search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிப்பம் கட்டும் அறைக்கு கூடுதல் மானியம் வழங்க வேண்டும்விவசாயிகள் கோரிக்கை
    X

    சிப்பம் கட்டும் அறைக்கு கூடுதல் மானியம் வழங்க வேண்டும்விவசாயிகள் கோரிக்கை

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிப்பம் கட்டும் அறைக்கு கூடுதல் மானியம் வழங்க வேண்டும் என்று தமிழக விவசாய டிராக்டர் உரிமையாளர் நலச் சங்கத்தின் மாநில தலைவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சிப்பம் கட்டிட, தற்போது சூழ்நிலை யில் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ரூ.8 லட்சம் வரை செலவாகிறது.

    கிருஷ்ணகிரி:

    தமிழக விவசாய டிராக்டர் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் மகாராஜன் மற்றும் நிர்வாகிகள் கிருஷ் ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தோட்டக்க லைத்துறை மூலம் விவசாயிகள் பயிரிடும் காய்கறிகளை தரம் பிரித்து விற்பனை செய்ய ஏதுவாக 30 அடிக்கு 20 அடிக்கு என்கிற அளவில் ரூ.4 லட்சம் மதிப்பில் சிப்பம் கட்டும் அறை கட்டிட 50 சதவீதம் மானியம் அரசு வழங்குகிறது.

    ஒரு சிப்பம் கட்டிட, தற்போது சூழ்நிலை யில் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ரூ.8 லட்சம் வரை செலவாகிறது.

    இதில் அரசு வழங்கும் 2 லட்சம் மானியம் கட்டுபடியாகவில்லை.

    மேலும், சிப்பம் கட்டும் அறையில் 2 கதவு, 6 ஜன்னல்கள், 3 மின்விசிறி, 5 டியூப்லைட்கள், ஒரு எடை தராசு, 20 தக்காளி கிரேடு, ஒரு டேபிள், 10 சேர், 1 தண்ணீர் தொட்டி குழாய் உபகரணங்கள், 3 சிறிய தொட்டிகள் மற்றும் தடை யில்லா மின்சாரம் வழங்க யூபிஎஸ் உள்ளிட்டவை கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

    மேலும், சிப்பம் கட்டும் அறை கட்டி முடித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு செய்த பிறகு தான் மானியத்தை தொகையை விடுவிக்கின்றனர். மேலும், சிப்பம் கட்டும் அறை கட்ட புளு பிரிண்ட் தயார் செய்து வழங்கினால் தான் அறையை கட்ட அனுமதிக்கிறார்கள். எனவே, சிப்பம் கட்டும் அறைக்கான் மதிப்பீட்டுத் தொகையை, தற்போதுள்ள விலை விகிதப்படி உயர்த்த வேண்டும்.

    மானிய தொகை யை உயர்த்தி வழங்கவும், கட்டுமானம் நடைபெறும் பொழுது தேவையான பொருட்களை வழங்கினால் விவசாயிகளுக்கு பயன்பெ றுவார்கள். எனவே, சிப்பம் கட்டும் அறைக்கான மதிப் பீடு தொகை, மானியத்தை உயர்த்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

    Next Story
    ×