என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
    X

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

    • கிருஷ்ணகிரியில் வாக்காளர் பட்டியலின் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடக்கிறது
    • அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் களஆய்வு மேற் கொண்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடை பெறுகிறது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கே.எம்.சரயு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி தகுதி நாளாக கொண்டு, 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ள, கடந்த அக்டோபர் 27-ந் தேதி முதல் வருகிற டிசம்பர் 9-ந் தேதி வரை சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்று வருகிறது. இந்த சுருக்கமுறை திருத்தத்தின் ஒரு பகுதியாக கடந்த 4-ந் மற்றும் 5-ந் தேதிகளில் நடந்த சிறப்பு முகாமில் பெறப்பட்ட படிவங்களின் மீது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் களஆய்வு மேற் கொண்டுள்ளனர்.

    மேலும், ஏற்கனவே நடைபெற்ற சிறப்பு முகாமில் விண்ணப்பிக்காத இளம் வாக்காளர்கள், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கா தவர்கள், வாக்காளர் பட்டி யலில் தங்களது பெயரை சேர்த்து கொள்ளும் வகையில் நாளை (சனிக்கி ழமை), நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.

    இதில், விண்ணப்பங்கள் பெற்று அன்றே பூர்த்தி செய்து உரிய ஆவணங்க ளுடன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம். எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு முகாம்களை பயன்ப டுத்தி வாக்காளர் பட்டி யலில் பெயர் சேர்த்திடவும், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சரிபார்த்தி டவும் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். மேலும், பொது மக்களுக்கு ஏதேனும் சந்தே கங்கள் இருப்பின் 1950 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு கூடுதல் விவ ரங்கள் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×