என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியேட்டர்  மேலாளரை  தாக்கிய 3 பேர் சிறையில் அடைப்பு
    X

    தியேட்டர் மேலாளரை தாக்கிய 3 பேர் சிறையில் அடைப்பு

    • சினிமா தியேட்டரின் முன் 3 பேர் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
    • 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி அருகே உள்ள அந்திவாடி பகுதிைய சேர்ந்தவர் ராம் பிரசாத் (29). இவர் ஓசூர் -தளி சாலையில் உள்ள கிராண்ட் சினிமாஸ் தியேட்டரின் மேலாளராக வேலை செய்து வருகிறார்.நேற்று சினிமா தியேட்ட ரின் முன் 3 பேர் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதை தட்டி கேட்ட ராம்பிரசாத்தை 3 பேரும் சேர்ந்து கைகளாலும், கட்டையாலும் தாக்கினர்.

    இதில் பலத்த காயமடைந்த ராம்பிரசாத் மத்திகிரி போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அம்மன் நகரை சேர்ந்த வேணு (27), சாந்தி நிகேந்தன் நகரை சேர்ந்த பிரேம்குமார் (25), அகொண்டப் பள்ளியை சேர்ந்த அசோக்குமார் (29) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்த னர்.

    Next Story
    ×