என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி
- 6 மணி முதல் 9 மணி வரை கடும் பனிபொழிவு காணப்படு கிறது.
- வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்ட படி செல்கின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட் டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து, தற்போது பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, தேன்கனிக் கோட்டை, தளி, ஊத்தங்க ரை, போச்சம்பள்ளி, காவே ரிப்பட்டணம் உட்பட மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரை கடும் பனிபொழிவு காணப்படு கிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், தங்களின் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்ட படி செல்கின்றனர்.
மேலும், காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாண விகள், பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்துடன் செல் கின்றனர். ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் பள்ளி குழந்தை கள் சுவெட்டர் அணிந்து பள்ளிகளுக்கு செல்கிறார்கள். இதே போல், காலையில் காவேரிப் பட்டணம், திம்ம புரம் பகுதி களில் மல்லிகை பூக்கள் அறுவடை செய்ய முடியா மல் விவசாயிகள் அவதியுற்று வருகின்றனர். கடும் பனி காரணமாக குளிர் கால உடைகளான சுவெட்டர், ஜர்கின் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.






