என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதலமைச்சர் வருகையையொட்டி முன்னேற்பாடு பணிகள் - அதிகாரிகள் ஆய்வு
- அரசு தலைமை மருத்துவமனை கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார்.
- கலெக்டர் கே.எம்.சரயு, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஓசூர்,
தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், வருகிற 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருகிறார்.
ஓசூரில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டிட அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதையொட்டி, அவர் கலந்து கொள்ளும் விழா நடைபெறும் இடங்கள், வந்திறங்கும் விமான தளம் மற்றும் முன்னேற்பாடுகளை, மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சரயு, தளி ஊராட்சி ஒன்றியம், பெத்தபேளகொண்டப் பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம், மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதிகளையும், மேலும், மாணவர்களின் ஆங்கிலம், கணித திறன் மற்றும் கற்றல் திறனை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாநகராட்சி ஆணையாளர் சினேகா, தாசில்தார் சுப்பிரமணி. அச்செட்டிப்பள்ளி ஊராட்சி தலைவர் சீனிவாச ரெட்டி மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.






