search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூங்காவனத்தம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
    X

    கும்பாபிஷேக விழாவில் ராஜகோபுரத்தின் மீது ஹெலிக்காப்டர் மூலம் மலர் தூவும் காட்சி.

    பூங்காவனத்தம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா

    • வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றன.
    • 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடத் தப்பட்ட னர்

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சிவம்பட்டி பகுதியில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பூங்காவ னத்தம்மன் கோவி லில் மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது.

    முன்னதாக 24- ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 5- மணிக்கு மகாகணபதி பூஜை, கலச பூஜை, விநாயகா நவகிரஹா, ருத்ரா மற்றும் சாந்தி ஹோம மஹா பூர்ணா குதி நடைபெற்றது.

    பின்னர். அதனை தொடர்ந்து சாமிக்கு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் பால் குடங்கள் சுமந்து மேளதா ளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று பாலாபிஷேக தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன'

    அதனையடுத்து 9 மணிக்கு மேல் யாக சாலையில் இருந்து புனித நீர் கலசங்களை எடுத்துக் கொண்டு கோவிலை சுற்றி வந்து ராஜ கோபுரம் மற்றும் விமான கோபுரம் ஆகிய கலசங்களுக்கு ஆச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றன.

    அப்போது வானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது. பின்னர் மூலவர் சிவன், பூங்காவ னத்தம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.

    இக்கும்பாபிஷேக விழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதா னம் வழங்கப் பட்டது. இதற்கான ஏற்பா டுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தி ருந்தனர் விழாவிற்காக 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடத் தப்பட்ட னர்

    Next Story
    ×