என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெவ்வேறு சாலை விபத்துகளில் 6 பேர் பலி
    X

    வெவ்வேறு சாலை விபத்துகளில் 6 பேர் பலி

    • சிகிச்சை பலனின்றி 11-ந் தேதி மாலை காளியப்பன் இறந்தார்.
    • பலத்த காயம் அடைந்த திருப்பதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    கிருஷ்ணகிரி,

    மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 6 பேர் பலியானார்கள்.தேன்கனிக்கோட்டை தாலுகா தொட்டபேளூரை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 25). தனியார் நிறுவன ஊழியர். இவர் மோட்டார் சைக்கிளில் கடந்த 10-ந் தேதி இரவு கெலமங்கலம் - தேன்கனிக்கோட்டை சாலையில் கெலமங்கலம் ராஜலட்சுமி தியேட்டர் பக்ககாக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் படுகாயம் அடைந்த காளியப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 11-ந் தேதி மாலை காளியப்பன் இறந்தார். இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊத்தங்கரை தாலுகா அத்திபாடியை சேரந்தவர் தேவன் (வயது 53). மருந்து கடை உரிமையாளர். கடந்த 11-ந் தேதி இரவு இவர் மோட்டார் சைக்கிளில் சிங்காரபேட்டை - ஊத்தங்கரை சாலையில் மிட்டப்பள்ளி பக்கமாக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக நடந்து சென்ற முபாரக் (44) என்பவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த தேவன் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்ரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவன் இறந்தார். முபாரக் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சிங்கரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாமக்கல் மாவட்டம் கணேசபுரம் அருகே உள்ள வகுரம்பட்டியை சேர்நதவர் ஜூலியட் பிரேலதா ரகு நாதன் (வயது 56). அரசு பள்ளி ஆசிரியை. இவரும் கணவர் ரகுநாதனும் (54) காரில் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர்.

    அவர்கள் வந்த கார் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மார்கண்டேய நதி பாலம் அருகில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆசிரியை ஜூலியட் படு காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். ரகுநாதன் படுகாயத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத் துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறிதது குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறாகள்.

    சூளகிரி தாலுகா காமன் தொட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (42). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 11-ந் தேதி கிருஷ்ணகிரி - ஓசூர் சாலையில் காமன் தொட்டி பக்கமாக சாலை யை கடக்க முயன்றார்.

    அந்த நேரம் அவ்வழியாக வந்த ஜீப் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே இறந் தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசார ணை நடத்தி வருகிறார்கள்.

    ஓசூர் தாலுகா பேகேப் பள்ளி அருகே உள்ள கோ விந்த அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சம்பங்கி (38). கூலித் தொழிலாளி. மோட் டார் சைக்கிளில் ஓசூர் - தளி சாலை பூனபபள்ளி அருகே கடந்த 11-ந் தேதி இரவு சென்று கொண்டி ருந்தார். அப்போது அவர் தவறி விழுந்தர். இதில் படுகாயம் அடைந்த சம்ப ங்கி இறந்தார். இந்த விபத்து குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா திம்மப்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி (29). கட்டிட மேஸ்திரி. இவர் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தி னம் ஓசூரில் இருந்து தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். ராயக்கோட்டை சாலையில் துப்புகானப்பள்ளி பக்கமாக சென்ற போது, அந்த வழியாக சென்ற பிக்அப் வேன் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த திருப்பதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    Next Story
    ×