என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • சினிமா தியேட்டரின் முன் 3 பேர் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
    • 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி அருகே உள்ள அந்திவாடி பகுதிைய சேர்ந்தவர் ராம் பிரசாத் (29). இவர் ஓசூர் -தளி சாலையில் உள்ள கிராண்ட் சினிமாஸ் தியேட்டரின் மேலாளராக வேலை செய்து வருகிறார்.நேற்று சினிமா தியேட்ட ரின் முன் 3 பேர் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதை தட்டி கேட்ட ராம்பிரசாத்தை 3 பேரும் சேர்ந்து கைகளாலும், கட்டையாலும் தாக்கினர்.

    இதில் பலத்த காயமடைந்த ராம்பிரசாத் மத்திகிரி போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அம்மன் நகரை சேர்ந்த வேணு (27), சாந்தி நிகேந்தன் நகரை சேர்ந்த பிரேம்குமார் (25), அகொண்டப் பள்ளியை சேர்ந்த அசோக்குமார் (29) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்த னர்.

    • பிரகாஷ் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
    • மேல் நிலை நீர்த் தேக்க தொட்டி அமைத்தல் பணி களுக்கு பூமி பூஜை நடந்தது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே கலு கொண்டப்பள்ளி ஊராட்சியில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் கலு கொண்டப்பள்ளி முதல் டால் தொழிற் சாலை வரை ரூ.35.6 லட்சம் மதிப்பில் சாலை பணி, ரூ.17.65 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல், உளிவீரனப் பள்ளியில் ரூ.10.56 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால் வாய் அமைத்தல், வெங்கடாபுரத்தில் ரூ.9.51 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, உளிவீரனப்பள்ளியில் தனியார் நிறுவன பங்களிப்பு சி.எஸ்.ஆர் திட்டத்தில் ரூ.20.08 லட்சம் மதிப்பில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், கப்பக்கல் கிராமத்தில் ரூ.13.10 லட்சம் மதிப்பில் மேல் நிலை நீர்த் தேக்க தொட்டி அமைத்தல் பணி களுக்கு பூமி பூஜை நடந்தது.

    இப்பணிகளை கிருஷ்ண கிரி மேற்கு மாவட்ட செயலா ளர் பிரகாஷ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ். கலு கொண்டப் பள்ளி ஊராட்சி தலைவர் லட்சுமி, துணைத் தலைவர் சைத்திரா சுரேஷ் ஒன்றிய கவுன்சிலர் நாகவேணி பிரபாகர். சீனிவாசன், சுந்தர், சசிகலா சோமசேகர், ரத்னா நாகராஜ். கீதா நாகராஜ் அனிதா நாகராஜ்ரெட்டி லட்சுமி முனிராஜ், ரவி தாமோதர் ரெட்டி, சீனி வாசன், கெஞ்சப்பா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • சொத்து தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.
    • ஜெய்சங்கராவை கைகளால் சரமாரி யாக தாக்கினர்.

    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்அருகே பஸ்தி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கரா (வயது 44). விவசாயியான இவருக்கும், அதே பகு–தியைச் சேர்ந்த அவரது உறவினர்களான நந்தகுமார் (32), மோப்பு ரெட்டி (51), வாசுதேவ ரெட்டி (56), உமாசங்கர் (54) ஆகியோருக்கும் சொத்து தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது நந்த குமார், மோப்பு ரெட்டி, உமாசங்கர், வாசுதேவ ரெட்டி ஆகிய 4பேரும் சேர்ந்து ஜெய்சங்கராவை கைகளாலும், இரும்பு கம்பியாலும் சரமாரி யாக தாக்கினர். இதில் காயமடைந்த ஜெய்சங்கராவை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு 

    • பணப்பெட்டியில் ரூ.63 ஆயிரம் பணத்தை காணவில்லை.
    • முபாரக் பணத்தை திருடியது தெரியவந்தது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பாகலூர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரபிக். இவரது மனைவி ஹர்ஷியா (வயது27). இவர் அதேபகுதியில் சிக்கன் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

    இந்த கடையில் திருப்பத்தூர் மாவட்டம் சிவராஜ்பேட்டையைச் சேர்ந்த முபாரக் (23) என்பவர் வேலை செய்து வந்தார். கடந்த 14-ந் தேதி வழக்கம் போல் கடையை திறந்த ஹர்ஷியா பணப்பெட்டியை திறந்து பார்த்தார்.

    அப்போது அதில் வைத்திருந்த ரூ.63 ஆயிரத்தை காணவில்லை. இதுகுறித்து ஹர்ஷியா ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில் தனது கடையில் வேலை செய்யும் முபாரக் பணத்தை திருடி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் புகார் தெரிவித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் முபாரக்கிடம் விசாரணை நடத்தினர். இதில் முபாரக் பணத்தை திருடியது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.61 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டனர்.
    • ஊழியர்க ளுக்கு 10 சதவீதம் ஊதிய மாற்றம் வழங்க கோரிக்கை .

    கிருஷ்ணகிரி,  

    தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில், பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி நேற்று கிருஷ்ணகிரி மா வட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மண்டல அளவிலான உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டனர். கிருஷ் ணகிரி மாவட்டத் தலைவர் மணி தலைமை தாங்கினார். தர்மபுரி மாவட்டத் தலைவர் ராஜ்குமார் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் சேரலாதன் தொடக்க உரை யாற்றினார்.

    மாவட்ட செயலாளர்கள் சுமதி, சரவணன், மணி, பைரோஸ்கான், குப்புசாமி, விஜயகுமார் ஆகியோர் கோரிக்கைவுரை ஆற்றினா ர்கள். அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தமிழ் செல்வி நிறைவுரை ஆற்றி னார். மாவட்ட பொருளாளர் சிவசண்முகம் நன்றி கூறினார். உண்ணாவிரத போராட் டத்தில், அரசு ஆரம்ப சுகா தார நிலையங்க ளில் பணிபுரியும் ஊழியர்க ளுக்கு 10 சதவீதம் ஊதிய மாற்றம் வழங்கிட வேண்டும்.

    தமிழகத்தில் 186 எச்.ஐ.வி. ஆலோசனை மற்றும் பரிசோ தனை மையங்களை மூட மத்திய அரசு அனுப்பி உள்ள சுற்றறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தியும் பேசப்பட்டன. 

    • போச்சம்பள்ளி வாரச்சந்தையில் குப்பைகள் நிறைந்து சுகாதார சீர்கேடாக உள்ளது.
    • மனு அளித்தாலும், பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பதில்லை.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-

    போச்சம்பள்ளியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம், கூட்டுறவு மூலம் இ-நாம் முறையில் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் விலை நிர்ணயம் செய்வதில் வெளிப்படை தன்மை இல்லை. போச்சம்பள்ளி வாரச்சந்தையில் குப்பைகள் நிறைந்து சுகாதார சீர்கே டாக உள்ளது. இது தொடர்பாக பலமுறை புகாரளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    வேலம்பட்டி ஏரி, பாளேகுளி ஏரி, பில்லுமலை அடிவாரத்தில் இருந்து தென்பெண்ணை ஆறு செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை, அளவீடு செய்து அகற்றிட வேண்டும். கோமாரி நோய் தாக்கி இறந்த காளை மாடுகளுக்கு இழப்பீடு வழங்க, அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    குருபரப்பள்ளி, வேப்பனப்பள்ளி பகுதியில் தனிப்பட்டா கேட்டு விண்ணப்பம் செய்தால், வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். நேரலகிரி ஏரியை அளவீடு செய்ய மனு அளித்தால், நடவடிக்கை எடுக்காமல் தீர்வு காணப்பட்டதாக பதிலளிக்கின்றனர். அலியாளம், பாத்தகோட்டா வழியாக தென்பெண்ணை உபரிநீர் தூள்செட்டி ஏரிக்கு கொண்டு செல் லும் வகையில் கால்வாய் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. தற்போது பணிகள் முடிக்கப்பட்ட வரை உள்ள கிராமங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும். கார்த்திகை பட்டா சாகுப டிக்காக நாட்டுரக தக்காளி, மிளகாய், கத்திரிக்காய் நாற்றுகள் வழங்க வேண்டும். குறைதீர் கூட்டத்தில் தொடர் மனு அளித்தாலும், பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    தொடர்ந்து கலெக்டர் சரயு பேசியதாவது:-

    போச்சம்பள்ளி வாரச் சந்தை தூய்மைப்படுத்தி, அதற்கான புகைப்படங்க ளை அனுப்பி வைக்க தொ டர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காளை மாடுகள் வாங்க விவசாயிகளுக்கு மானி யத்துடன் கடனுதவிகள் அளிக்கப்படுகிறது. மேலும், பால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு பால் வழ ங்க முன்வர வேண் டும். கொரோனா காலக்கட் டத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பாலை கொள் முதல் செய்ய மறுத்தும், விலையும் குறைத்த போதும், ஆவின் நிர்வாகம் பாலை கொள்முதல் நிலையான விலை கொடுத்தது.

    மாவட்டத்தில் புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்படும். மேலும், ஆவின் வளர்ச்சிக்கு பால் உற்பத்தியாளர்கள் உதவிட வேண்டும். நீர்நிலை ஆக்கிர மிப்புகள் அகற்றிட தொடர் புடைய துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கோமாரி நோய் தாக்கிய உயிரிழக்கும் கால்ந டைகளுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு முன்மொ ழிவு அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் விவ சாய சங்க பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    • கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடந்தது.
    • புது மைப்பெண் திட்ட பயனாளி மாணவிகள் தேர்தெடுக்கப்பட்டனர்.

    கிருஷ்ணகிரி, 

    உலக வங்கியின் தமிழ் நாடு பெண்கள் வேலை வாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் 3 முன்னுரிமை துறைகளான சிறு, குறு தொழில் தறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையை சேர்ந்த மாவட்ட அளவி லான பெண் பயனாளி களுடன் உலக வங்கி நிபுணர் குழு கலந்துரை யாடல் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடந்தது.

    இதில் பங்கேற்க கிருஷ் ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த புது மைப்பெண் திட்ட பயனாளி மாணவிகள் சிறப்பாக தேர்தெடுக்கப்பட்டனர். இதையொட்டி கல்லூரி யின் தாளாளரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள், கல்லூரி தலைவர் வள்ளி பெருமாள் ஆகியோர் பேசுகையில், பள்ளி கல்வியை தமிழ் வழியில் படித்த மாண விகளுக்கு ஒவ்வொரு ஆண் டும் அரசு வழங்கும் புதுமை ப்பெண் திட்ட கல்வி உதவித் தொகை சிறப்பான முறை யில் எங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பெற்று தரப்படுகிறது.

    இன்று நடைபெறும் உலக வங்கி நிபுணர்களுடனான சந்திப்புக்கு மாவட்டத்தி லேயே சிறந்த சுயநிதி கல்லூரியாக எங்களை தேர்தெடுத்து எங்கள் மாண விகள் பங்கேற்ற மைக்காக மாவட்ட நிர்வாகத்திற்கு எங்களின் நன்றியை தெரி வித்துக் கொள்கிறோம் என்றனர். இந்த நிகழ்ச்சி யில் கல்லூரி முதல்வர் ஆறு முகம், புதுமை பெண் திட்ட அலுவலர் பாலாஜி, பேரா சிரியை ரேணுகா, நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 6 மணி முதல் 9 மணி வரை கடும் பனிபொழிவு காணப்படு கிறது.
    • வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்ட படி செல்கின்றனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட் டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து, தற்போது பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, தேன்கனிக் கோட்டை, தளி, ஊத்தங்க ரை, போச்சம்பள்ளி, காவே ரிப்பட்டணம் உட்பட மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரை கடும் பனிபொழிவு காணப்படு கிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், தங்களின் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்ட படி செல்கின்றனர்.

    மேலும், காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாண விகள், பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்துடன் செல் கின்றனர். ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் பள்ளி குழந்தை கள் சுவெட்டர் அணிந்து பள்ளிகளுக்கு செல்கிறார்கள். இதே போல், காலையில் காவேரிப் பட்டணம், திம்ம புரம் பகுதி களில் மல்லிகை பூக்கள் அறுவடை செய்ய முடியா மல் விவசாயிகள் அவதியுற்று வருகின்றனர். கடும் பனி காரணமாக குளிர் கால உடைகளான சுவெட்டர், ஜர்கின் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.

    • அரசு தலைமை மருத்துவமனை கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார்.
    • கலெக்டர் கே.எம்.சரயு, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஓசூர்,  

    தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், வருகிற 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருகிறார்.

    ஓசூரில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டிட அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    இதையொட்டி, அவர் கலந்து கொள்ளும் விழா நடைபெறும் இடங்கள், வந்திறங்கும் விமான தளம் மற்றும் முன்னேற்பாடுகளை, மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சரயு, தளி ஊராட்சி ஒன்றியம், பெத்தபேளகொண்டப் பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம், மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதிகளையும், மேலும், மாணவர்களின் ஆங்கிலம், கணித திறன் மற்றும் கற்றல் திறனை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாநகராட்சி ஆணையாளர் சினேகா, தாசில்தார் சுப்பிரமணி. அச்செட்டிப்பள்ளி ஊராட்சி தலைவர் சீனிவாச ரெட்டி மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • மாவட்ட கலெக்டரிடம், கோல்டன் வெஜிடபுள் மார்க்கெட் சங்கத்தினர் கோரிக்கை
    • இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பத்தலபள்ளியில், கடந்த 2003-ம் ஆண்டு காய்கறி மார்க்கெட் தொடங்கப்பட்டது.

    இந்த மார்க்கெட்டில் 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் வைத்து ஓசூர் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சரக்கு வாகனங்களில் நாள்தோறும் அனுப்பி, வியாபாரத்தில் ஈடு பட்டு வருகின்றனர். தற்போது காய்கறிகளை ஏற்றிச்செல்ல 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்வதால் அந்த மார்க்கெட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவ்வப்போது விபத்து களும் நிகழ்ந்து வருகின்றன.

    இந்த நிலையில், சுகாதார சீர்கேடு, போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காய்கறி வியாபாரிகள் ஒருங்கிணைந்து சூளகிரி அருகேயுள்ள சப்படி என்ற இடத்தில் 22 ஏக்கர் பரப்பளவில் புதியதாக 400-க்கும் மேற்பட்ட கடைகளுடன், "கோல்டன் வெஜிடபிள் மார்க்கெட்" என்ற பெயரில் புதிய காய்கறி மார்க்கெட்டை உருவாக்கினர்.

    புதிய "கோல்டன் வெஜிடபிள் மார்க்கெட்டில், கடைகளை அமைக்க பத்தலப்பள்ளி காய்கறி வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கடும் பிரச்சினை மற்றும் இடையூறு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், கோல்டன் வெஜி டபுள் மார்க்கெட் நிறுவனர் ராஜா ரெட்டி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் வியாபா ரிகள் மாவட்ட கலெக்டரிடம், புகார் அளித்தனர். இதையடுத்து, நேற்று கலெக்டர் சரயு, பத்தலப்பள்ளி யில் உள்ள காய்கறி மார்க்கெட்–டில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின்னர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் சரயு கூறினார்.

    பின்னர், கோல்டன் வெஜி டபுள் மார்க்கெட் நிறுவனர் ராஜாரெட்டி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பத்தலப்பள்ளி காய்கறி சந்தையில் இடநெருக்கடி அதிகமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் சந்தைக்கு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாகவும், இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தினந்தோறும் இடையூறு சந்தித்து வருகின்ற னர். எனவேதான், சூளகிரி அருகே சப்படியில் புதிய காய்கறி மார்க்கெட் அமைக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் பத்தலபள்ளி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த ஒரு தனி நபர், தனது சொந்த நலனுக்காக இடையூறு ஏற்படுத்தி வருகிறார். நாங்கள் புதிதாக அமைத்துள்ள கோல்டன் விஜிடெபுள் மார்க்கெட் எந்த பிரச்சினையு மின்றி நல்லமுறையில் இயங்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    காய்கறி மார்க்கெட் சங்கங்க ளின் இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டிருப்பது ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.
    • 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள், பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி, 

      தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகின் சார்பில் தேசிய குழந்தைகள் தினம், உலக குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள் தடுப்பு தினம் மற்றும் சர்வ தேச குழந்தைகள் தினம் ஆகியவை முறையே நவம்பர் 14, 19, 20-ந் தேதிகளில் கடைபிடிக்கப்ப டுகிறது.

    இதையொட்டி குழந்தைக ளுக்கான விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் தொடங் கிய இந்த பேரணியை மாவட்ட வருவாய் அலுவ லர் சாதனைக்குறள் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

     இந்த பேரணி பெங்க ளூரு சாலை வழியாக சென்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இதில் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் குறித்து கோஷங் கள் எழுப்பப்பட்டன. இதில் பல்வேறறு தனியார் கல்லூ ரிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள், அலுவலர்கள் பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக குழந்தைக ளின் பொறுப்புகள், பாது காப்பு, உரிமைகள், சட்டங் கள் குறித்து எடுத்து கூறப் பட்டது. இதில் மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் சுபாஷ், கஸ்தூரி மற்றும் பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

    • பலத்த காயமடைந்த சாக்கப்பாவை பொது மக்கள் மற்றும் வனத்துறையினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • சான மாவு வனப்பகுதியில் 5 காட்டு யானைகளும் சுற்றித் திரிவதால் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள கெலமங்கலம் அடுத்த விருப்பாச்சி நகரை சேர்ந்தவர் சாக்கப்பா (வயது45).

    இவரது மனைவி திம்மக்கா. கூலி வேலை செய்து வரும் சாக்கப்பாவுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். சாக்கப்பா இன்று விருப்பாச்சி நகரிலிருந்து சினிகிரிப்பள்ளி கிராமத்திற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை சாக்கப்பாவை தாக்கி உள்ளது.

    இதில் அவருக்கு வலது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பி உள்ளார்.

    பலத்த காயமடைந்த சாக்கப்பாவை பொது மக்கள் மற்றும் வனத்துறையினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்து ஓசூர் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிகிரிப் பள்ளி பகுதியில் ஒற்றை காட்டு யானையும் சான மாவு வனப்பகுதியில் 5 காட்டு யானைகளும் சுற்றித் திரிவதால் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×