search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanyakumari Accident"

    • லாரி திடீரென தாறுமாறாக ஓடி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஞானதாஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • லாரிகளால் விபத்துக்கள் அடிக்கடி நடப்பதாக அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    களியக்காவிளை:

    கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே செங்கொடி பகுதியை சேர்ந்தவர் ஞானதாஸ், ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவரது மனைவி பீனா (வயது 52). இவர்களது மகள் திருமணமாகி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளை பார்த்து வர பீனா விரும்பி உள்ளார். இதற்காக கணவர் ஞானதாசுடன் இன்று காலை ஊரில் இருந்து புறப்பட்டார். அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். காலை 8 மணியளவில் குழித்துறை மேம்பாலம் பகுதியில் சென்ற போது பின்னால் கனிமவளம் ஏற்றிய டாரஸ் லாரி வந்தது.

    அந்த லாரி திடீரென தாறுமாறாக ஓடி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஞானதாஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். ஞானதாஸ் சாலையின் ஓரம் விழுந்தார். ஆனால் பீனா, சாலையின் நடுவே விழுந்தார்.

    அப்போது அவரது தலை மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் பீனா சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார். காலில் காயம் அடைந்த ஞானதாஸ், தனது கண்முன்பு மனைவி பலியானதை பார்த்து உடல் அருகே அமர்ந்து கதறி அழுதார். இது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

    விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பீனா உடலை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த ஞானதாசும் சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து காரணமாக குழித்துறை பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து செயல்பட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.

    குமரி மாவட்டத்தில் இருந்தும் வெளிமாவட் டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான லாரிகள் தினசரி கனிம வளங்களை வாகனங்களில் அதிக அளவு ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த லாரிகளால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடப்பதாக அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதை தடுக்க வேண்டும். சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் வலியுறுத்தி அடிக்கடி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக போலீசார் சோதனைகள் நடத்தி வந்தாலும், லாரிகளால் விபத்துக்கள் தொடர்ந்து வருவது வேதனையான சம்பவமாக உள்ளது.

    • மனைவி ரம்யா கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பலியான மரியசிபுவுக்கு ரம்யா என்ற மனைவியும் 3 வயதில் மகன் மற்றும் 6 மாத மகள் உள்ளனர்.

    தக்கலை:

    தக்கலையை அடுத்த மணக்காவிளை அருகே உள்ள வெள்ளை பாறையடிவிளை பகுதியைச் சேர்ந்தவர் மரியசிபு (வயது 32), கட்டிட தொழிலாளி.

    இவர் நேற்று இரவு தக்கலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். கொற்றியோடு பகுதியில் இரவு 10 மணிக்கு வந்த போது அவரது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதாக தெரிகிறது.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிள் மட்டும் அங்கு கிடந்துள்ளது. மரியசிபுவை காணவில்லை. அவரை தேடிப்பார்த்தும் பலன் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை விபத்து நடந்த இடத்தின் அருகே உள்ள ஆற்றில் மரியசிபு பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதனை பார்த்தவர்கள் உடலை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி ரம்யா கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மரியசிபு மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் அவர் ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் அவரது சாவு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான மரியசிபுவுக்கு ரம்யா என்ற மனைவியும் 3 வயதில் மகன் மற்றும் 6 மாத மகள் உள்ளனர்.

    • மாஞ்சக்கோணம் பகுதியில் சுற்றுலா வேன் வந்த போது எதிர்பாராதவிதமாக அஸ்வின் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அஸ்வினை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவட்டார்:

    குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மகன் அஸ்வின் (வயது 33).

    இவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் வாகன டிரைவராக உள்ளார். அஸ்வினுக்கு இன்னும் திருமணமாகவில்லை. நேற்று இவர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார்.

    குலசேகரம்-களியல் சாலையில் அஸ்வின் சென்ற போது, எதிரே திற்பரப்பு நோக்கி சுற்றுலா வேன் வந்துள்ளது. இந்த வேன், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வந்தது.

    மாஞ்சக்கோணம் பகுதியில் சுற்றுலா வேன் வந்த போது எதிர்பாராதவிதமாக அஸ்வின் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் அஸ்வின் தூக்கி வீசப்பட்டார்.

    அவர் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார். விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அஸ்வினை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அஸ்வின் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து வேன் டிரைவர் திருச்செந்தூரைச் சேர்ந்த மகேஷ் கைது செய்யப்பட்டார்.

    ×