கத்தி முனையில் மிரட்டி பணம் கேட்ட 2 பேர் கைது

டாஸ்மாக் கடை பக்கமாக நடந்த சென்று கொண்டிருந்தார். கூச்சலிடவே அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
கத்தி முனையில் மிரட்டி பணம் கேட்ட 2 பேர் கைது
Published on

மத்திகிரி,

ஓசூர் சித்தனப்பள்ளியை சேர்ந்தவர் முகமது அலி ஜின்னா (43). வெல்டிங் காண்டிராக்டர். இவர் மத்திகிரி பழைய ஆனேக்கல் சாலை டாஸ்மாக் கடை பக்கமாக நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் இவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி பணம் கேட்டனர்.

இவர் கூச்சலிடவே அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து முகமது அலி ஜின்னா மத்திகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அதில் பணம் கேட்டு மிரட்டியது மாரசந்திரத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் (28), பழைய மத்திகிரி சேகர் (34) என தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com