என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பத்து பைப் பகுதி ஆகிய இடங்களில் மாடுகளை விரட்டி, விரட்டி பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கையும் விடப்பட்டது.

    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சுற்றித்திரிவதாகவும், இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், மாநகராட்சி கூட்டங்களிலும் மாமன்ற உறுப்பினர்கள் இதனை வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மாநகராட்சி ஆணையாளர் சினேகா உத்தரவின்பேரில், நகர நல அலுவலர் பிரபாகர் தலைமையில், துப்பரவு மேற்பார்வையாளர்கள் ரமேஷ், கிரி, மோகன் மற்றும் பணியாளர்கள், ஓசூர் பஸ் நிலையம், உழவர் சந்தை, எம்.ஜி.ஆர் மார்க்கெட், காமராஜ் காலனியில் உள்ள பத்து பைப் பகுதி ஆகிய இடங்களில் மாடுகளை விரட்டி, விரட்டி பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பிடிபட்ட மாடுகள், சிறிது நேரத்தில் நைசாக தப்பித்தும், திமிறிக் கொண்டும் ஓடியதால் சாலையில் சென்ற பொதுமக்கள் அச்சமடைந்து அங்கும், இங்கும் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிகழ்வின்போது 12 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கையும் விடப்பட்டது. 

    • ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் அபராதம் விதிப்பு
    • கடை உரிமையாளருக்கு எச்சரிக்கையும் விடப்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியின் மாநகர நல அலுவலர் பிரபாகர் தலைமையில், சுந்தரமூர்த்தி, கிரி, மோகன், ரமேஷ் உள்ளிட்ட துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியா ளர்கள், ஓசூரில் நாமால்பேட்டை, ஜனப்பர் தெரு ஆகிய இடங்களில் உள்ள கடைகள் மற்றும் பஸ் நிலையம் எதிரில் உள்ள 2 பூ மார்க் கெட்டுகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பைகள் பயன்பாட்டில் உள்ளதா? என நேற்று அதிரடி சோத னை மேற்கொண்டனர்.

    இதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்ததாதகவும், பயன் பாட்டில் வைத்திருந்த தாக வும் 26 கடைகளில் மொத்தம் 122 கிலோ தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டன. மேலும், ஒரு கிலோவுக்கு ரூ 1,000 வீதம் 1,22,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் கடை உரிமையாளருக்கு எச்சரிக்கையும் விடப்பட்டது.

    அதே போல், மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்க ளுக்கும், வாகன ஓட்டிக ளுக்கும் இடையூறு ஏற்படுத் தும் வகையில் மாடுகள் சுற்றித்திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    • ஜி.ரங்கநாத் தலைமை தாங்கி, வரவேற்று பேசினார்.
    • மாணவியருக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    ஓசூர்,  

    ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் 32-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் உள்விளையாட்டரங்கில் நடந்த விழாவிற்கு, கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத் தலைமை தாங்கி, வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக, பெங்களூருவில் உள்ள ஸ்டெல்லர் எஸ்.பி தனியார் நிறுவனத்தின் இயக்குனர் ரங்கராஜன் சீனிவாசன் கலந்துகொண்டு மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி விழாவில் பேசுகையில்:-

    கோவிட்-19 தொற்று நோயின் உலகளாவிய விளைவுகள், வளர்ந்து வரும் சவால்களை எதிர் கொள்ள கல்வி மறு சீரமைப்பின் இன்றிய மையாத தேவை, இந்தியா வின் பொருளாதார வாய்ப்பு கள், தூய்மையான எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பில் உள்ள வாய்ப்புகள் குறித்து விரிவாக பேசினார்.

    மேலும்,தொழில்துறை தேவைகளுடன் கல்வியை சீரமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, உயர்கல்வி, குடும்ப வணிகம், தொழில் முனைவு மற்றும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கைப்பாதைகளுக்கு வழிகாட்டிய அவர்த கவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்பின் உண்மை களை விளக்கினார்.

    தொடர்ந்து 2021-2022- ஆம் கல்வியாண்டில் பயின்ற 919 முதுகலை மற்றும் இளங்கலை மாண வர்களுக்கு, ரங்க ராஜன் சீனிவாசன் பட்டங் களை வழங்கி வாழ்த்தினார். மேலும், குறிப்பிடத்தக்க தரவரிசைப் பெற்ற மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    விழாவில், அதியமான் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன தலைவர் தம்பிதுரை எம்.பி, கல்வி குழுமத்தின் அறங்காவலர்கள் மற்றும் துறை தலைவர்கள் பேரா சிரியர்கள், மாணவ மாணவியர், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் சரயு வழங்கினார்
    • செல்லகுமார் எம்.பி., மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பர்கூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு வார விழாவில் 1737 பேருக்கு ரூ.14 கோடியே 97 லட்சம் மதிப்பிலான கடன உதவிகளை கலெக்டர் சரயு வழங்கினார்.

    பர்கூர் ஊராட்சி ஒன்றி யம், ஒரப்பத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று தொடங்கி யது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். செல்லகுமார் எம்.பி., மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னி லை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஏகாம்பரம் வரவேற்றார். நிகழ்ச்சியில் 1,737 பயனா ளிகளுக்கு ரூ.14 கோடியே 97 லட்சத்து 85 ஆயிரத்து 910 மதிப்பிலான கடன் உதவிகளையும், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் மற்றும் பா ராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    தொடர்ந்து, கலெக்டர் சிறப்பாக செயல்பட்ட 17 கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்களும், அதிகஅளவில் ஊட்டி டீ விற்பனை செய்த 3 கூட்டு றவு விற்பனையாளர்க ளுக்கு பாராட்டு கேடயங்க ளும், அதிக அளவில் அரசு உப்பு விற்பனை செய்த 3 கூட்டுறவு விற்பனையாளர்களுக்கு பாராட்டு கேடயங்களும், அதிக அளவில் கட்டுப்பாடற்ற பொருட்கள் விற்பனை செய்த 3 விற்பனையாளர்களுக்கு பாராட்டு கேடயங்களும், கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற 27 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், கலா ஷேத்ரா பரதநாட்டிய குழு வினர் மற்றும் மங்கள இசை குழுவினர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    முடிவில் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதி வாளர் செல்வம் நன்றி கூறினார்.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கால்நடை பராம ரிப்புத்துறை இணை இயக்கு நர் ராஜேந்திரன், வேளாண் மைத்துறை இணை இயக்குநர் பச்சையப்பன், கிருஷ்ண கிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொது மேலாளர் சுந்தரவடிவேல், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரஜினி செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கலையரசி, துணைப்பதிவா ளர்கள் குமார், சுந்தரம், செல்வம், தாசில்தார் மகேஸ் வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் முகமது பையாஸ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஓம் சாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் ராம்கி (வயது 30). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் திருமணம் நடந்து விவகாரத்து ஆன நிலையில் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இரண்டாவது திருமணம் செய்ய ஆன்லைனில் மணமகள் தேடி பதிவு செய்துள்ளார். இதனை அறிந்த நேதர்லாந்தில் நர்சாக பணிபுரியும் ஒரு பெண் இவரிடம் தொடர்பு கொண்டு ரூ. 1000 மில்லியன் யூரோ பணம் தருவதாக பொய் வாக்குறுதி அளித்தார். அதற்காக நாணய மாற்று கட்டணங்களை செலுத்த ரூ.6 லட்சம் பணத்தை வங்கி கணக்கிற்கு அனுப்ப சொன்னார். அதன்படி இதனை நம்பி சுந்தர் ராம்கி ரூ.6 லட்சத்தை பணத்தை அவருடய வங்கி கணக்கில் செலுத்தினார். பின்னர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டபோது செல்போன் சுட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இருந்தது. தொடர்ந்து முயன்றும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுந்தர் ராம்கி கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    அதேபோல் ஓசூர் அருகே உள்ள பாகலூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கிஷோர். இவரது மனைவிபூர்ணிமா. இவரது செல்போனில் வாட்ஸ்அப்பில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் கூகுள் வரைபட பணி மூலம் சிறிய முதலீட்டில் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இதனை நம்பி மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு ரூ.11,20,156 வங்கி கணக்கின் மூலம் அனுப்பினார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பூர்ணிமா கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    அதே போன்று கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னக்கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 28). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு வாட்ஸ்அப் மூலம் பகுதிநேர வேலையில் நல்ல வருமானம் இருப்பதாக குறுஞ்செய்தி வந்தது. இதனை நம்பி மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு ரூ.5,37,000 பணத்தை அனுப்பினார். பின்னர் அவரை தொடர்பு கொண்டபோது அவரிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கிருஷ்ணகிரி அருகே 2 மகன்களுடன் தாய் மாயம் ஆனார்.
    • போலீசார் விசாரணை.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள மதகொண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சையதுல்லா (வயது 43) இவரது மனைவி பூஜீயா(38) இவர்களுக்கு 12 வயதில் மற்றும் 7 வயதில் என இரு மகன்கள் உள்ளனர். சையதுல்லா அதே பகுதியில் வெல்டிங் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி பூஜீயாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 16ந் தேதி தனது இரு மகன்களை அழைத்து கொண்டு உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் அங்கு செல்லவில்லை. பூஜீயா மற்றும் 2 மகன்கள் குறித்து பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து சையதுல்லா அளித்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து இரு மகன்களுடன் மாயமான தாயை தேடி வருகின்றனர்.  

    • பூட்டிய வீட்டுக்குள் தாய் மகன் தற்கொலை செய்து கொண்டனர்.
    • தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை போலீசார் சேகரித்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வீரமலை பகுதியே சேர்ந்தவர் ராஜம் (வயது 85).

    இவரது மகன் அன்பழகன் (67). கூலித்தொழிலாளியான இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு சாந்தி என்பவருடன் திருமணம் ஆகி மனைவி உள்ளார். இந்த நிலையில் அன்பழகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சாந்தி பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    உடல் நிலை சரியில்லாத தாய் ராஜத்துடன் அன்பழகன் தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் உள்தாழ்ப்பாள் போடப்பட்டு தூக்கி கொண்டிருந்தனர். அப்போது அன்பழகன் வீட்டில் இருந்து திடீரென்று புகையுடன் கூடிய தீயில் கருகிய துர்நாற்றம் வீசியது.

    இதனால் அந்த வழியாக சென்ற அப்பகுதி பொதுமக்கள் சந்தேகம் அடைந்து உடனே நாகரசம்–பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது தீயில் உடல் கருகிய நிலையில் தாய் ராஜமும், அவரது மகன் அன்பழகனும் பிணமாக கிடந்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அவர்களது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் நாகரசம் பட்டி போலீசார் விசாரித்தனர்.

    இதில் உடல் நிலை சரியல்லாமல் கிடக்கும் தாயையும், தன்னையும் சரிவர கவனிக்க ஆட்கள் இல்லாததால், மன வேதனையில் அன்பழகன் தனது உடலிலும், தனது தாயின் உடலிலும் மண்எ ண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை போலீசார் சேகரித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    • கிருஷ்ணகிரி அருகே விபத்தில் பலியானவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • அடையாளம் தெரியவில்லை.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே குருபராத்தப்பள்ளி கிராமத்தின் எதிரே உள்ள ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் ஆண் ஒருவர் சாலையை கடக்க முயச்சித்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் வாகனம் மோதி சம்பவ இடத்திலே இறந்ததார்.

    இறந்தவர் உடல்மீது பல்வேறு வாகனங்கள் எரி சென்றதால் உடலில் இருந்து பாகங்கள் நசுங்கி சிதைந்து உருகுலைந்து காணப்பட்டு கிடந்தது. இதை அறிந்த நெடுஞ்சாலை போலீசார் மீட்பு வாகனம் மற்றும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் சிதறிகிடந்த உடல் பாகங்களை சேகரித்து எடுத்து சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் விசாரித்ததில் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் கம்பெனியில் பணியாற்றும் வடமாநில தொழிலாளியா? அல்லது இப்பகுதியைச் சேர்ந்தவரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓசூரில் விவசாயிகள் போர்வையில் ரவுடித்தனம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
    • போலி அட்டைகள் வைத்திருப்பவர்களை அனுமதிக்க கூடாது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநிலத் தலைவர் ராமகவுண்டர் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில், ஓசூர் உழவர் சந்தையில் வெளியாட்கள் அட்டை இல்லாதவர்கள் போலியான அட்டை வைத்துள்ளவர்கள் சந்தைக்குள்வந்து வியாபாரம் செய்வது தடுக்கவேண்டும். உண்மையான விவசாயிகளுக்கு மட்டுமே உழவர் சந்தையில் அட்டை வழங்கவேண்டும். உழவர் சந்தையில் ரவுடிகள் கடைவைத்து மிரட்டுவதை தடுக்கவேண்டும். ஒரே கடையை பலவருடங்களாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மாற்றவேண்டும்.

    ஆடு, மாடுகள் சந்தைக்குள் வருவதை தடுக்க வேண்டும். குப்பைகளை, தினந்தோறும் அப்புறப்படுத்த வேண்டும். உழவர் சந்தைக்கு நவீன சி.சி.டி.வி கேமரா பொருத்தவேண்டும். உழவர் சந்தையின் கடைகளை, அதிகப்படுத்த வேண்டும். உழவர்சந்தையில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும். உழவர் சந்தைக்கு வெளியில் நடைபாதையில் வைத்துள்ள கடைகளால் அதிகளவில் திருட்டு நடைபெறுகிறது, எனவே, கடைகளை அப்புறப்படுத்தி திருட்டுகளை தடுக்க வேண்டும். உழவர் சந்தைக்கு வரும் அலுவலர்கள் சரியான நேரத்திற்கு வந்து விலை மதிப்பீடு செய்து சந்தை முடியும் வரை இருக்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பெற்றோர்கள் கண்டித்ததால் விபரீத முடிவு
    • பூச்சி கொல்லி மருந்தை குடித்து தூங்கி உள்ளார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கே.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் தருமன். இவரது மகள் லோகேஸ்வரி (வயது19).

    இவர் ஊத்தங்கரை தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாமாண்டு படித்து வந்தார். இவரை நேற்று மாலை கல்லூரி தேர்வில் மதிபெண்கள் குறைவாக வாங்கி யுள்ளதால் அவரது பெற்றோர்கள் திட்டி யுள்ளனர்.

    இதனால் மன உளைச்ச லடைந்த மாணவி லோகேஸ்வரி இரவு வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்து தூங்கி உள்ளார். இன்று காலை நீண்ட நேரமாகியும் மாணவி வெளியே வராததால் பெற்றோர்கள் சென்று பார்த்த பொழுது லோகிஸ்வரி இறந்தது தெரியவந்துள்ளது.

    இது குறித்து போச்சம்பள்ளி போலீ சாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லோகேஸ்வரியின் உடலை கைபற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தம்பிதுரை எம்.பி. குத்து விளக்கேற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.
    • மாணவ, மாணவி யருக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், எம்.பி.பி.எஸ் (2023 - 2024 பேட்ச்) மாணவ, மாணவி யருக்கு வெள்ளை அங்கி (ஒயிட் கோட்) வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது. ஓசூர் அதியமான் கல்லூரி உள் விளையாட்ட ரங்கில் நடந்த விழாவில், செயின்ட் பீட்டர்ஸ் மருத்து வ கல்லூரி மருத்துவ மனை மற்றும் ஆராய்ச்சி நிறுவ னத்தின் நிறுவனர் டாக்டர் மு.தம்பிதுரை எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்து பேசினார். விழா வில் அவர் பேசியதாவது:-

    மருத்துவ துறையில், சேவை புரிவது மிகவும் முக்கியமானது.விழாக்களில் குத்து விளக்கேற்றி வைப்பதில் ஒரு புனிதம், அர்த்தம் உள்ளது. வாழ்க்கை யில் மேல் நோக்கி செல்ல வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே, குத்து விளக்கு ஏற்றப்ப டுகிறது. மாணவர்கள் நன்கு படித்து, அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல குறிக்கோளை கொண்டிருக்க வேண்டும். வாய்ப்புகளை தவற விடக்கூடாது. உங்கள் வாழ்க்கை, தீபச்சுடரை போன்று மேல்நோக்கி செல்ல வேண்டுமே தவிர, கீழ்நோக்கி செல்லக்கூடாது. நீங்கள் எந்த படிப்பு படித் தாலும் சரி, உங்களுக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். மாணவர்கள் நன்றாக படித்து, நல்ல வாய்ப்புகளை பயன்ப டுத்திக் கொண்டு வாழ்க்கை யில் முன்னேற வாழ்த்து கிறேன்.

    செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லுாரியில் சேர்ந்த மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள னர். 5 ஆண்டுகள் முழு கவனம் செலுத்தி படியுங் கள். உங்களுக்கு தேவையா னவற்றை கல்லூரி நிர்வா கம் செய்து தரும்" இவ்வாறு அவர் விழாவில் பேசினார். தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கியும், படிப்பு மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங் கள் ஆகியவற்றை வழங்கி னார். விழாவில், மனநல மருத்துவர் கண்ணன் கிரிஷ், மாணவ, மாணவி யருக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார். முன்ன தாக டீன் சோமசேகர் வரவேற்றார்.

    மருத்துவ இயக்குனர் ராஜா முத்தை யா முன்னிலை வகித்தார். விழாவில், செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரி அறங்கா வலர் டாக்டர் பானுமதி தம்பிதுரை, செயலாளர் டாக்டர் லாசியா தம்பிதுரை, டாக்டர் நம்ரதா தம்பிதுரை, மருத்துவ கல்லூரி துணை முதல்வர் ஆனந்தரெட்டி, இருப்பிட மருத்துவர் பார்வதி, முன்னாள் அமைச் சர் பாலகிருஷ்ணரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் ராஜேந்திரன், மனோகரன், அதியமான் பொறியியற் கல்லுாரி முதல்வர் ஜி.ரங்கநாத், வேளாங்கண்ணி மெட்ரிகுலேசன் பள்ளி குழும அறங்காவலர் கூத்தர சன், மற்றும் அறங்காவலர் சுரேஷ், ஆடிட்டர் மணி ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    • ஐ.வி.டி.பி நிறுவன தலைவர் குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்
    • ஐ.வி.டி.பி நிறுவனம் சீருடைகளை வழங்கியது.

    கிருஷ்ணகிரி,

    ஐ.வி.டி.பி நிறுவனம், மாணவமாணவியருக்கு கல்வி உதவித்தொகை மட்டுமில்லாமல், அவர்க ளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பல்வேறு ஊக் கப்பரி சுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம், காரிமங்கலம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் ஏற்றத் தாழ்வுகளின்றி, சமத்துவ மனப்பான்மையுடன் கல்லூ ரிக்கு வரும் பொருட்டு சென்ற கல்வியாண்டில் இளங்கலை மற்றும் முதுக லை பயிலும் மாணவிகள் அனைவருக்கும் இலவசமாக ஐ.வி.டி.பி நிறுவனம் சீருடைகளை வழங்கியது.

    அதனைத் தொடர்ந்து இக்கல்வி யாண்டும் இளங்க லை முத லாண்டு பயிலும் 640 மாணவிகளுக்கும் மற்றும் முதுகலை முதலா ண்டு பயிலும் 100 மாணவி களுக்கும் தலா ரூ.695- என மொத்தம் ரூ.5,14,300- மதிப்பிலான சீருடைகளை ஐ.வி.டி.பி நிறுவனத் தலை வர் இராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் அவர் கள் வழங்கினார்.

    விழாவில் கலந்துக் கொண்டு பேசிய ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் அவர்கள் இக்கல்லூரிக்கு இதுவரை ரூ.34.1 இலட்சம் மதிப்பிலான கல்வி உதவிகள் வழங்கப்பட் டுள்ளதாகவும், அதனை சிறப்பான முறையில் பயன் படுத்தி வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். விழாவிற்கு முன்னிலை வகித்த கல்லூரியின் முதல் வர் முனைவர். குதா கல்லூரி மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கியமைக்கு ஐ.வி.டி.பி நிறுவனத்திற்கு தனது நன்றியை தெரிவித் துக் கொண்டார்.

    ×