என் மலர்
உள்ளூர் செய்திகள்

இரு சமூகத்தினரிடையே மோதல்: ஆதிதிராவிடர் நல ஆணைய இயக்குநர் ஆய்வு
- கோவில் புதுப்பிக்கும் பணியின் போது இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது.
- வீடுகளுக்கு தீ வைக்க முயன்ற சம்பவமும் நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த சோக்காடியில் இரு சமூகத்தினரிடையே நடந்த மோதல் சம்பத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை ஆதிதிராவிடர் நல ஆணைய இயக்குநர் நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி அடுத்த சோக்காடி கிராமத்தில், மாரியம்மன் கோயில் புதுப்பிக்கும் பணியின் போது இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கற்கள் வீசி தாக்கியும், வீடுகளுக்கு தீ வைக்க முயன்ற சம்பவமும் நடந்தது. இதில் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில் சோக்கா டியில் இருதரப்பினரிடையே நடந்த மோதல் பகுதிகளை, மாநில ஆதிதிராவிடர் நல ஆணைய இயக்குனர் ரவிவர்மன், மாநில ஆதிதிராவிடர் நல ஆணைய ஆலோசகர் ராமசாமி ஆகியோர், மாவட்ட கலெக்டர் சரயு முன்னிலையில் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தும் ஆறுதல் கூறிய அவர்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்திலும் பங்கேற்றனர். இதில், மாவட்ட எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரமேஷ்குமார், ஏடிஎஸ்பி விவேகானந்தன், கிருஷ்ணகிரி டிஎஸ்பி தமிழரசி, தாசில்தார் விஜயகுமார், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.






