என் மலர்
கன்னியாகுமரி
- ரெயில் மாறி ஏறியதால் சம்பவம்
- நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
நாகர்கோவில் :
கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம் வழியாக திப்ரூகருக்கு விவேக் எக்ஸ் பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கன்னியாகுமரியில் இருந்து வாரத்தில் திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமை களில் இயக்கப்படுகிறது.
மாலை 5.20 மணிக்கு இந்த ரெயில் புறப்பட்டு 5.45 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடையும். நேற்று இந்த ரெயில் கன்னியாகுமரியில் இருந்து சிறிது தாமதமாக புறப்பட்டது. நாகர்கோவி லுக்கு மாலை 6.05 மணிக்கு வந்து சேர்ந்தது. நாகர்கோ வில் ரெயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தில் ரெயில் வந்ததால் கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரெயி லுக்காக காத்திருந்த பயணி கள் சிலர் திப்ரூகர் ரெயிலில் ஏறினார்கள்.
ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் ரெயிலில் ஏறிய பயணிகளில் ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினார். இதைத்தொடர்ந்து ரெயி லில் ஏறிய பயணிகள் அந்த ரெயிலில் இருந்து இறங்கி னார்கள். இதைத்தொடர்ந்து ரெயிலில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தவர் யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட னர். ஆனால் யார் என்று தெரியவில்லை. இதைத்தொ டர்ந்து ரெயில் 10 நிமிடம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் தொடர் கதையாக நடந்து வருகிறது. கன்னியா குமரியில் இருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் மாலை 6 மணிக்கு நாகர்கோ வில் முதலாவது பிளாட்பா ரத்தில் வந்து சேரும். நேற்று திப்ரூகர் ரெயில் தாமதமாக வந்ததால் கன்னியாகுமரி ரெயில் என்று நினைத்து பயணி கள் ரெயில் பெட் டிக்குள் ஏறி உள்ளனர்.
ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் தான் திப்ரூகர் ரெயில் என்பதை உணர்ந்த பயணிகள் ரெயிலை விட்டு கீழே இறங்கி உள்ளனர். இதற்கு முறையான அறி விப்பு இல்லாத காரணம் என்று பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து ரெயில் பயணிகள் கூறுகையில், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலும், திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரெயி லும் நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வரக்கூடிய நேரத்தில் சிறிது வித்திய சம்தான் உள்ளது. 2 ரெயில் களும் முதலாவது பிளாட்பா ரத்திலேயே வந்து செல் கின்றன. இதனால் பயணிகள் சிலர் ரெயிலில் உள்ள அறிவிப்பை கவனிக்கா மல் ஏறி விடுகிறார்கள். இதை சரி செய்வதற்கு மாற்று ஏற்பாடுகள் ஏதாவது செய்ய வேண்டும் என்றனர்.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கருத்து
- மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
நாகர்கோவில் :
முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவை பாரத் என்று அழைப்பதில் அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளை பரப்பி மக்களை குழப்பி வருகிறார்கள். இந்தியாவை பாரத் என்று அழைப்பதில் தவறு இல்லை. ராகுல்காந்தி நடை பயணம் சென்றபோது அதற்கு பாரத் யோதார் என்றே பெயர் வைத்திருந்தார்.
பாரத் என்ற பெயர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள பெயர் தான். 2016-ம் ஆண்டில் இந்தியாவை பாரத் என அழைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அப்போதைய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு தெரிவிக்கையில், பாரத் என்று அழைக்க விரும்புவோர் பாரத் என்றும், இந்தியா என்று அழைக்க விரும்புவோர் இந்தியா என்றும் அழைக்கலாம். இது அவரவரின் தனிப்பட்ட விருப்பம் என தெளிவாக தெரிவித்ததுடன், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 1-ல் எந்த மாற்றத்தையும் கருத்தில் கொள்ள வேண்டிய சூழ்நிலை இல்லை' எனக்கூறி தள்ளுபடி செய்தனர்.
மீண்டும் 2020-ல் இதே வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பாப்டேவிடம் இந்தியா என்று அழைப்பதா, பாரத் என்று அழைப்பதா என்ற வழக்கு ஒன்று வந்தது. இந்த மனுவை ரிட் மனுவாக மத்திய அரசுக்கு அனுப்பியது. இதன் மீது மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 1-ன் படி பாரத் என்ற பெயரை பயன்படுத்துவதில் எந்தவித தவறும் இல்லை என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் டாக்டர் அம்பேத்கார் அவர்களால் எப்போது வடிவமைக்கப்பட்டதோ, அப்போதே சட்டமன்ற அரசியலமைப்பு விதிகளின்படி இதுபற்றி விவாதம் வந்தது. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பாப்டே அனுப்பியிருந்த ரிட் மனு தொடர்பாக மத்திய அரசு பாரத் என்று அழைக்க முடிவு எடுத்திருக்கலாம். எனவே, இதன் வாயிலாக இந்தியா என்ற பெயருக்கு மாற்றாக பாரத் என்று அழைப்பதில் எவ்வித தவறுமில்லை. இதை உணராமல் அரசியல் கட்சிகள் மக்களை குழப்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாலை 6 மணியளவில் படகுகள் நிற்கும் பகுதியில் அவரது உடல் மிதந்துள்ளது
- பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரிய வரும்
குளச்சல் :
நாகர்கோவில் கோட்டார் இளங்கடையை சேர்ந்தவர் தாசன். இவரது மகன் சகாய சுரேஷ் (வயது 35).
இவர் முட்டம் தனியார் மீன்பிடித் துறைமுகம் அருகில் உள்ள ஒரு மரைன் சர்வீஸ் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.பிணமாக மிதந்தார்திருமண மாகாத சகாய சுரேஷ், சம்பவத்தன்று வழக்கம் போல் வேலைக்குச் சென்றார். இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் படகுகள் நிற்கும் பகுதியில் அவரது உடல் மிதந்துள்ளது. இதனை பார்த்த துறைமுக காவலர் சந்திரன், குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சகாய சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில் சகாய சுரேசுக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததும், அதற்கு சிகிச்சை பெற்று வந்த அவர், விசைப்படகுகளில் வேலைக்கு சென்ற நேரத்தில் வலிப்பு வந்து தவறி கடலில் விழுந்ததில் இறந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
- பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 6.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
- பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 37.90 அடியாக உள்ளது
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மாம்பழத் துறையாறு, பாலமோர் பகுதிகளில் நேற்றும் மழை பெய்தது. பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 6.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
பூதப்பாண்டி, களியல், குழித்துறை, ஆணைக் கிடங்கு, முக்கடல் அணை பகுதிகளிலும் மழை நீடித்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப் பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. காலையில் பெய்த மழையின் காரணமாக பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவி கள் குடைபிடித்தவாறு சென்றனர்.
குலசேகரம், தக்கலை, இரணியல், குளச்சல் பகுதிகளிலும் இன்று காலையில் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கும் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 18.55 அடி யாக உள்ளது. அணைக்கு 455 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 583 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 37.90 அடியாக உள்ளது. அணைக்கு 197 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
- தீயணைக்கும் படையினர் மீட்டு வனத்துறையினரிட ம் ஒப்படைத்தனர்
- பாம்பு சுமார் 6 அடி நீளம் கொண்டதாக இருந்தது
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள அஞ்சுகிராமம் விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் சந்தீபன் (வயது 23). இவர் சுற்றுலா வேன் டிரைவர் ஆவார். இவர் தனது மனைவியுடன் நேற்று மாலை கன்னியாகுமரிக்கு இருசக்கர வாகனத்தில் சுற்றுலா வந்திருந்தார். இவர் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா இடங்களை சுற்றி பார்த்துவிட்டு அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவை பார்வையிட வந்தார். அங்கு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சுற்றுச்சூழல் பூங்காவை பார்வையிட சென்றார்.
பூங்காவை பார்வையிட்டு விட்டு திரும்பி வந்து தனது இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றார். அப்போது வாகனத்துக்குள் கொடிய விஷப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை பார்த்து அலறினார். உடனே அவர் இதுபற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட் தம்பி, நிலைய சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருசக்கர வாகனத்திற்குள் பதுங்கி இருந்த கண்ணாடி வீரியன் பாம்பை லாவகமாக பிடித்தனர்.
அந்த பாம்பு சுமார் 6 அடி நீளம் கொண்டதாக இருந்தது. பின்னர் அவர்கள் அந்த பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த விஷப்பாம்பை பாதுகாப்பான அடர்ந்த காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.
- களியல் வனசரக அலுவலகம் பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- 2 நாட்களுக்கு முன்பு தான் கேரளாவுக்கு கடத்த முயன்ற 7½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு அதிக அளவு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி றார்கள். உணவுப்பொருள் கடத்தல் பிரிவு இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தர வின்பேரில் மதுரை மண்டல உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சூப்பிரண்டு விஜய கார்த்திக் ராஜ் தலை மையில் குமரி மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு சோதனை நடந்து வருகிறது. களியல் வனசரக அலுவலகம் பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினி டெம்போ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதை யடுத்து போலீசார் அதி லிருந்த 4000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த னர். மேலும் ரேஷன் அரிசியை கடத்தி வந்த தெள்ளாந்தியை சேர்ந்த மகாராஜன் (வயது 29), வினோத் பாபு (27) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தியபோது ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தனர். ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா என்ற கோணத்தி லும் விசாரணை நடத்தப் பட்டது. இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.ரேசன் அரிசியை கடத்தி வந்த வாகன உரிமையாளர் சாம்ராஜ், கேரளாவை சேர்ந்த அன்வர் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் கேரளாவுக்கு கடத்த முயன்ற 7½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மேலும் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விஜய்வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
- அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடந்தது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு ஒற்றையால் விளை பகுதியில் விஜய் வசந்த் எம்.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடந்தது.
பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், கவுன்சிலர் சுஜா அன்பழகன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த், அடிக்கலை நாட்டி வைத்து புதிய அங்கன்வாடி அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் குமரி கிழக்கு காங்கிரஸ் கமிட்டி செயலா ளர் வக்கீல் சீனிவாசன், அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சாம் சுரேஷ்குமார், , அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன், பேரூ ராட்சி சுகாதார அதிகாரி முருகன், கவுன்சிலர்கள் ஆனிரோஸ் தாமஸ், அட்லின் சேகர், ஒற்றையால்விளை இந்து நாடார் சமுதாய வகை முத்தாரம்மன் கோவில் டிரஸ்ட் தலைவர் பாலசுந்தரம், முன்னாள் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தாமஸ், கொட்டாரம் பேரூர் காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் ஆதி லிங்கபெருமாள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தண்டவாள பகுதியில் செல்போனில் பேசியபடி நடந்து வந்ததால் கொச்சுவேலி பயணிகள் ரெயில் வந்ததை ஐஸ்வர்யா கவனிக்கவில்லை.
- சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல்:
இரணியல்-பள்ளியாடிக்கு இடைப்பட்ட ரெயில்வே தண்டவாள பகுதியில் இளம்பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் தலைமையிலான ரெயில்வே போலீசார் விரைந்து சென்று ரெயிலில் அடிபட்டு இறந்தவர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மேக்கோடு பழவந்தான் கோணம் அய்யாதுரை மகள் ஐஸ்வர்யா (வயது 19) என்பது தெரியவந்தது.
இவர் நேற்று மாலை தண்டவாள பகுதியில் நடந்து வரும்போது செல்போனில் பேசி கொண்டு வந்ததாகவும், இதனால் அவர் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வந்த கொச்சுவேலி பயணிகள் ரெயில் வந்ததை கவனிக்கவில்லை. இதனால் அந்த ரெயிலில் எதிர்பாராதவிதமாக ஐஸ்வர்யா அடிபட்டு இறந்தது தெரியவந்தது.
பலியான ஐஸ்வர்யா சுங்கான்கடை அருகே களியங்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்ததும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஐஸ்வர்யா உடலை மீட்டு ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனைவி ரம்யா கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பலியான மரியசிபுவுக்கு ரம்யா என்ற மனைவியும் 3 வயதில் மகன் மற்றும் 6 மாத மகள் உள்ளனர்.
தக்கலை:
தக்கலையை அடுத்த மணக்காவிளை அருகே உள்ள வெள்ளை பாறையடிவிளை பகுதியைச் சேர்ந்தவர் மரியசிபு (வயது 32), கட்டிட தொழிலாளி.
இவர் நேற்று இரவு தக்கலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். கொற்றியோடு பகுதியில் இரவு 10 மணிக்கு வந்த போது அவரது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதாக தெரிகிறது.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிள் மட்டும் அங்கு கிடந்துள்ளது. மரியசிபுவை காணவில்லை. அவரை தேடிப்பார்த்தும் பலன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலை விபத்து நடந்த இடத்தின் அருகே உள்ள ஆற்றில் மரியசிபு பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதனை பார்த்தவர்கள் உடலை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி ரம்யா கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரியசிபு மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் அவர் ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் அவரது சாவு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான மரியசிபுவுக்கு ரம்யா என்ற மனைவியும் 3 வயதில் மகன் மற்றும் 6 மாத மகள் உள்ளனர்.
- அரசு பஸ் டிரைவர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
மார்த்தாண்டம் வெட்டு மணி பகுதியைச் சேர்ந்தவர் வினு குமார் (வயது 47). இவர் செட்டிகுளம் அரசு பணிமனையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி சுஷ்மிதா. இவர், கேரளாவைச் சேர்ந்த சுதீர்குமார் என்பவரை திருமணம் செய்து 2011-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளார். அதன்பிறகு தான் 2016-ம் ஆண்டு வினுகுமாரை திருமணம் செய்துள்ளார். சுஷ்மிதாவுக்கு முதல் கணவர் மூலம் பிறந்த அனுகீர்த்தி (15) என்ற மகள் தாயுடனேயே உள்ளார். அவள் தற்போது 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
வினுகுமார்-சுஷ்மிதா தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வினுகுமார் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று மாலை, தனது சகோதரருடன் திருமண விழாவுக்குச் செல்வதாக சுஷ்மிதாவிடம் கூறி உள்ளார். இரவில் வரமாட்டேன். நாளை தான் வருவேன் என்றும் கூறிச் சென்றுள்ளார். இந்த சூழலில் வினு குமார், குழித்துறையில் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்ததும் அவர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த வினு குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வினு குமார் வீட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்பு, தனது மகனை அழைத்து முத்தம் கொடுத்துள்ளார். பின்னர் அவனுக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து சென்றுள்ளார் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
எனவே அவர் தற்கொலை முடிவை முதலிலேயே எடுத்திருக்கலாம் என தெரிகிறது. கணவன்-மனைவி பிரச்சனையில் அவர் தற்கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
வினுகுமார் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் அரசு பஸ் டிரைவர்கள் அங்கு திரண்டு இருந்தனர். அரசு பஸ் டிரைவர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பதற்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 7787 வீடுகளுக்கு இணைப்பு
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த முதல் கட்டமாக ரூ.130 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து 18 வார்டுகளில் முழுமையாகவும், 17 வார்டுகளில் பகுதி வாரியாகவும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த பைப் லைன்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் தற்பொழுது முடியும் தருவாயில் உள்ளது.
இதைத தொடர்ந்து வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க முதல்கட்டமாக ரூ. 8 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பதற்கான தொடக்க விழா இன்று 27-வது வார்டுக்கு உட்பட்ட வடிவீஸ்வரம் பகுதியில் நடந்தது.
விழாவில் மேயர் மகேஷ் கலந்து கொண்டு, வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி என்ஜினியர் பாலசுப்பிரமணியன், அதிகாரிகள் ராஜேஷ் குமார், தானப்பன், துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சிலர் கோபால சுப்பிரமணியன், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், மாணவரணி அமைப்பாளர் அருண் காந்த் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த ரூ.130 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தற்பொழுது நிறைவடைந்த நிலையில் பாதாள சாக்கடைக்கான சுத்திகரிப்பு நிலையம் வலம்புரி விலை குப்பை கிடங்கில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சுத்திகரிக்கப்படும் தண்ணீரை தெங்கம்புதூர் பகுதியில் விவசாயத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். வலம்புரி விலை குப்பை கிடங்கில் இருந்து தெங்கம்புதூர் பகுதிக்கு பைப் லைன் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லும் இடங்களை ஆய்வு செய்து பைப் லைன் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 8 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 7,879 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளை ஒரு வருட காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2-வது கட்டமாக வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பதற்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 7787 வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட உள்ளது. மீதமுள்ள வீடுகளுக்கும் அதைத் தொடர்ந்து இணைப்புகள் வழங்கப்படும். வீடுகளுக்கான இணைப்பு கொடுக்கப்பட்ட பிறகு பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கணவனுடன் செல்ல மறுத்து தாயுடன் சென்றதால் பரபரப்பு
- மன வருத்தத்தில் வேளாங்கண்ணி கோயிலுக்கு சென்றதாக தெரிவித்தார்
மணவாளக்குறிச்சி :
மணவாளக்குறிச்சி அருகே பிள்ளை யார்கோவில் பகுதியை சேர்ந்தவர் நேவிஸ் ஜெயராஜ் இவரது மனைவி எலிசபெத் ராணி( வயது27).இத்தம்பதிக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
எலிசபெத் ராணி செல்போனில் நீண்டநேரம் பேசுவாராம். இதை கணவர் கண்டித்தார். இந்த நியைில் கடந்த வாரம் எலிசபெத் ராணி பள்ளிக்கு சென்று குழந்தையை அழைத்து வருவதாக மாமியாரிடம் கூறிவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.உறவினர்கள்,நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து நேவிஸ் ஜெயராஜ் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமான எலிசசெத் ராணியை தேடி வந்தனர்.அவரது செல்போன் சிக்னல் மூலம் தேடியதில் எலிசபெத் ராணி வேளாங்கண்ணியில் இருந்தது தெரிந்தது.உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.தகவலறிந்த கணவர் நேவிஸ் ஜெயராஜ் மற்றும் எலிசபெத் ராணியின் தாயும் போலீஸ் நிலையம் வந்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில் கணவர் தன்னை திட்டியதால் மன வருத்தத்தில் வேளாங்கண்ணி கோயிலுக்கு சென்றதாக தெரிவித்தார்.பின்னர் அவர் கணவருடன் செல்ல விருப்பமில்லாமல் தாயுடன் செல்வதாக கூறினார்.இதையடுத்து போலீசார் அவரை தாயுடன் அனுப்பி வைத்தனர்.






