என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிக்கன் கடையில் ரூ.63 ஆயிரத்தை திருடிய வாலிபர் கைது
- பணப்பெட்டியில் ரூ.63 ஆயிரம் பணத்தை காணவில்லை.
- முபாரக் பணத்தை திருடியது தெரியவந்தது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பாகலூர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரபிக். இவரது மனைவி ஹர்ஷியா (வயது27). இவர் அதேபகுதியில் சிக்கன் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த கடையில் திருப்பத்தூர் மாவட்டம் சிவராஜ்பேட்டையைச் சேர்ந்த முபாரக் (23) என்பவர் வேலை செய்து வந்தார். கடந்த 14-ந் தேதி வழக்கம் போல் கடையை திறந்த ஹர்ஷியா பணப்பெட்டியை திறந்து பார்த்தார்.
அப்போது அதில் வைத்திருந்த ரூ.63 ஆயிரத்தை காணவில்லை. இதுகுறித்து ஹர்ஷியா ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில் தனது கடையில் வேலை செய்யும் முபாரக் பணத்தை திருடி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் போலீசார் முபாரக்கிடம் விசாரணை நடத்தினர். இதில் முபாரக் பணத்தை திருடியது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.61 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story






