என் மலர்
உள்ளூர் செய்திகள்

வியாபாரிகள் சங்கத்தினரிடையே உருவாகியுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்
- மாவட்ட கலெக்டரிடம், கோல்டன் வெஜிடபுள் மார்க்கெட் சங்கத்தினர் கோரிக்கை
- இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பத்தலபள்ளியில், கடந்த 2003-ம் ஆண்டு காய்கறி மார்க்கெட் தொடங்கப்பட்டது.
இந்த மார்க்கெட்டில் 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் வைத்து ஓசூர் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சரக்கு வாகனங்களில் நாள்தோறும் அனுப்பி, வியாபாரத்தில் ஈடு பட்டு வருகின்றனர். தற்போது காய்கறிகளை ஏற்றிச்செல்ல 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்வதால் அந்த மார்க்கெட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவ்வப்போது விபத்து களும் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில், சுகாதார சீர்கேடு, போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காய்கறி வியாபாரிகள் ஒருங்கிணைந்து சூளகிரி அருகேயுள்ள சப்படி என்ற இடத்தில் 22 ஏக்கர் பரப்பளவில் புதியதாக 400-க்கும் மேற்பட்ட கடைகளுடன், "கோல்டன் வெஜிடபிள் மார்க்கெட்" என்ற பெயரில் புதிய காய்கறி மார்க்கெட்டை உருவாக்கினர்.
புதிய "கோல்டன் வெஜிடபிள் மார்க்கெட்டில், கடைகளை அமைக்க பத்தலப்பள்ளி காய்கறி வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கடும் பிரச்சினை மற்றும் இடையூறு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், கோல்டன் வெஜி டபுள் மார்க்கெட் நிறுவனர் ராஜா ரெட்டி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் வியாபா ரிகள் மாவட்ட கலெக்டரிடம், புகார் அளித்தனர். இதையடுத்து, நேற்று கலெக்டர் சரயு, பத்தலப்பள்ளி யில் உள்ள காய்கறி மார்க்கெட்–டில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின்னர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் சரயு கூறினார்.
பின்னர், கோல்டன் வெஜி டபுள் மார்க்கெட் நிறுவனர் ராஜாரெட்டி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பத்தலப்பள்ளி காய்கறி சந்தையில் இடநெருக்கடி அதிகமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் சந்தைக்கு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாகவும், இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தினந்தோறும் இடையூறு சந்தித்து வருகின்ற னர். எனவேதான், சூளகிரி அருகே சப்படியில் புதிய காய்கறி மார்க்கெட் அமைக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் பத்தலபள்ளி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த ஒரு தனி நபர், தனது சொந்த நலனுக்காக இடையூறு ஏற்படுத்தி வருகிறார். நாங்கள் புதிதாக அமைத்துள்ள கோல்டன் விஜிடெபுள் மார்க்கெட் எந்த பிரச்சினையு மின்றி நல்லமுறையில் இயங்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
காய்கறி மார்க்கெட் சங்கங்க ளின் இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டிருப்பது ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






