என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
- ஜி.ரங்கநாத் தலைமை தாங்கி, வரவேற்று பேசினார்.
- மாணவியருக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஓசூர்,
ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் 32-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் உள்விளையாட்டரங்கில் நடந்த விழாவிற்கு, கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத் தலைமை தாங்கி, வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக, பெங்களூருவில் உள்ள ஸ்டெல்லர் எஸ்.பி தனியார் நிறுவனத்தின் இயக்குனர் ரங்கராஜன் சீனிவாசன் கலந்துகொண்டு மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி விழாவில் பேசுகையில்:-
கோவிட்-19 தொற்று நோயின் உலகளாவிய விளைவுகள், வளர்ந்து வரும் சவால்களை எதிர் கொள்ள கல்வி மறு சீரமைப்பின் இன்றிய மையாத தேவை, இந்தியா வின் பொருளாதார வாய்ப்பு கள், தூய்மையான எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பில் உள்ள வாய்ப்புகள் குறித்து விரிவாக பேசினார்.
மேலும்,தொழில்துறை தேவைகளுடன் கல்வியை சீரமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, உயர்கல்வி, குடும்ப வணிகம், தொழில் முனைவு மற்றும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கைப்பாதைகளுக்கு வழிகாட்டிய அவர்த கவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்பின் உண்மை களை விளக்கினார்.
தொடர்ந்து 2021-2022- ஆம் கல்வியாண்டில் பயின்ற 919 முதுகலை மற்றும் இளங்கலை மாண வர்களுக்கு, ரங்க ராஜன் சீனிவாசன் பட்டங் களை வழங்கி வாழ்த்தினார். மேலும், குறிப்பிடத்தக்க தரவரிசைப் பெற்ற மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விழாவில், அதியமான் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன தலைவர் தம்பிதுரை எம்.பி, கல்வி குழுமத்தின் அறங்காவலர்கள் மற்றும் துறை தலைவர்கள் பேரா சிரியர்கள், மாணவ மாணவியர், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






