்து வருகின்றது.
கர்நாடகா மற்றும் ஓசூர் பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு, வினாடிக்கு 2,270 கனஅடி நீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 2,240 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் இன்று நீர்வரத்து கிடுகிடு என அதிகரித்து வினாடிக்கு 4,513 கன அடி நீர் வந்தது. வினாடிக்கு 4,480 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதையடுத்து, 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுள்ளது.
இதனிடையே, அணை நீரில் ரசாயன கழிவுகள் கலந்து நுரை பொங்கி துர்நாற்றத்துடன் குவியல் குவியலாக தென்பெண்ணை ஆற்றில் செல்வது தொடர்ந்தவாறு உள்ளது. இதனால் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அதிருப்தியும் கவலையும் அடைந்துள்ளனர்.
- கிருஷ்ணகிரி அருகே தனியார் ஊழியரை தாக்கிய 2 பேர் கைது
- பிரவீனை சந்தித்து கொடுத்த கடனை திருப்பி கேட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பையனபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது24). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவரிடம் ரூ.6 ஆயிரம் கடனாக பெற்றார். ஆனால், இதுவரை பிரவீன் கடனை திருப்பிதராமல் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அரவிந்தும், அவரது நண்பர் தருண் ஆகிய 2 பேரும் சேர்ந்து சம்பவத்தன்று பிரவீனை சந்தித்து கொடுத்த கடனை திருப்பி கேட்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில், பிரவீனை, அரவிந்தும், அருணும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பிரவீன் காயமடைந்தார். இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அரவிந்த், அருண் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
- ஓசூர் அருகே அரசு டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- பஸ் நிற்காமல் சென்றதால் சம்பவம் -
ஓசூர் அருகே பாத்தா கோட்டாவிலிருந்து ஓசூர் நோக்கி, நேற்று மாலை டவுன் பஸ் ஒன்று வந்தது. இதனை, கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த டிரைவர் தங்கராஜ் (59) ஓட்டிச்சென்றார். கண்டக்டராக ஆசைத்தம்பி என்பவர் பணியில் இருந்தார். பஸ் செல்லும் வழியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே நின்ற அந்த பஸ், ஒரு பயணியை இறக்கிவிட்டு மீண்டும் புறப்பட தயாரானது.
அப்போது ஒரு வாலிபர் ஓடி வந்து பஸ்சில் ஏற முயன்றதாகவும், ஆனால் பஸ் நிற்காமல் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், கையில் இருந்த இளநீரை எடுத்து பஸ் மீது வீசினாராம். இதில் பஸ்சின் பக்கவாட்டில் லேசாக சேதம் அடைந்தது. மேலும் இளநீர் கடையில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து டிரைவர் தலைமீது வீசினார். இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார், அங்கு சென்று டிரைவரை தாக்கிய வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், அவர் ஆர்.கே. ஹட்கோ பகுதியை சேர்ந்த ஆசம் (28) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
- கர்நாடகா மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தியவர் கைது.
- லாரியுடன் 17 டன் அரிசி பறிமுதல்
ஓசூர் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக, ஓசூர் டி.எஸ்.பி. பாபு பிரசாந்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது மேற்பார்வையில் ஓசூர் ராயக்கோட்டை சாலை, அசோகா பில்லர் ரிங்ரோடு அருகே, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், விழுப்புரம் பகுதியிலிருந்து 17 டன் ரேஷன் லாரி, கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து அரிசி பாரத்துடன் லாரியை, பறிமுதல் செய்து, குடியாத்தத்தை சேர்ந்த டிரைவர் ராம்கி (40) என்பவரை கைது செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட அரிசி லோடு, கிருஷ்ணகிரியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- எண்ணற்ற ஆடை ரகங்கள் விற்ப னைக்காக வைக்க ப்பட்டுள்ளன.
- ரூ.2 ஆயிரத்திற்கு மேல் ஆடைகள் வாங்கும் வாடிக்கை யாளர்களுக்கு நிச்சய பரிசுகள் வழங்கப்படுகின்றன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் கே.தியேட்டர் சாலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலசின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் இயங்கி வருகிறது. இங்கு தீபாவளி பண்டிகைைய முன்னிட்டு சிறப்பு விற்பனை நடந்து வருகிறது. இது குறித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் உரிமையாளர் எம்.பி.ரமேஷ், இயக்குனர்கள் விஷ்ணு, விஷால் ஆகியோர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எண்ணற்ற ஆடை ரகங்கள் எங்களின் வெங்கடேஸ்வரா சில்க்சில் விற்ப னைக்காக வைக்க ப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள முன்னணி நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 6 லட்சத்திற்கும் மேலான புத்தம் புது கலெக்சன், வண்ண வண்ண உடைகள், உற்பத்தி விலைக்கே விற்பனை செய்து வருகிறோம். இந்த தீபாவளிக்கு ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் ஆடைகள் வாங்கும் வாடிக்கை யாளர்களுக்கு நிச்சய பரிசுகள் வழங்கப்படுகின்றன.
அதே போல ரூ.5 ஆயி ரத்திற்கும் மேல் தாம்பூல தட்டு, ரூ.10 ஆயிரத்திற்கும் மேல் 3 லிட்டர் குக்கர், ரூ.15 ஆயிரத்திற்கும் மேல் 5லிட்டர் குக்கர், ரூ.25 ஆயிரத்திற்கும் மேல் ஸ்டீல் ட்ரம், ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் ஆடைகள் வாங்க கூடிய வாடிக்கை யாளர்களுக்கு கிரைண்டர் ஆகியவை வழங்கப்ப டுகின்றன. இதே போல எங்களின் வெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலசில் வைர நகைகள் மேளா வருகிற 10-ந் தேதி முதல், 20-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் வைர நகைகளுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறோம். அதே போல தங்கம் பவுனுக்கு ரூ.2 ஆயிரம் தள்ளுபடி வழங்குகிறோம். வெள்ளி நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை. ஏ.சி.பி.எல். வகைகளுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறோம். வைர நகைகள் வாங்க கூடிய வாடிக்கை யாளர்கள் அனைவருக்கும் வெள்ளி அன்பு பரிசு வழங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
- மின் கட்டண உயர்வை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தின.
- சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மனு கொடுக்கும் போராட்டம் மேற்கொள்ளப் பட்டது.
ஓசூர் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் சங்கத்தின் (ஹோஸ்டியா) தலைவர் மூர்த்தி, நேற்று நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓசூர் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் சங்கமும், தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்ட மைப்பும் இணைந்து, கடந்த ஆண்டு தமிழக அரசால் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தின.
அதன் தொடர்ச்சியாக, இன்று 7-வது கட்ட போராட்டமாக, சட்டமன்ற த்தை கூட்டி மின் கட்டண உயர்வுக்கு எதிராக நமது சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மனு கொடுக்கும் போராட்டம் இன்று மேற்கொள்ளப் பட்டது. அதன் அடிப்படை யில், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் மற்றும் வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ.
கே.பி. முனுசாமி ஆகியோ ரிடம் ஹோஸ்டியா சார்பில், நேரில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், மின்சார உயர்வு கட்டணத்தை அடுத்து 2 வருடங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும், நிலை கட்டணம் 150- லிருந்து பழைய கட்டணமான ரூபாய் 35-க்கு மாற்ற வேண்டும். பீக் அவர் கட்டணம் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை கள் வலியுறுத்த ப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
அப்போது, சங்க செயலாளர். ஸ்ரீதரன், பொருளாளர் வடிவேல் மற்றும் துணைத் தலை வர்கள், இணை செயலா ளர்கள், செயற்குழு உறுப்பி னர்கள். மற்றும் உறுப்பி னர்கள் உடன் இருந்தனர்.
- கிருஷ்ணகிரி அருகே மின்னல் தாக்கி 9 ஆடுகள் பலி ஆனது.
- பேரிடர் நிவாரண நிதி மூலம் நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை-
கிருஷ்ணகிரி வட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள திம்மசந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். விவசாயி.
இவர் சொந்தமான சுமார் 50 ஆடுகளை வளர்த்து வருகிறார். அந்த ஆடுகளை நேற்று மாலை 5 மணியளவில் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மேய்த்து கொண்டு இருந்தார். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.இதில் ஆடுகளின் மீது திடீரென மின்னல் தாக்கியதில் 9 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டது. மேலும் 2 ஆடுகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இறந்த ஆடுகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை வந்த பின்பு பேரிடர் நிவாரண நிதி மூலம் நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என கிருஷ்ணகிரி வட்டாட்சியர் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






