என் மலர்
உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு-2 பேர் சிறையில் அடைப்பு
- தேன்கனிக்கோட்டையில் டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுப்பாட்டில்களை திருடி சென்ற 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- ரூ.1.90 லட்சம் பணத்தை திருடி சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே இருதுக்கோட்டை கிராமத்தில் கடந்த மாதம் 16 ந்தேதி இரவு டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு உள்ளே புகுந்து 10 பாக்ஸ் மதுபானங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இது குறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் ராம–சாமி தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதேபோன்று தேன்கனிக் கோட்டை சாகர் லே அவுட்டை பகுதியை சேர்ந்தவர் ஜாகீர்(39). இவர் அந்த பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த மாதம் விபத்தில் காயமடைந்த தனது உறவினரை பார்க்க ஓசூர் சென்றார். அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் ரூ.1.90 லட்சம் பணத்தை திருடி சென்றனர். இந்த இரு திருட்டு சம்ப வங்கள் குறித்து சப் இன்ஸ்பெக்டர் ஜெய கணேஷ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் ஓசூர் அருகே உள்ள பேளகொண்டப் பள்ளியில் வசிக்கும் மாணிக்கம் மகன் வினோத் குமார் (31), மற்றும் ஓசூர் மூக்கண்டப்பள்ளி அன்னை சத்யா நகரை சேர்ந்த பிரபு (எ) தர்மலிங்கம் (33) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து தேன்கனிகோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.






