என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார்.
    • ஆக்கப்பணிகள் குறித்துதம் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    ஓசூர் 

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம், ஓசூரில் நேற்று நடைபெற்றது. ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள ஆந்திர சமிதியில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மாவட்ட துணை செயலாளர் முருகன் தலைமை தாங்கினார்.மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார். இதில், வருகிற 22 மற்றும் 23-ந் தேதி ஆகிய 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தரும், கட்சி தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

    மேலும், பிஎல்ஏ - 2, பிஎல்சி குறித்தும் மற்றும் கட்சி ஆக்கப்பணிகள் குறித்துதம் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில், மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மற்றும், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

    • கொடிக்கம்பம் பழமையான நிலையில் அதனை புதுப்பித்து புதிய கொடிக்காம்பம் நட கட்சியினர் ஈடுபட்டு இருந்தனர்.
    • சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கிராமத்திற்கு வந்து வருவாய் துறையினர் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள கவுண்டப்பனூர் அருந்தியர் காலனி கிராமத்தில் சுமார் 45-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராம மக்கள் தங்களது ஊரின் எல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் நட்டு விழா காலங்களில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை கொடிக்கம்பம் பழமையான நிலையில் அதனை புதுப்பித்து புதிய கொடிக்காம்பம் நட கட்சியினர் ஈடுபட்டிருந்த நிலையில் அங்கு வந்த மத்தூர் போலீசார் கொடி கம்பம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கட்சி நிர்வாகிகள், போலீசார் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் இன்று காலை போலீசார் கிராம மக்களை விசாரணைக்கு அழைத்ததாக தெரிகிறது. அப்போது சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் கிராமத்தில் முகாமிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் குபேந்திரன், தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மண்டல துணை செயலாளர் மோகன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கிராமத்திற்கு வந்து வருவாய் துறையினர் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது கட்சியினர் கூறுகையில்:- கொடி கம்பம் நடுவதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும், நேற்று இரவு கிராமத்தில் இருந்த பெண்களை சமூக பெயரை கூறி போலீசார் ஈடுபட்டதாகவும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கட்சியினர் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிகம்பத்தை புதுப்பித்து நடும் பணியில் ஈடுபட்டதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அபிராமி என்பவரின் வீட்டு ஓலை கொட்டகை தீ வைத்து எரிக்கப்பட்டது.
    • 3 பேரும் தர்மபுரி சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே உள்ளது சோக்காடி. இந்த ஊரில் மாரியம்மன் கோவில் ஒன்று குறிப்பிட்ட சமுதாயத்தினரால் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி மாலை கோவிலில் கிரானைட் கற்கள் அறுக்கும் பணி நடந்தது.

    அப்போது அங்கு வந்த ஒரு சமுதாயத்தை சேர்ந்த அன்பரசு என்பவர் கிரானைட் கற்களில் இருந்து தூசி வீடுகளுக்கு வருவதாகவும், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்ப டுவதாக கூறினார். இதனால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன. இதை அறிந்த கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சோக்காடி ராஜன் (60) இது குறித்து அன்பரசுவிடம் கேட்டார். அந்த நேரம் அவர்கள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இந்த தகராறு இரு சமுதாயத்தினரிடையே மோதலாக மாறியது. இதில் 2 தரப்பினரும் திரண்டு கற்களை வீசினார்கள். அதே போல அபிராமி என்பவரின் வீட்டு ஓலை கொட்டகை தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த கல்வீச்சு மோதல் சம்பவத்தில் ஒரு தரப்பை சேர்ந்த திம்மராஜ் (28), கவிதா (35), சிலம்பரசன் (34), ஆறுமுகம் (58) ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர்.

    அது குறித்து திம்மராஜ் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி விசாரணை நடத்தி, சோக்காடி ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ராமலிங்கம் (50), ஆனந்தன் (39), சித்தராஜ் (53), சித்தேவன் (44), சண்முகம் (40), சித்துராஜ் (55), 17 வயது சிறுவன் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் மீது கூட்டமாக வருதல், ஆபாசமாக பேசுதல், கலகம் விளைவித்தல், தாக்குதல், கொலை மிரட்டல், எஸ்.சி. எஸ்.டி. பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது-. மேலும் சோக்காடி ராஜன் (60), கண்ணன் (65), சுமதி (35) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    அதே போல மற்றொரு தரப்பில் சித்தராஜ் (55) என்பவர் புகார் கொடுத்துள்ளார். அதில் தானும் கண்ணன் (65), சண்முகம் (40), சித்தேவன் (44) உள்ளிட்டோர் காயமடைந்ததாக கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் முனிராஜ் (49), வரதராஜ் (51), குமரன் (23), சத்யமூர்த்தி (27), செல்வம் (37), சுப்பிரமணி (42) ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அன்பரசு (30), திம்மராஜ் (28), சந்தோஷ் (27), ஆறுமுகம் (58), சிலம்பரசன் (34), தனுஷ் (24), கலையரசன் (32) ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சோக்காடி வன்முறை சம்பவம் தொடர்பாக போலீசார் தேடி வந்த, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், கண்ணன், சுமதி ஆகிய 3 பேரும் கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி சுதா முன்னிலையில் நேற்று சரண் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் தர்மபுரி சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    • சம்பவ இடத்துக்கு ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
    • காவலாளி மூலம் தகவல் அறிந்த சதீஷ் ஆத்திரமடைந்து மதுபோதையில் கோபாலை தாக்கியுள்ளார்.

    ஓசூர்:

    ஓசூர் அருகே சூளகிரி-பேரிகை சாலையில் கெஞ்சவுன் ஏரி அருகே தொழிலாளியின் பிணமாக கிடந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பேரிகை போலீசார் 2 பேர் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஆருப்பள்ளியை சேர்ந்தவர் கோபால் (45). கூலித்தொழிலாளி.இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர்.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் சூளகிரி - பேரிகை சாலையில், கடத்தூர் பக்கமுள்ள கெஞ்சகவுன் ஏரி அருகே தூக்கில் தொங்கிய நிலையில் கோபாலின் உடல் கிடந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த பேரிகை போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    போலீஸ் விசாரணையில், சூளகிரி அருகே ஏனுசோனை கிராமத்தை சேர்ந்த சதீஷ்(35) என்பவர், கெஞ்சகவுன் ஏரியில் மீன் பிடிக்க குத்தகை எடுத்திருந்த நிலையில் கோபால் அங்கு வலை போட்டு மீன்களை பிடித்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து காவலாளி மூலம் தகவல் அறிந்த சதீஷ் ஆத்திரமடைந்து மதுபோதையில் கோபாலை தாக்கியுள்ளார்.

    மேலும், கோபாலின் கழுத்தை நெறித்து கொன்று, அவர் அணிந்திருந்த லுங்கியால் மரத்தில் கட்டி தொங்கவிட்டதாக சதீஷ் போலீசாரிடம் கூறினார்.

    இதைத்தொடர்ந்து சதீசை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உதவி புரிந்ததாக ஏரி காவலாளி சந்திரப்பா (55) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • தேசிய அளவிலான ஜூடோ போட்டிக்கு தமிழக அணிக்கு கிருஷ்ணகிரி மாணவிகள் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • தேர்வான கிருஷ்ணகிர மாவட்ட பள்ளி மாணவிகள் 3 பேரையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி:

    திருச்சி கொங்கு பொறியியல் கல்லூரியில் சப்-ஜூனியர் ஜூடோ சாம்பி யன்ஷிப் போட்டி நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவி களும் பங்கேற்றனர்.

    இதில் இம்மிடிநாயக்க னப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யா 57 கிலோ எடைப்பி ரிவில் தங்கப்பதக்கமும், இதே பள்ளியை சேர்ந்த மாணவி லோகபிரியா 28 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கமும் பெற்றனர். இதே போல் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி அபிநயா 40 கிலோ எடை பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நி லைப்பள்ளி மாணவி நித்யா ஸ்ரீ 32 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும், கட்டிகானப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி பிரியதர்ஷினி 36 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கமும், மாணவர் யுவராஜ் 35 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்க மும், கிருஷ்ணகிரி விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரதீப் 55 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றனர்.

    மேலும், பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவி களையும், பெண்கள் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவிகளையும், கேரளாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவிகள் திவ்யா, லோகப்பிரியா, நித்யாஸ்ரீ ஆகியோரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, நேரில் வரவழைத்து பாராட்டினார்.

    இந்த நிகழ்ச்சியின் போது, மாவட்ட கல்வி அலுவலர்கள் கோவிந்தன், மணிமேகலை, மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், தலைமை ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், ராஜலட்சுமி, ஜூடோ மாஸ்டரும், உடற்கல்வி ஆசிரியருமான முருகன், ஜூடோ பயிற்றுனர் வினோத் ஆகியோர் உடனி ருந்தனர்.

    • கிருஷ்ணகிரி அருகே கார்வேபுரத்தில் கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என்பதால் அடிப்படை வசதிகள் கேட்டு, கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
    • எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. வீட்டு மனை கேட்டு கடந்த 30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை அதிகாரிகள் எடுக்காததால், கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே கார்வேபுரத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் ஊராட்சி கார்வேபுரம் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் 150-க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்ப் பழங்குடி குறவன் சங்கம் சார்பில், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி தாலுகா தேவசமுத்திரம் ஊராட்சி ஏரிக்கோடியை ஒட்டியுள்ள கார்வேபுரம் பகுதியில் கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. வீட்டு மனை கேட்டு கடந்த 30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

    மேலும் ஏரிப்புறம் போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகக்கூறி, குடியிருக்கும் வீட்டை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லி அறிவிப்புகளையும் வழங்கி வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் நிம்மதி இன்றி தவித்து வருகின்றனர்.

    மழைக் காலங்களில் உபரி நீர் வெளியேறி விஷ பூச்சிகளும், மழை நீருடன் கழிவுநீரும் வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. மேலும் குடிநீரும், இதர பயன்பாட்டிற்கான தண்ணீரும் இரண்டுமே ஒன்றாகவும், சுகாதாரமற்ற நிலையிலும் உள்ளன. எந்த வீட்டிலும் முறையான கழிப்பறைகள் இல்லை. இதனால் பெண்களும், வயதான வர்களும் மிகவும் சிரமத்திற் குள்ளாகி வருகின்றனர்.

    சுகாதார சீர்கேடு, அபாயகரமான வாழ்க்கை சூழல் காரணமாக இளம் வயது மரணங்கள் அதிகமாக நிகழ்கின்றன. பள்ளி, கல்லூரியில் படிக்கும் வயதில் உள்ள பாதிக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளியை விட்டு நின்று விட்டனர். இதனால் குழந்தைகள் வீட்டில் இருப் பதால், வேலைக்கு செல்லும் சூழலுக்கு தள்ளப் பட்டு குழந்தை தொழிலாளர்களாக உருவாகி உள்ளனர்.

    10 ஆண்டுகளாக ஒவ்வொரு வீட்டிலும் 10-க்கும் மேற்பட்ட பன்றிகளை வளர்த்து வந்துள்ளனர். இந்த பன்றி வளர்ப்பதை விட்டு விட்டால், ஒரு நல்ல நிரந்தரமானஇடம் வழங்கப்படும் என்று அப்போதைய அரசு அலுவலர்கள் சிலர் சொன்னதை நம்பி ஒட்டு மொத்தமாக பன்றி மேய்க்கும் தொழிலை விட்டு விட்டனர். ஆனாலும் இதுவரை மாற்று இடம் வழங்கப்படவில்லை. எனவே இங்கு வசிப்ப வர்களுக்கு அரசு நல்ல இடம் ஒதுக்கி வீடு கட்டி, குடிநீர், சாக்கடை கால்வாய் வசதி போன்றவற்றை செய்துதர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிப்பம் கட்டும் அறைக்கு கூடுதல் மானியம் வழங்க வேண்டும் என்று தமிழக விவசாய டிராக்டர் உரிமையாளர் நலச் சங்கத்தின் மாநில தலைவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சிப்பம் கட்டிட, தற்போது சூழ்நிலை யில் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ரூ.8 லட்சம் வரை செலவாகிறது.

    கிருஷ்ணகிரி:

    தமிழக விவசாய டிராக்டர் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் மகாராஜன் மற்றும் நிர்வாகிகள் கிருஷ் ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தோட்டக்க லைத்துறை மூலம் விவசாயிகள் பயிரிடும் காய்கறிகளை தரம் பிரித்து விற்பனை செய்ய ஏதுவாக 30 அடிக்கு 20 அடிக்கு என்கிற அளவில் ரூ.4 லட்சம் மதிப்பில் சிப்பம் கட்டும் அறை கட்டிட 50 சதவீதம் மானியம் அரசு வழங்குகிறது.

    ஒரு சிப்பம் கட்டிட, தற்போது சூழ்நிலை யில் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ரூ.8 லட்சம் வரை செலவாகிறது.

    இதில் அரசு வழங்கும் 2 லட்சம் மானியம் கட்டுபடியாகவில்லை.

    மேலும், சிப்பம் கட்டும் அறையில் 2 கதவு, 6 ஜன்னல்கள், 3 மின்விசிறி, 5 டியூப்லைட்கள், ஒரு எடை தராசு, 20 தக்காளி கிரேடு, ஒரு டேபிள், 10 சேர், 1 தண்ணீர் தொட்டி குழாய் உபகரணங்கள், 3 சிறிய தொட்டிகள் மற்றும் தடை யில்லா மின்சாரம் வழங்க யூபிஎஸ் உள்ளிட்டவை கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

    மேலும், சிப்பம் கட்டும் அறை கட்டி முடித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு செய்த பிறகு தான் மானியத்தை தொகையை விடுவிக்கின்றனர். மேலும், சிப்பம் கட்டும் அறை கட்ட புளு பிரிண்ட் தயார் செய்து வழங்கினால் தான் அறையை கட்ட அனுமதிக்கிறார்கள். எனவே, சிப்பம் கட்டும் அறைக்கான் மதிப்பீட்டுத் தொகையை, தற்போதுள்ள விலை விகிதப்படி உயர்த்த வேண்டும்.

    மானிய தொகை யை உயர்த்தி வழங்கவும், கட்டுமானம் நடைபெறும் பொழுது தேவையான பொருட்களை வழங்கினால் விவசாயிகளுக்கு பயன்பெ றுவார்கள். எனவே, சிப்பம் கட்டும் அறைக்கான மதிப் பீடு தொகை, மானியத்தை உயர்த்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

    • கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் சரயு நேரில் ஆய்வு செய்தார்.
    • அரசு பள்ளியில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் சமைக்கப்பட்ட உணவு மாதிரிகளை பார்வையிட்டு, வழங்கப்படும் உணவுகள் குறித்து மாணவர்களிடம் கலெக்டர் சரயு கேட்டறிந்தார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கல்லுக்குறுக்கி, பெரியகோட்டப்பள்ளி, மேகலசின்னம்பள்ளி, நாரலப்பள்ளி, தேவச முத்திரம் ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக ரூ.2 கோடியே 2 லட்சத்து 59 ஆயிரத்து 600 மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கல்லுகுறுக்கி கிராமத்தில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பி.ஜி.புதூர் சாலை முதல் கல்லுக்குறுக்கி வரை 350 மீட்டர் தூரத்திற்கு ரூ.11 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலை அமைக்கும் பணிக ளையும், பெரியகோட்டப் பள்ளி ஊராட்சி, போத்திநா யனப்பள்ளி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொகுதி - 2 -ன் கீழ், ரூ.14 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிட கட்டுமான பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

    மேலும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சமைக்கப்பட்ட உணவுகள் மற்றும் சமையல் பொருட்களின் இருப்புகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் சமைக்கப்பட்ட உணவு மாதிரிகளை பார்வையிட்டு, வழங்கப்படும் உணவுகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிககும மாணவ, மாணவிகளிடம் கணித வாய்ப்பாடு, ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துக்கள் வாசிப்பு, எழுத்து திறன்களை ஆய்வு செய்தார்.

    இதே போல பெரிய கோட்டப்பள்ளி ஊராட்சியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், கழிவுநீர் கால்வாய், சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு பணிகள், அங்கன்வாடி மைய சமையல் கூடங்கள் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார். மேலும ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணிகள், கதிரடிக்கும் களம் கட்டுமான பணிகள், மாதிநாயனப் பள்ளியில் 7 இருளர் இன மக்களுக்கு புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டு பணிகள் ஆகியவற்றையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    இதே போல நாரலப்பள்ளி, மேகலசின்னம்பள்ளி, தேவசமுத்திரம் ஊராட்சிகளில் பணிகளை பார்வையிட்ட கலெக்டர், பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வுகளின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ராஜேஷ், உதவி பொறியாளர்கள் அன்புமணி, சத்யநாராய ணராவ், அந்தோணி ஆசைதம்பி, பணி மேற்பார்வையாளர்கள் கல்பனா, அம்பிகா, நாகூர் மீரான், செந்தில், தொழில்நுட்ப உதவியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • கோபால் எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
    • போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஆருப்பள்ளியை சேர்ந்தவர் கோபால் (45). கூலித்தொழிலாளி.

    இந்த நிலையில் நேற்று சூளகிரி-பேரிகை சாலையில் உள்ள செஞ்சகவுன் ஏரி அருகே தூக்கில் தொங்கிய நிலையில் கோபால் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த பேரிகை போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தியதில் சூளகிரி அருகே ஏனு சோனையை சேர்ந்த சதீஷ் என்பவர் அந்த ஏரியில் மீன் பிடிக்க குத்தகை எடுத்திருந்த நிலையில் கோபால் அங்கு மீன் பிடித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சதீஷ் ஆத்திரமடைந்து கோபாலை தாக்கியுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து கோபால் அங்கு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

    கோபால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தாக்கப்பட்டு அவரை சடலத்தை தூக்கில் தொங்கவிட்டனரா? என்பது குறித்து சதீசிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கோபால் எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நெல், தக்காளி, முட்டைகோஸ் ஆகிய பயிர்கள் பல ஏக்கர்களில் விவசாய நிலங்கள் உள்ளன.
    • வனத்துறையினர் உடனடியாக இப்பகுதியில் மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுக்கா கெலமங்கலம் அருகே ஜக்கேரி ஊராட்சி ஒன்னு குறுக்கை கிராமத்தில் உள்ள ஏரியில் நேற்று முன் இரவு 20 யானைகள் முகாமிட்டுள்ளன ஏரிகரையோரம் உள்ள விளைநிலங்களில் காட்டு யானைகள் புகுந்து தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இப்பகுதியில் நெல், தக்காளி, முட்டைகோஸ் ஆகிய பயிர்கள் பல ஏக்கர்களில் விவசாய நிலங்கள் உள்ளன.

    அய்யூர் வனப்பகுதியில் இருந்து கிராம பகுதிகளுக்கு உணவு, தண்ணீர் தேடி வரும் வனவிலங்குகள் விளைநிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்துவது வழக்கமாக நடந்து வருகிறது.

    அதிலும் தற்போது கடந்த ஒரு ஆண்டுக்குமேலாக சரிவர மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. வனவிலங்குகளுக்கு உணவு, தண்ணீர் கிடைப்பதில்லை. இவற்றை தேடி தோட்டபகுதிக்கு வருகின்றன. ஏரிகளில் தண்ணீர இல்லாததால் அருகில் உள்ள வயல்கள், தோப்புகளுக்கு படையெடுக்கின்றன. அங்கு பம்புசெட் தொட்டிகளில் இருக்கும் நீரை குடித்துவிட்டு பயிர்களை நாசம் செய்து செய்கின்றன.

    இதில் சிவக்குமார் என்பவரின் 2ஏக்கர் நெற்பயிர், கோவிந்தப்பாவின் 1ஏக்கர் நெற்பயிர், பாப்பண்ணா என்பவரின் 1 ஏக்கர் முட்டைகோஸ் ஆகியவற்றை காலில் மிதித்தும் தின்றும் நாசம் செய்து சென்றுள்ளன.

    இதுகுறித்து விவசாயி சிவகுமார் கூறுகையில், "ஏற்கனவே வறட்சியால் பெரும் இழப்புகளுக்கு ஆளாகி உள்ள நிலையில் வனவிலங்குகளாலும் தொடர்ந்து இழப்புகள் ஏற்படுவது வேதனையாக உள்ளது. வனத்துறையினர் உடனடியாக இப்பகுதியில் மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிவாரணம் வழங்கினால் மட்டுமே மீண்டும் விவசாயத்தை தொடர முடியும் என கண்ணீர் மல்க வேதனையுடன் தெரிவித்தார்.

    வனத்துறை அதிகாரிகள் யானைகள் நாசம் செய்த பயிர்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கடையில் மேற்கூரை உடைக்கப் பட்டிருந்தது.
    • மடிக்கணினி, ஒரு செல்போன் ஆகிவை திருட்டு போய் இருந்தது.

    மத்தூர்,

    போச்சம்பள்ளி தாலுகா வடமலம்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 47). இவர் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 10-ந் தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். 11-ந் தேதி காலை கடைக்கு சென்று பார்த்த போது அங்கு கடை யில் மேற்கூரை உடைக்கப் பட்டிருந்தது.

    மேலும் கடையில் வைத்தி ருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணம், ஒரு மடிக்கணினி, ஒரு செல்போன் ஆகிவை திருட்டு போய் இருந்தது.

    இது குறித்து மாதேஷ் போச்சம்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி னார்கள்.

    அதே போல கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். இது தொடர்பாக போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிகிச்சை பலனின்றி 11-ந் தேதி மாலை காளியப்பன் இறந்தார்.
    • பலத்த காயம் அடைந்த திருப்பதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    கிருஷ்ணகிரி,

    மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 6 பேர் பலியானார்கள்.தேன்கனிக்கோட்டை தாலுகா தொட்டபேளூரை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 25). தனியார் நிறுவன ஊழியர். இவர் மோட்டார் சைக்கிளில் கடந்த 10-ந் தேதி இரவு கெலமங்கலம் - தேன்கனிக்கோட்டை சாலையில் கெலமங்கலம் ராஜலட்சுமி தியேட்டர் பக்ககாக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் படுகாயம் அடைந்த காளியப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 11-ந் தேதி மாலை காளியப்பன் இறந்தார். இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊத்தங்கரை தாலுகா அத்திபாடியை சேரந்தவர் தேவன் (வயது 53). மருந்து கடை உரிமையாளர். கடந்த 11-ந் தேதி இரவு இவர் மோட்டார் சைக்கிளில் சிங்காரபேட்டை - ஊத்தங்கரை சாலையில் மிட்டப்பள்ளி பக்கமாக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக நடந்து சென்ற முபாரக் (44) என்பவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த தேவன் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்ரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவன் இறந்தார். முபாரக் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சிங்கரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாமக்கல் மாவட்டம் கணேசபுரம் அருகே உள்ள வகுரம்பட்டியை சேர்நதவர் ஜூலியட் பிரேலதா ரகு நாதன் (வயது 56). அரசு பள்ளி ஆசிரியை. இவரும் கணவர் ரகுநாதனும் (54) காரில் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர்.

    அவர்கள் வந்த கார் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மார்கண்டேய நதி பாலம் அருகில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆசிரியை ஜூலியட் படு காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். ரகுநாதன் படுகாயத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத் துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறிதது குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறாகள்.

    சூளகிரி தாலுகா காமன் தொட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (42). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 11-ந் தேதி கிருஷ்ணகிரி - ஓசூர் சாலையில் காமன் தொட்டி பக்கமாக சாலை யை கடக்க முயன்றார்.

    அந்த நேரம் அவ்வழியாக வந்த ஜீப் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே இறந் தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசார ணை நடத்தி வருகிறார்கள்.

    ஓசூர் தாலுகா பேகேப் பள்ளி அருகே உள்ள கோ விந்த அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சம்பங்கி (38). கூலித் தொழிலாளி. மோட் டார் சைக்கிளில் ஓசூர் - தளி சாலை பூனபபள்ளி அருகே கடந்த 11-ந் தேதி இரவு சென்று கொண்டி ருந்தார். அப்போது அவர் தவறி விழுந்தர். இதில் படுகாயம் அடைந்த சம்ப ங்கி இறந்தார். இந்த விபத்து குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா திம்மப்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி (29). கட்டிட மேஸ்திரி. இவர் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தி னம் ஓசூரில் இருந்து தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். ராயக்கோட்டை சாலையில் துப்புகானப்பள்ளி பக்கமாக சென்ற போது, அந்த வழியாக சென்ற பிக்அப் வேன் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த திருப்பதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    ×