என் மலர்
உள்ளூர் செய்திகள்

மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி
- சூளகிரி அரசு பள்ளியில் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் , சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மஞ்சப்பை விழிப்பு பேரணி நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கி மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து பள்ளி மாண வர்கள் ஒசூர்-கிருஷ்ணகிரி சாலையில் பேரணியாக சென்று விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கொண்டு பொது மக்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ராம சந்திரன், ஒருங்கி ணைப்பாளர் வெங்கடேஷ் , ஆசிரியர்கள் , பள்ளியின் தேசிய பசுமை படை ஒருங்கி ணைப்பாளர் ஆபிதா பானு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமன், துணைத் தலைவர் ஷானு, பொருளாளர் அஷ்பர் செயலாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பி னர்கள் சுதாகர், சேகர், ஜெபஸ்றின்மற்றும் உறுப்பி னர்கள் , மாண வர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர் .
நிகழ்ச்சிக்கான ஏற்பா டுகளை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கி ணைப்பாளர் தீர்த்தகிரி மற்றும் ஓசூர் மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பாலாஜி ஆகியோர் செய்து இருந்தனர். ஆசிரியர் கணேசன் , முகமது அலி, கோவிந்தராஜ், செல்வம் உடன் இருந்தனர்.






