என் மலர்
கிருஷ்ணகிரி
- பஸ் பாஸ் இல்லாததால், பணம் கொ டுத்து டிக்கெட் பெற்றனர்.
- 10 பேர், கண்டக்டரை சூழ்ந்து அவரை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பஸ் நிலையத்திலிருந்து அத்திப்பள்ளி நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சில், நேற்று மாலை, ஓசூர் அரசு ஐ.டி.ஐ மாணவர்கள் சிலர் பயணம் செய்தனர். இவர்கள், மூக்கண்டபள்ளி நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர்கள் என தெரிகிறது. அவர்களிடம் பஸ் பாஸ் இல்லாததால், பணம் கொடுத்து டிக்கெட் பெற்றதாகவும், மேலும் இது தொடர்பாக கண்டக்டருக்கும், அந்த மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
இந்த நிலையில், அந்த பஸ் மீண்டும் ஓசூர் பஸ் நிலையம் வந்தடைந்தது. அப்போது அங்கு காத்திருந்த ஐ.டி.ஐ. மாணவர்கள் 10 பேர், கண்டக்டரை சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினர். இதில் கண்டக்டர் படுகாயம் அடைந்தார். மேலும், தடுக்க வந்த டிரைவரும் தாக்கப்பட்டார். பின்னர், அவர்கள் இரு வரும் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம், பஸ் நிலைய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றன.
- 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடத் தப்பட்ட னர்
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சிவம்பட்டி பகுதியில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பூங்காவ னத்தம்மன் கோவி லில் மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது.
முன்னதாக 24- ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 5- மணிக்கு மகாகணபதி பூஜை, கலச பூஜை, விநாயகா நவகிரஹா, ருத்ரா மற்றும் சாந்தி ஹோம மஹா பூர்ணா குதி நடைபெற்றது.
பின்னர். அதனை தொடர்ந்து சாமிக்கு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் பால் குடங்கள் சுமந்து மேளதா ளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று பாலாபிஷேக தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன'
அதனையடுத்து 9 மணிக்கு மேல் யாக சாலையில் இருந்து புனித நீர் கலசங்களை எடுத்துக் கொண்டு கோவிலை சுற்றி வந்து ராஜ கோபுரம் மற்றும் விமான கோபுரம் ஆகிய கலசங்களுக்கு ஆச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றன.
அப்போது வானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது. பின்னர் மூலவர் சிவன், பூங்காவ னத்தம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.
இக்கும்பாபிஷேக விழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதா னம் வழங்கப் பட்டது. இதற்கான ஏற்பா டுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தி ருந்தனர் விழாவிற்காக 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடத் தப்பட்ட னர்
- டாஸ்மாக் கடை பக்கமாக நடந்த சென்று கொண்டிருந்தார்.
- கூச்சலிடவே அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
மத்திகிரி,
ஓசூர் சித்தனப்பள்ளியை சேர்ந்தவர் முகமது அலி ஜின்னா (43). வெல்டிங் காண்டிராக்டர். இவர் மத்திகிரி பழைய ஆனேக்கல் சாலை டாஸ்மாக் கடை பக்கமாக நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் இவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி பணம் கேட்டனர்.
இவர் கூச்சலிடவே அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து முகமது அலி ஜின்னா மத்திகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அதில் பணம் கேட்டு மிரட்டியது மாரசந்திரத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் (28), பழைய மத்திகிரி சேகர் (34) என தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
- காவேரிப்பட்டினம் அருகே தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை.
- கிருஷ்ணகிரி மனைவி குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்கலா அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மோகன்பாபு (வயது 36). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் காவேரிப்பட்ட ணம் எம்.எஸ். நகரை சேர்ந்தவர் அம்சவள்ளி என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் கணவன் - மனைவி பிரிந்தனர். அம்சவள்ளி காவேரிப்பட்டணம் எம்.எஸ். நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது கணவரிடம் இருந்து விவகாரத்து கேட்டு கிருஷ்ணகிரி குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி மாலை மோகன் பாபு அம்சவள்ளியின் வீட்டிற்கு சென்று தன்னுடன் வருமாறு கூறினார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் மனமுடைந்த மோகன்பாபு தனது மனைவி வீட்டிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மோகன்பாபுவின் தந்தை கருணாநிதி காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலை செய்து கொண்ட மோகன்பாபுவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஓசூர் அருகே லாரியில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலியானார்.
- லாரியை நிறுத்தி டிரைவர் சீட்டில் அமர்ந்தவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது விபத்து.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா கரகூர் அருகே உள்ள சீரியம்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 53). இவர் ஓசூர் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் தங்கி லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.
கடந்த 22-ந் தேதி அவர் தர்காவில் உள்ள இரும்பு குடோன் ஒன்றில் லாரியை நிறுத்தி டிரைவர் சீட்டில் அமர்ந்தவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரம் அவர் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முருகன் இறந்தார். இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஒசூர் அருகே லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சுப்பிரபுரத்தை சேர்ந்தவர் துளசிராமன் (வயது 40). இவர் ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கடந்த 21-ந் தேதி மாலை இவர் பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் சிக்னல் அருகில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி, துளசிராமன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசார ணை நடத்தி வருகிறார்கள்.
- கிருஷ்ணகிரியில் வாக்காளர் பட்டியலின் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடக்கிறது
- அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் களஆய்வு மேற் கொண்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடை பெறுகிறது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கே.எம்.சரயு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி தகுதி நாளாக கொண்டு, 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ள, கடந்த அக்டோபர் 27-ந் தேதி முதல் வருகிற டிசம்பர் 9-ந் தேதி வரை சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்று வருகிறது. இந்த சுருக்கமுறை திருத்தத்தின் ஒரு பகுதியாக கடந்த 4-ந் மற்றும் 5-ந் தேதிகளில் நடந்த சிறப்பு முகாமில் பெறப்பட்ட படிவங்களின் மீது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் களஆய்வு மேற் கொண்டுள்ளனர்.
மேலும், ஏற்கனவே நடைபெற்ற சிறப்பு முகாமில் விண்ணப்பிக்காத இளம் வாக்காளர்கள், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கா தவர்கள், வாக்காளர் பட்டி யலில் தங்களது பெயரை சேர்த்து கொள்ளும் வகையில் நாளை (சனிக்கி ழமை), நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.
இதில், விண்ணப்பங்கள் பெற்று அன்றே பூர்த்தி செய்து உரிய ஆவணங்க ளுடன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம். எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு முகாம்களை பயன்ப டுத்தி வாக்காளர் பட்டி யலில் பெயர் சேர்த்திடவும், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சரிபார்த்தி டவும் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். மேலும், பொது மக்களுக்கு ஏதேனும் சந்தே கங்கள் இருப்பின் 1950 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு கூடுதல் விவ ரங்கள் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
தேன்கனிக்கோட்டை, நவ.24-
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுக்கா கெலமங்கலம் நகரில் உள்ள சத்ய சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலில் சத்ய சாய் பாபாவின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச கல்யாண பெருமா ளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
முன்னதாக பக்தர்கள் சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத யாகசாலை நடைபெற்றது.
பின்னர் தேவி, பூதேவி சீனிவாச பெருமாளுக்கு பல்வேறு வாசனை திரவி யங்களால் அபிஷேகம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்து பட்டு உடுத்தி பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
- ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்
- ரிங் ரோடு நான்கு வழி பாதையாக மாற்றப்பட உள்ளது.
ஓசூர்,
ஓசூர்-தளி சாலையில் டிவிஎஸ் நகர் அருகேயுள்ள ெரயில்வே கேட் வழியாக நாள்தோறும் ஆயிரக்க ணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் இந்த பகுதியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே இந்த ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என ஓசூர் பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து ரெயில்வே துறை மற்றும் தமிழக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பெங்களூரில் இருந்து ஓசூர் வரை செல்லும் ரெயில்வே பாதை தற்போது ஒரு வழி பாதையாக உள்ளது. இதனை ரெயில்வே துறை இரு வழிப்பாதையாக மாற்றி வருகிறது.
இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் செல்லகுமார், ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றும் தமிழக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆகியோர் மேம்பாலம் கட்டப்படவுள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், செல்லகுமார் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"பெங்களூர் முதல் ஓசூர் வரை ரெயில்வே நிர்வாகம் இருவழிப்பாதையை அமைத்து வருகிறது. அடுத்த 20 ஆண்டுகளுக்குப்பிறகு, இந்த இடத்தில் ஏற்படவுள்ள போக்குவரத்து நெரிசலை கணக்கில் கொண்டு மேம்பாலம் கட்டப்பட வேண்டும், ரெயில்வே நிர்வாகம் கூடிய விரைவில் இருவழிப்பாதையை நான்கு வழிப்பாதையாக மாற்றும் நிலையும் உள்ளது.
அதேநேரத்தில் ரெயில்வே கேட் அருகே செல்லும் ரிங் ரோடு நான்கு வழி பாதையாக மாற்றப்பட உள்ளது. எனவே எதிர் காலத்தில் ரெயில்வே பாதை, ரிங் ரோடு ஆகியவற்றுக்கு இடையூறு ஏற்படாமல் ரெயில்வே மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இணைந்து, உயர் தொழில் நுட்பங்களை கையாண்டு மேம்பாலத்தை அமைக்க வேண்டும்". இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
இந்த ஆய்வின்போது, ரெயில்வே துறை மற்றும் தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர் சென்னீரப்பா, மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் மகாதேவன், ஓசூர் மாநகர தலைவர் தியாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- வேணுகோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரிகை போலீசில் திரிஷா புகார் செய்ததாக கூறப்படுகிறது.
- சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து, திரிஷாவை கடத்திச் சென்ற வேணுகோபால் உள்ளிட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே கொல்லப்பள்ளி என்ற கிராமத்தை சேர்ந்த நாராயணப்பா என்பவரது மகள் திரிஷா (19). இவர், ஓசூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இதேபோல், பேரிகை அருகே அலசபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (22), இவரும் அதே கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் பிளஸ்-2 படிக்கும் போதிலிருந்தே ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் திரிஷாவின் வீட்டில், இவர்களது காதலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனை தொடர்ந்து, வேணுகோபாலுடனான காதலை தான் முறித்துக் கொண்டதாகவும், அவர் தொடர்ந்து வற்புறுத்துவதால், வேணுகோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம், பேரிகை போலீசில் திரிஷா புகார் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் திரிஷாவுக்கும், பர்கூர் அருகே எலத்தகிரியை சேர்ந்த ரமேஷ் என்ற வாலிபருக்கும் திருமணம் நடந்தது.
இந்த நிலையில், நேற்று தேர்வு எழுதுவதற்காக திரிஷாவை அவரது கணவர் ரமேஷ் எலத்தகிரியிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஓசூர் அழைத்து வந்தார்.
பின்னர் தேர்வு முடிந்து மீண்டும் மாலையில் மனைவியை அழைத்துக் கொண்டு ஊருக்கு திரும்பும்போது, ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பேரண்டபள்ளி அருகே உள்ள ஒரு பெட்ரோல் நிலைய பகுதியில், ரமேஷ் ஓட்டி வந்த வண்டியை ஒரு கார் வழிமறித்தது. அந்த காரில் 3 பேருடன் வந்த திரிஷாவின் முன்னாள் காதலன் வேணுகோபால், திரிஷாவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி, கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிவிட்டார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ், இது குறித்து ஓசூர் அட்கோ போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து, திரிஷாவை கடத்திச் சென்ற வேணுகோபால் உள்ளிட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், அவர்களை பிடிக்க அட்கோ போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து, 200-க்கும் மேற்பட்ட யானைகள் உணவு தேடி வருவது வழக்கம்.
- யானைகளை விரட்ட பட்டாசு வெடித்தும், மேளம் எழுப்பி யானைகளை விரட்ட முயன்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் காவிரி வடக்கு காவிரி தெற்கு என இரு வன உயிரின சரணாலயங்கள் உள்ளது.
இந்த வன உயிரியல் பூங்காவிற்கு ஆண்டுதோறும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து, 200-க்கும் மேற்பட்ட யானைகள் உணவு தேடி வருவது வழக்கம்.
இந்த ஆண்டு யானைகள் அதன் வலசை சீசனுக்கு முன்னரே கடந்த மாதம் முதல் கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து 50-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை வழி யாக ஓசூர் அடுத்த சான மாவு வனப்பகுதியில் முகாமிட்டன.
இந்த தகவல் அறிந்த வனத்துறையினர், யானைகளின் நடமாட்டம் குறித்து சானமாவு, சினிகிரிபள்ளி கொம்மேபள்ளி, பீர்ஜேப் பள்ளி, ராமாபுரம், ஆழியாளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் காலை நேரங்களில் கிராம மக்கள் வயல்வெளிகள் மற்றும் மற்ற பணிகளில் ஈடுபட்டிருந்ததால் நேற்று மாலை யானைகளை விரட்ட பட்டாசு வெடித்தும், மேளம் எழுப்பி யானைகளை விரட்ட முயன்றனர்.
ஆனால், சினிகிரிபள்ளி வரை சென்ற யானைகள் மீண்டும் சானமாவு பகுதிக்கே வந்ததால் வனத் துறையினரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. எனவே, இன்று மாலை மீண்டும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
- கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மோதி மேஸ்திரி இறந்தார்.
- அரசம்பட்டி ரோட்டில் விபத்து
பாரூர் அருகே உள்ள அரசம்பட்டி பக்கமுள்ள மஞ்சமேட்டை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 66). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 16-ந் தேதி போச்சம்பள்ளி - அரசம்பட்டி சாலையில், அரசம்பட்டி அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த நபர், வேல்முருகன் மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த வேல்முருகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேல்முருகன் இறந்தார். இது குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






