என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்பெண்ணை ஆற்றில் கழிவுகள் கலந்த தண்ணீர் வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி
    X

    தென்பெண்ணை ஆற்றில் கழிவுகள் கலந்த தண்ணீர் வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி

    • ஒசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் கழிவுகள் கலந்த தண்ணீர் வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடை்தனர்.
    • ஆற்றின் கரையில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் உள்ளன.

    கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் தென்பெண்ணை ஆற்றின் அருகே ஏராளமான தனியார் தொழிற் சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் ஓசூர் கெல வரப்பள்ளி அணை நீரில் கலந்து துர்நாற்றத்துடனும், நுரை பொங்கி வெளியேறி வருகிறது. இந்த நிலையில் நேற்று ஓசூர் அருகே தொரப்பள்ளி பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றுக்கு வந்த நீர், கறுப்பு நிறமாகவும், நுரையுடன் ஓடி வந்ததை கண்டு விவசாயிகளும், பொதுமக்களும் அதிர்ச்சிய டைந்தனர். மேலும் இந்த நீர் விஷத்தன்மை கலந்த நீர் என்றும் அவர்கள் அச்சமடைந்துள்ளனர். தொரப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான நிலப்பரப்பில் நெல், கேழ்வரகு மற்றும் தக்காளி, முட்டைக்கோஸ், பீன்ஸ் போன்ற காய்கறிகளும் சாமந்தி போன்ற பூக்களும் விளைவிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், நச்சுத் தன்மையுடன் கறுப்பு நிறத்தில் தண்ணீர், தென் பெண்ணை ஆற்றில் பாய்ந்து வருவதால் விவசாயப் பயிர்கள் மிகவும் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் வேதனை அடைந் துள்ளனர். மேலும் இது சம்பந்தமாக அதிகாரிகள் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×