என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடமாநில தொழிலாளர் மீது தாக்குதல்- 7 பேர் கைது
- சசிகுமார் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
- வடமாநில தொழிலாளர்கள் போனஸ் தருவது தொடர்பாக தாக்கி கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓசூர்:
பீகார் மாநிலம் பட்னா மாவட்டம் முஷ்காபூர் பகுதியைச் சேர்ந்த ராம் தீப் மகன் சசிகுமார் (வயது23). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மத்திகிரி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் தங்க வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் தீபாவளி போனஸ் தருவது தொடர்பாக அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அணில்லிங்கா (44), மார்க்அராத் கேசரிமாணிக் (36), அக்ஷய்குமார் தாஸ் (34) ஆகிய 3பேரும் சேர்ந்து சசிகுமாரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது அவரை 3 பேரும் சேர்ந்து கட்டையாலும், கைகளாலும் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சசிகுமார் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் போலீசார் சசிகுமாரை தாக்கிய அணில்லிங்கா உள்பட 3 பேரை கைது செய்தனர். இதேபோன்று சந்தீப்மாணிக் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பீகாரைச் சேர்ந்த அசோக்குமார்(21), சசிகுமார், உத்தரபிர தேசத்தை சேர்ந்த அபிஷேக்ராய் (31) தீராஜ்ராய் (38) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
வடமாநில தொழிலாளர்கள் போனஸ் தருவது தொடர்பாக தாக்கி கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






