என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீடுகளை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்: பொதுமக்களுக்கு, கலெக்டர் அறிவுரை
- வீடுகளை சுகாதாரமாக பராமரிக்க கலெக்டர் அறிவுரை வழங்கினர்.
- மழைக்காலம் என்பதால், காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலை முற்றி லும் தவிர்க்க அனைத்து வீடுகளையும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க வீடுகளை பொதுமக்கள் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட் டத்தில் நவம்பர் 1-ந் தேதி உள்ளாட்சி தினத்தை யொட்டி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சி கள், பேரூராட்சிகள், கிருஷ் ணகிரி நகராட்சி மற்றும் ஓசூர் மாநகராட்சி பகுதி களில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நேற்று நடந்தது.
அதன்படி, கிருஷ்ணகிரி ஒன்றியம் கங்கலேரியில் நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
தற்போது மழைக்காலம் என்பதால், காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலை முற்றி லும் தவிர்க்க அனைத்து வீடுகளையும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக நீர் தொட்டிகள் குளோரின் கொண்டு சுத்த மாக வைத்துக்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்ச லை ஏற்படுத்தும் ஏ.டி.எஸ் வகை கொசுக்கள் சுத்தமான நீரில் தான் வளர்கிறது.
எனவே, தண்ணீர் தொட்டிகள், பாத்திரங்கள் மூடிய நிலையிலேயே வைக்க வேண்டும். வீடுகளை சுற்றி மழைநீர் தேங்காதவாறு சுத்தப்படுத்த வேண்டும். காய்ச்சல் அறி குறி இருந்தால் சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளாமல், அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகா தார நிலையம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அதே போல வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள தால், தாழ்வான மற்றும் மழைநீர் தேங்ககூடிய பகுதி களை அடையாளம் கண்டு, வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை நீக்கி மழைநீர் வழிந்தோடுவதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும். தங்கள் குழந்தைகளை தவ றாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும், அவர்கள் பள்ளி யில் கல்வியை கற்பதோடு இல்லாமல், வீட்டிற்கு வந்த வுடன் தினந்தோறும் படிக் கின்றனரா என்பதை கண்கா ணிக்க வேண்டும். நமது மாவட்டத்தில், குறிப்பாக மலை கிராமங்களில் குழந் தை திருமணத்தை முற்றிலும் தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வா கம் சார்பில் பல்வேறு நடவடிக் கைககள் மற்றும் விழிப்பு ணர்வு ஏற்படுத் தப்பட்டு வருகிறது. குழந்தை திருமணத்தை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அவ்வாறு குழந்தை திரு மணம் செய்பவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை கள் எடுக்கப்படும். அதேப் போல கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டறியும் ஸ்கேன் செய்வ தை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு ஆணா? பெண் ணா? என்பதை கண்டறியும் ஸ்கேன் சென்டர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று காலம் முதல் தற்போது முடிவடைந்து நம்ம ஊரு சூப்பர் இயக் கத்தில் தங்களை முழுமை யாக ஈடுபடுத்தி சிறப்பாக சேவை புரிந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் கிராம ஊராட்சியின் வளர்ச் சியில் முதுகெ லும்பாக திகழும் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஊக்கு விக்கும் பொருட்டு, சிறப் பாக செயல்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு பொன்னடை அணிவித்து, கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.
கூட்டத்தில், வேளாண் மைத்துறை இணை இயக்கு நர் கிருஷ்ணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மகாதேவன், மாவட்ட கலெக் டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சீனிவாசன், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் செந்தில்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் ஜெயந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ராஜேஷ், தாசில்தார் விஜய குமார், ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






