ஒற்றையால்விளையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம்

விஜய்வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டினார்அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடந்தது.
ஒற்றையால்விளையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம்
Published on

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு ஒற்றையால் விளை பகுதியில் விஜய் வசந்த் எம்.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடந்தது.

பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், கவுன்சிலர் சுஜா அன்பழகன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த், அடிக்கலை நாட்டி வைத்து புதிய அங்கன்வாடி அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் குமரி கிழக்கு காங்கிரஸ் கமிட்டி செயலா ளர் வக்கீல் சீனிவாசன், அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சாம் சுரேஷ்குமார், , அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன், பேரூ ராட்சி சுகாதார அதிகாரி முருகன், கவுன்சிலர்கள் ஆனிரோஸ் தாமஸ், அட்லின் சேகர், ஒற்றையால்விளை இந்து நாடார் சமுதாய வகை முத்தாரம்மன் கோவில் டிரஸ்ட் தலைவர் பாலசுந்தரம், முன்னாள் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தாமஸ், கொட்டாரம் பேரூர் காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் ஆதி லிங்கபெருமாள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com