என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்
- கிருஷ்ணகிரியில் மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
- 24 முதல், 35 வயதிற்கு உட்பட்ட வர்கள் கலந்து கொள்ளலாம்.
108 ஆம்புலன்ஸ் சேவை கிருஷ்ணகிரி மாவட்ட மேலாளர் ரஞ்சித் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
108 ஆம்புலன்ஸ் சேவைக் கான அவசரகால மருத்துவ உதவியாளர் மற்றும் டிரை வர் பணிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் கிருஷ்ண கிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவ னத்தில் நாளை (சனிக்கி ழமை) நடக்கிறது. இதில், மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு, பி.எஸ்.சி., நர்சிங், பி.எஸ்.சி. (விலங்கியல்) பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி அல்லது பிளஸ்-2 வுக்கு பிறகு மருத்துவதுறை சார்பில் இரண்டாண்டு படிப்பு படித்த, 19 முதல், 30 வரை உள்ள, இரு பாலரும் கலந்து கொள்ள லாம்.
அதே போல டிரைவர் பணிக்கு, பத்தாம் வகுப்பு முடித்த, இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்தி ருக்கும், 162.5 செ.மீ., உயரம் குறையாமல் உள்ள, 24 முதல், 35 வயதிற்கு உட்பட்ட வர்கள் கலந்து கொள்ள லாம். மூன்று ஆண்டுகள் அனுபவம், ஒரு வருடபேட்ஜ் வாகன உரிமம் வைத்திருக்க வேண்டும்.
இதில், எழுத்து தேர்வு, உடற்தகுதி உள்ளிட்டவை களுக்கு பின் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டு, 12 மணி நேர ஷிப்ட் முறையில். இரவு மற்றும் பகல் ஷிப்ட்டு களில் பணியமர்த்தப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.






