search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
    X

    பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிருஷ்ணகிரியில் பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்ப்படுகிறது.
    • 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற கல்வித்தகுதியுடைய அனைவரும் விண்ணப்பிக்கலாம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-24ம் ஆண்டிற்கான 23-வது அஞ்சல்வழி மற்றும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப் பங்கள் இணையதள மூலம் மட்டுமே வரவேற்கப் படுகிறது. இதுகுறித்து மண்டல இணைப்பதிவாளர் ஏகாம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தாவது:-

    தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் பர்கூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-24-ம் ஆண்டு 23-வது அஞ்சல்வழி மற்றும்பகுதிநேர(மாறுதலுக்குட்பட்டது) கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி (புதிய பாடத்திட்டத்தின்படி) விரைவில் துவங்கப்ப டவுள்ளது.

    இதற்கான விண்ணப்–பங்கள் www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் மட்டுமே பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ.100-ஐ இணையவழியில் செலுத்தி 10.11.2023 முதல் விண்ணப்பிக்கலாம்.

    10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற கல்வித்தகுதியுடைய அனைவரும் விண்ணப்பிக் கலாம். மற்ற விவரங்கள் அனைத்தும் மேற்படி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் விவரங்களுக்கு பர்கூர் கூட்டுறவு மேலாண்மை நிலையம்( 04343-265652) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டு றவு ஒன்றியம் ஆகியவற்றில் தொடர்ந்து கொள்ளலாம்.

    Next Story
    ×