என் மலர்
கிருஷ்ணகிரி
- கோபால் எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஆருப்பள்ளியை சேர்ந்தவர் கோபால் (45). கூலித்தொழிலாளி.
இந்த நிலையில் நேற்று சூளகிரி-பேரிகை சாலையில் உள்ள செஞ்சகவுன் ஏரி அருகே தூக்கில் தொங்கிய நிலையில் கோபால் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த பேரிகை போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தியதில் சூளகிரி அருகே ஏனு சோனையை சேர்ந்த சதீஷ் என்பவர் அந்த ஏரியில் மீன் பிடிக்க குத்தகை எடுத்திருந்த நிலையில் கோபால் அங்கு மீன் பிடித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சதீஷ் ஆத்திரமடைந்து கோபாலை தாக்கியுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கோபால் அங்கு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
கோபால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தாக்கப்பட்டு அவரை சடலத்தை தூக்கில் தொங்கவிட்டனரா? என்பது குறித்து சதீசிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கோபால் எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நெல், தக்காளி, முட்டைகோஸ் ஆகிய பயிர்கள் பல ஏக்கர்களில் விவசாய நிலங்கள் உள்ளன.
- வனத்துறையினர் உடனடியாக இப்பகுதியில் மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுக்கா கெலமங்கலம் அருகே ஜக்கேரி ஊராட்சி ஒன்னு குறுக்கை கிராமத்தில் உள்ள ஏரியில் நேற்று முன் இரவு 20 யானைகள் முகாமிட்டுள்ளன ஏரிகரையோரம் உள்ள விளைநிலங்களில் காட்டு யானைகள் புகுந்து தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இப்பகுதியில் நெல், தக்காளி, முட்டைகோஸ் ஆகிய பயிர்கள் பல ஏக்கர்களில் விவசாய நிலங்கள் உள்ளன.
அய்யூர் வனப்பகுதியில் இருந்து கிராம பகுதிகளுக்கு உணவு, தண்ணீர் தேடி வரும் வனவிலங்குகள் விளைநிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்துவது வழக்கமாக நடந்து வருகிறது.
அதிலும் தற்போது கடந்த ஒரு ஆண்டுக்குமேலாக சரிவர மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. வனவிலங்குகளுக்கு உணவு, தண்ணீர் கிடைப்பதில்லை. இவற்றை தேடி தோட்டபகுதிக்கு வருகின்றன. ஏரிகளில் தண்ணீர இல்லாததால் அருகில் உள்ள வயல்கள், தோப்புகளுக்கு படையெடுக்கின்றன. அங்கு பம்புசெட் தொட்டிகளில் இருக்கும் நீரை குடித்துவிட்டு பயிர்களை நாசம் செய்து செய்கின்றன.
இதில் சிவக்குமார் என்பவரின் 2ஏக்கர் நெற்பயிர், கோவிந்தப்பாவின் 1ஏக்கர் நெற்பயிர், பாப்பண்ணா என்பவரின் 1 ஏக்கர் முட்டைகோஸ் ஆகியவற்றை காலில் மிதித்தும் தின்றும் நாசம் செய்து சென்றுள்ளன.
இதுகுறித்து விவசாயி சிவகுமார் கூறுகையில், "ஏற்கனவே வறட்சியால் பெரும் இழப்புகளுக்கு ஆளாகி உள்ள நிலையில் வனவிலங்குகளாலும் தொடர்ந்து இழப்புகள் ஏற்படுவது வேதனையாக உள்ளது. வனத்துறையினர் உடனடியாக இப்பகுதியில் மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிவாரணம் வழங்கினால் மட்டுமே மீண்டும் விவசாயத்தை தொடர முடியும் என கண்ணீர் மல்க வேதனையுடன் தெரிவித்தார்.
வனத்துறை அதிகாரிகள் யானைகள் நாசம் செய்த பயிர்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கடையில் மேற்கூரை உடைக்கப் பட்டிருந்தது.
- மடிக்கணினி, ஒரு செல்போன் ஆகிவை திருட்டு போய் இருந்தது.
மத்தூர்,
போச்சம்பள்ளி தாலுகா வடமலம்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 47). இவர் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 10-ந் தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். 11-ந் தேதி காலை கடைக்கு சென்று பார்த்த போது அங்கு கடை யில் மேற்கூரை உடைக்கப் பட்டிருந்தது.
மேலும் கடையில் வைத்தி ருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணம், ஒரு மடிக்கணினி, ஒரு செல்போன் ஆகிவை திருட்டு போய் இருந்தது.
இது குறித்து மாதேஷ் போச்சம்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி னார்கள்.
அதே போல கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். இது தொடர்பாக போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சிகிச்சை பலனின்றி 11-ந் தேதி மாலை காளியப்பன் இறந்தார்.
- பலத்த காயம் அடைந்த திருப்பதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கிருஷ்ணகிரி,
மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 6 பேர் பலியானார்கள்.தேன்கனிக்கோட்டை தாலுகா தொட்டபேளூரை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 25). தனியார் நிறுவன ஊழியர். இவர் மோட்டார் சைக்கிளில் கடந்த 10-ந் தேதி இரவு கெலமங்கலம் - தேன்கனிக்கோட்டை சாலையில் கெலமங்கலம் ராஜலட்சுமி தியேட்டர் பக்ககாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் படுகாயம் அடைந்த காளியப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 11-ந் தேதி மாலை காளியப்பன் இறந்தார். இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்தங்கரை தாலுகா அத்திபாடியை சேரந்தவர் தேவன் (வயது 53). மருந்து கடை உரிமையாளர். கடந்த 11-ந் தேதி இரவு இவர் மோட்டார் சைக்கிளில் சிங்காரபேட்டை - ஊத்தங்கரை சாலையில் மிட்டப்பள்ளி பக்கமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக நடந்து சென்ற முபாரக் (44) என்பவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த தேவன் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்ரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவன் இறந்தார். முபாரக் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சிங்கரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் கணேசபுரம் அருகே உள்ள வகுரம்பட்டியை சேர்நதவர் ஜூலியட் பிரேலதா ரகு நாதன் (வயது 56). அரசு பள்ளி ஆசிரியை. இவரும் கணவர் ரகுநாதனும் (54) காரில் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் வந்த கார் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மார்கண்டேய நதி பாலம் அருகில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆசிரியை ஜூலியட் படு காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். ரகுநாதன் படுகாயத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத் துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறிதது குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறாகள்.
சூளகிரி தாலுகா காமன் தொட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (42). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 11-ந் தேதி கிருஷ்ணகிரி - ஓசூர் சாலையில் காமன் தொட்டி பக்கமாக சாலை யை கடக்க முயன்றார்.
அந்த நேரம் அவ்வழியாக வந்த ஜீப் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே இறந் தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசார ணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர் தாலுகா பேகேப் பள்ளி அருகே உள்ள கோ விந்த அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சம்பங்கி (38). கூலித் தொழிலாளி. மோட் டார் சைக்கிளில் ஓசூர் - தளி சாலை பூனபபள்ளி அருகே கடந்த 11-ந் தேதி இரவு சென்று கொண்டி ருந்தார். அப்போது அவர் தவறி விழுந்தர். இதில் படுகாயம் அடைந்த சம்ப ங்கி இறந்தார். இந்த விபத்து குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா திம்மப்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி (29). கட்டிட மேஸ்திரி. இவர் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தி னம் ஓசூரில் இருந்து தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். ராயக்கோட்டை சாலையில் துப்புகானப்பள்ளி பக்கமாக சென்ற போது, அந்த வழியாக சென்ற பிக்அப் வேன் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த திருப்பதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.
- மேயர் ஆனந்தய்யா நலத்திட்ட உதவி களை வழங்கினார்.
- பிரகாஷ் எம்.எல்.ஏ.வழங்கினார்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகர மேற்கு பகுதி சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவி கள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ தலைமை தாங்கினார். விழாவில், மேற்குப் பகுதியைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், வாக்குச்சாவடி ஒருங்கி ணைப்பாளர்களுக்கும், பிரகாஷ் எம்.எல்.ஏ மற்றும் துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் நலத்திட்ட உதவி களை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்த னர். மேலும், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், நாற்பதும் நமதே என்ற குறிக்கோளுடன் உழைத்து, கட்சிக்கும், கட்சித் தலைவ ரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், கட்சி நிர்வா கிகள்,கிளை செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஐ.வி.டி.பி. நிறுவனர் வழங்கினார்
- பெற்றோரின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கிருஷ்ணகிரி ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் பல்வேறு சமூக சேவை களையும், கல்வி சேவை களையும் ஆற்றி வருகிறது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட உம்மியம்பட்டு அரசு நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் 360 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த மாணவ, மாணவி களின் உடல் நலன் கருதி யும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குடிநீர் பாட்டில்களை தவிர்க்கும் வகையிலும் அனைத்து மாணவர்களுக்கும் ரூ.43 ஆயிரத்து 200 மதிப்பில் வாட்டர் பாட்டில்கள், மாணவ, மாணவிகள் நகங்களை வெட்டி ஆரோக்கி யமாகவும், சுத்தமாகவும் பராமரிக்கும் வகையில் ரூ.18 ஆயிரம் மதிப்பில் நக வெட்டிகள் மற்றும் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.14 ஆயிரத்து 400 மதிப்பில் கேக்குகள் என மொத்தம் ரூ.75 ஆயிரத்து 600 மதிப்பிலான உதவிகளை ஐ.வி.டி.பி. நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.
பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவர்களுக்கு உதவிகளை வழங்கி பேசிய ஐ.வி.டி.பி. நிறுவன தலைவர், ஐ.வி.டி.பி. நிறுவனம் வழங்கும் இந்த கல்வி உதவிகளை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்கி சமுதாயத்திற்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து, பெற்றோரின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
- 1750 பேருக்கு பொற்கிழி வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரிக்கு வருகிற 22 மற்றும் 23-ந் தேதி வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கிருஷ்ணகிரி தேவராஜ் மகாலில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு கிருஷ்ண–கிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அர.சக்கரபாணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி–னார். அப்போது அவர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரியில் கலைஞரின் முழு உருவ சிலை திறப்பு விழா, திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம், டி.மதியழகன் எம்.எல்.ஏ. இல்ல திருமண வரவேற்பு விழா, நகர செயலாளர் நவாப் இல்ல திருமண விழா, முன்னாள் எம்.எல்.ஏ. முருகன் இல்ல திருமண விழாக்களில் பங்கேற்க தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரிக்கு வருகிற 22-ந் தேதி வருகிறார்.
22 மற்றும் 23-ந் தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் சென்னையில் இருந்து ஓசூர் விமான நிலையம் வந்து கிருஷ்ணகிரிக்கு வருகிறார். அவரை வரவேற்கவும், அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை 2-ம் கட்டமாக தந்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது. வருகிற 22 மற்றும் 23-ந் தேதிகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் தமிழக முதல்-அமைச்சருக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்து தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1750 பேருக்கு பொற்கிழி வழங்கி, பல்வேறு கட்சி, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தி.மு.க. இளைஞர் அணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது. சேலத்தில் டிசம்பர் 17-ந் தேதி நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து பெருந்திரளாக கலந்து கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் எம்.பி.க்கள் வெற்றிச்செல்வன், சுகவனம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன், நகர தி.மு.க. செயலாளர் நவாப், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், பேரூராட்சி தலைவர்கள் ஊத்தங்கரை அமானுல்லா, பர்கூர் சந்தோஷ், காவேரிப் பட்டணம் அம்சவேணி செந்தில்குமார் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பேரூராட்சி, ஒன்றிய குழு தலைவர்கள், தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முருகருக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
- பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
ஓசூர் பிருந்தாவன் நகரில் உள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் கோவிலில் 11-ஆம் ஆண்டு கந்த சஷ்டி மற்றும் லட்சார்ச்சனை விழா நேற்று தொடங்கியது. .
முதல் நாளான நேற்று, வாஸ்து பூஜை, கணபதி ஹோமம்,காப்பு கட்டுதல்,சுப்ரமணிய ஹோமம், முருகருக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, தேவார திருமுறை மற்றும் திருப்புகழ் பாடல்கள் சுதாகர் ஓதுவார் மூலமாக பிரசங்கம் நடைபெற்றது. விழாவில், பிருந்தாவன் நகர், லட்சுமிநாராயண நகர், என்.ஜி.ஜி.ஓ.எஸ். காலனி, கிருஷ்ணா நகர் மற்றும் சுற்றுப் பகுதிகளிலிருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 13 ஆடுகளின் கழுத்தை அறுத்துவிட்டு 7 ஆடுகளை எடுத்து சென்றுள்ளனர்.
- சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே ஆலப்பட்டி கிராமத்தில் சின்னக்கண்ணு. இவருக்கு சொந்தமான 13 ஆடுகள் உள்ளது. இவர் நேற்று மாலை தனது விவசாய நிலத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்று உள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 13 ஆடுகளின் கழுத்தை அறுத்துவிட்டு 7 ஆடுகளை எடுத்து சென்றுள்ளனர். மேலும் 2 இருசக்கர வாகனங்கள் அங்கே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து சின்னக்கண்ணு கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்ததில், மர்மநபர்கள் வந்த 2 இருசக்கர வாகனங்களும் திருட்டு வண்டி என்றும், வந்தவர்கள் குற்றவாளிகள் என்றும், மேலும் அவர்கள் இருசக்கர வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு ஆடுகளுடன் காரில் தப்பி ஓடியது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சசிகுமார் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
- வடமாநில தொழிலாளர்கள் போனஸ் தருவது தொடர்பாக தாக்கி கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓசூர்:
பீகார் மாநிலம் பட்னா மாவட்டம் முஷ்காபூர் பகுதியைச் சேர்ந்த ராம் தீப் மகன் சசிகுமார் (வயது23). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மத்திகிரி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் தங்க வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் தீபாவளி போனஸ் தருவது தொடர்பாக அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அணில்லிங்கா (44), மார்க்அராத் கேசரிமாணிக் (36), அக்ஷய்குமார் தாஸ் (34) ஆகிய 3பேரும் சேர்ந்து சசிகுமாரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது அவரை 3 பேரும் சேர்ந்து கட்டையாலும், கைகளாலும் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சசிகுமார் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் போலீசார் சசிகுமாரை தாக்கிய அணில்லிங்கா உள்பட 3 பேரை கைது செய்தனர். இதேபோன்று சந்தீப்மாணிக் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பீகாரைச் சேர்ந்த அசோக்குமார்(21), சசிகுமார், உத்தரபிர தேசத்தை சேர்ந்த அபிஷேக்ராய் (31) தீராஜ்ராய் (38) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
வடமாநில தொழிலாளர்கள் போனஸ் தருவது தொடர்பாக தாக்கி கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் யானை ஒன்று சுட்டு கொல்லப்பட்டு கிடந்தது. இந்த சமபவம் தொடர்பாக சென்னமாளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முத்து மல்லேஷ் என்பவரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
- தேன்கனிக்கோட்டை அருகே யானையை சுட்டுக்கொன்ற வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா ஜவளகிரி வனச்சரகத்துக்கு சென்னமாலம் கிராமம் அடுத்துள்ள கக்க மல்லேஸ்வரசுவாமி கோயில் அருகே கடந்த அக் 29-ந் தேதி ஒரு ஆண் காட்டு யானை உயிரிழந்து கிடந்தது. அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் வன அதனை பார்த்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற ஓசூர் வனக்கோட்ட வன உயிரினகாப்பாளர் கார்த்தி கேயனி, உதவி வன பாதுகாவலர் ராஜ மாரியப்பன் மற்றும் ஜவள கிரி வனச்சரகர் உள்ளிட்ட வனத்துறையினர் காட்டு யானையின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்த யானை சுமார் 15 வயது மதிக்கத்தக்கது எனவும், காட்டு யானையின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இருந்ததும் 2 தந்தங்கள் உடலில் அப்படியே இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வேட்டைக்காக காட்டு யானை சுட்டு கொல்லப்படவில்லை என வனத்துறையினர் அறிந்தனர்.
இதனையடுத்து வனத்துறையினர் வனத்துறை கால்நடைருத்துவர் குழுவினரை கொண்டு அதே இடத்தில் காட்டு யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர். இதனிடையே 15 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானையை சுட்டு கொன்றது யார்? என்பது குறித்து வனத்துறையினர் சிறப்பு குழு அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த னர்.விசாரணையில் ஜவளகிரி வனப்பகுதிக்கு அருகே உள்ள சென்ன மாளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முத்து மல்லேஷ் (வயது 43) என்பவர் காட்டு யானையை நாட்டுதுப் பாக்கியால் சுட்டு கொன்றது தெரியவந்தது. இதனை யடுத்து அவரை வனத்துறை யினர் கைது செய்தனர்.
அவரிடம் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் தனது ராகி பயிர்களை யானை நாசம் செய்ததால் துப்பாக்கால் சுட்டுக் கொன்றதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரை தேன் கனிக்கோட்டை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர். இதனிடையே வனசரகர் விஜயன், (பொ) மற்றும் வனத்துறையினர் தீவிர விசாரனை மேற்கொண்ட தில் யானையை சுட்டு கொன்ற வழக்கில் மேலும் ஒருவர் இருப்பது தெரிய வந்தது கார்நாடக மாநிலம் கனகபுரம் தாலுக்க காடு சிவனப் பள்ளி கிராமத்தை சேர்ந்த சினிவாசமூர்த்தி (34) என்பவரை கைது செய்து வழக்கு பதிந்து தேன்கனிக் கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பகுதி நேர வேலையில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று குறும் செய்தி வந்தது.
- அதை நம்பி வங்கி கணக்கில் ரூ.59,11,250 லட்சம் பணத்தை செலுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள அலசநத்தம் ஜெய் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் தியாகராஜன் இவர் வரி ஆலோசகராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 25 ந்தேதி இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு தனியார் நிறுவனத்தின் பேரில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் பகுதி நேர வேலை வாய்ப்பு உள்ளது. அதற்கு விண்ணப்பித்து முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து அந்த குறுஞ்செய்தியில் இருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தியாகராஜன் பேசியுள்ளார். அப்போது அவரிடம் பேசிய நபர் ஒரு வங்கி கணக்கு எண்ணை கொடுத்து அதில் பணம் செலுத்த சொல்லி உள்ளார். அதன்படி ரூ.59,11,250 லட்சம் பணத்தை செலுத்தியுள்ளார். இதனையடுத்து சில நாட்கள் கழித்து அந்த நபரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயற்சித்த போது முடிய வில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தியாகராஜன் இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போன்று கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தகிரி அருகேயுள்ள பொதிகை நகர் பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி இவரது மகன் பரந்தாமன். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவரது வாட்ஸ்ஆப்பில் வந்த குறுஞ்செய்தியில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளதாகவும் அதில் விண்ணப்பித்து முதலீடு செய்தால் லட்ச கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து பரந்தாமன் அதில் இருந்த செல்போன் எண்ணில் பேசி விவரம் கேட்டுள்ளார்.
அப்போது போனில் பேசிய மர்ம நபர் சொன்ன வங்கி கணக்கில் ரூ.8,88,000 லட்சம் பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேச முயன்ற போது முடிய வில்லை. இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இந்த 2 மோசடி வழக்குகள் குறித்தும் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். படித்த பட்டதாரி வாலிபர்களிடம் ஆன்லைன் மூலமாக ரூ.68 லட்சம் மோசடி நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. நேற்று முன் தினம் பெண் உள்ளிட்ட 3 பேரிடம் இதே பாணியில் ரூ.57.87 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






