என் மலர்
உள்ளூர் செய்திகள்

நடைமேடை அமைக்கும் இடத்தில் மேயர் சத்யா நேரில் ஆய்வு
- ஓசூரில் நடைமேடை அமைக்கும் இடத்தில் மேயர் சத்யா நேரில் ஆய்வு செய்தார்.
- 8 கி.மீ தொலைவிற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் நடப்போம் நலம் பெறுவோம், என்கிற திட்டத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் விதமாக வருகிற 4-ந் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இதனையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, 5 வது வார்டிற்கு உட்பட்ட அண்ணாமலை நகர் பகுதியில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள 8 கி.மீ தொலைவிற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது.
இதனை ஒசூர் மேயர் எஸ்.ஏ.சத்யா நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதமாக முடிக்க அறிவுறுத்தினார்.
இதில் மாநகர நல அலுவலர் பிரபாகர், மண்டல தலைவர் ரவி, கவுன்சிலர் நாகராஜ், மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Next Story






