என் மலர்
கன்னியாகுமரி
- போலீசார் தீவிர கண்காணிப்பு
- காலை, மாலை இருவேளைகளிலும் பூஜைகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில் :
விநாயகர் சதுர்த்தி விழா குமரி மாவட்டம் முழுவதும் வெகு விமர்சையாக கொண் டாடப்பட்டது. இந்து முன் னணி, இந்து மகா சபா, சிவசேனா, பாரதிய ஜனதா மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் கோவில்களிலும், பொது இடங்களிலும், வீடுகளிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.
இந்து முன்னணி சார்பில் ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட 14 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய போலீசார் அனுமதி மறுத்துள்ள னர். மற்ற இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று இரவு பூஜைகள் நடந்தது.
இன்று 2-வது நாளாக காலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. அவல், பொரி, சுண்டல், சர்க்கரை பொங்கல் படைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இடங்களில் 2 தன்னார்வலர்கள் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்தந்த பகுதியில் உள்ள போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இரவு நேரங்களில் 2 ஷிப்டுகளாக போலீசார் ரோந்து சுற்றி வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார் கள். பிரதிஷ்டை செய்யப் பட்ட விநாயகர் சிலை களுக்கு தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் பூஜைகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வருகிற 22, 23, 24 ஆகிய தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்படுகிறது.
சிலைகள் கரைப்பதற்கு போலீசார் பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளனர். 4 சக்கர வாகனங்களில் மட்டுமே விநாயகர் சிலை களை எடுத்துச்செல்ல வேண்டும். கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்தக் கூடாது. பட்டாசு வெடிக்க கூடாது. அனுமதித்த வழித் தடத்தில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள் ளது.
விநாயகர் சிலை கரைப் பதற்கு மாவட்ட நிர்வாகம் 10 இடங்களில் அனுமதி வழங்கி உள்ளது. அங்கு அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டுள் ளனர். மின்விளக்கு வசதி உட்பட அனைத்து ஏற்பாடுகளும் அங்கு செய்யப்பட்டு வருகிறது.
- கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாகராஜரை தரிசித்து சென்றனர்.
- உண்டியல்கள் அனைத்தும் 3 மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்
நாகர்கோவில் :
நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். மேலும் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் குமரி மாவட்டத்திலிருந்து மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாகராஜரை தரிசித்து சென்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் கோவிலை சுற்றிலும் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் அனைத்தும் 3 மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இன்று கோவிலில் உள்ள 11 உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டன.
குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. நிகழ்ச்சியில் உதவி ஆணையர் தங்கம் முன்னிலை வகித்தார். கண்காணிப்பாளர் ஆனந்த், ஸ்ரீகாரியம் ராமச்சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள், சுய உதவி குழு பெண்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
- பொன்மனை அயந்தி பகுதியில் சேதமடைந்துள்ளது
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
திருவட்டார் :
குமரி மாவட்டம் பத்மநாப புரம் தொகுதிக்குட்பட்ட பொன்மனை பேரூராட்சி அயந்தி பகுதியில் ஒரு இரும்பு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடியில் பட்டணங் கால்வாய் சானல் செல்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து வரும் தண்ணீர் இந்த சானல் வழியாக நாகர்கோவிலுக்கு செல்கிறது. இந்த இரும்பு பாலமானது, பொதுபணித்து றையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.
சானலின் மறுபக்கம் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்கள் தங்கள் தேவைக்கு வெளியே வர வேண்டும் என்றால் இந்த பாலம் வழியாக தான் செல்ல வேண்டும். தற்போது இந்த இரும்பு பாலம் துரு பிடித்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. பாலத்தின் மைய பகுதியில் பெரிய அளவில் ஓட்டை உள்ளது. தினமும் தோட்ட தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் ஒருவித அச்சத்துடன் இந்த பாலம் வழியாக தான் சென்று வருகிறார்கள்.
எனவே இந்த இரும்பு பாலத்தை மாற்றி விட்டு புதிய பாலம் கட்டி தர வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் பல்வேறு போராl; lங்களை நடத்தினார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சு வார்த்தையும் நடத்தப்பட் டது. அதன்பிறகு அந்த பாலத்தை மாற்றி புதிய பாலம் கட்டுவதற்க்கு டெண்டரும் போடப்பட்டது. டெண்டர் எடுத்த அரசு ஒப்பந் தக்காரர், நிதி போதாது என்று பணியை தொடங்காமல், அப்படியே நிறுத்தி விட்டார். அதன்பிறகு தற்காலிமாக பாலத்தின் மேல் பகுதியில் 2 பக்கமும் கைப்பிடித்து செல்வ தற்கு இரும்பு பைப்புகள் மாட்டப்பட்டன. சில மாதங்களில் அந்த இரும்பு பைப்புகள் உடைந்து தொங்கி கொண்டு நிற்கிறது.
தற்போது மழை காலம் என்ப தால் சானலில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. இந்த இரும்பு பாலத்தின் மீது தான் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களும் செல்ல வேண்டும். மாற்றுபாதை கிடையாது. தினமும் வயதான முதியோர்களும், பள்ளி மாணவ-மாணவி களும் இந்த பாலத்தின் மீது நடந்து செல்லும்போது பயத்துடன் தான் கடந்து செல்கிறார்கள்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு பெரும் விபத்து நடைபெறும் முன் அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை யான இரும்பு பாலத்தை மாற்றி புதிய பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- களியலில் 69.2 மில்லி மீட்டர் பதிவு
- தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்களும் நிரம்ப தொடங்கியுள்ளன.
நாகர்கோவில் :
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த 3 வாரங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது.
இந்த நிலையில் நேற்று காலையில் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இரவும் விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. களியல் பகுதியில் நேற்று மாலை 4 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் சாலை களில் வெள்ளம் பெருக்கெ டுத்து ஓடியது. இரவும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.
இன்று காலையிலும் வானம் மப்பும் மந்தார முமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. அங்கு அதிகபட்ச மாக 69.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கோழிப்போர்விளை, கொட்டாரம், மயிலாடி, குழித்துறை, சுருளோடு, தக்கலை, குளச்சல், இரணி யல், ஆணைக்கிடங்கு மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக குளிர் காற்று வீசி வருகிறது. இன்று காலையிலும் மழை பெய்து கொண்டே இருந்தது. திற்பரப்பு அருவி பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதியிலும், மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு வரக்கூடிய நீர்வ ரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து 783 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.28 அடியாக இருந்தது. அணைக்கு 1134 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 583 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.05 அடியாக உள்ளது. அணைக்கு 447 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்களும் நிரம்ப தொடங்கியுள்ளன.
300-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பி வழி கிறது. குளங்கள் நிரம்பி வழிவதையடுத்து விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 57.6, பெருஞ்சாணி 27.6, சிற்றாறு 1-30.4, சிற்றாறு 2- 28.2, பூதப்பாண்டி 30.6, களியல் 69.2, கன்னிமார் 32.2, கொட்டாரம் 16.2, குழித் துறை 35.8, மைலாடி 20.8, நாகர்கோவில் 2.4, புத்தன் அணை 26.8, சுருளோடு 31.6, தக்கலை 28.4, குளச்சல் 12.2, இரணியல் 26, பாலமோர் 60.4, மாம்பழத்து றையாறு 26, திற்பரப்பு 65.7, ஆரல்வாய்மொழி 7.2, கோழிபோர்விளை 50.4, அடையாமடை 33.1, குருந் தன்கோடு 42, முள்ளங்கினா விளை 25.4, ஆணைகிடங்கு 22.4, முக்கடல் 17.
- அந்த நிறுவனத்தில் 2 தவணைகளாக ரூ.50 லட்சம் பணம் கொடுத்தேன்
- போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை
நாகர்கோவில் :
வேர்கிளம்பி பூவன்கோடு பூச்சா த்தான்விளை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 52). இவர் நாகர்கோவில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நான் பூவன்கோட்டில் இயங்கி வரும் ஒரு அறக்கட்டளையில் தலைவராக உள்ளேன். பள்ளியாடி நட்டாலம் பகுதியை சேர்ந்த ஒரு வருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் டெல்லியை தலையிடமாக கொண்டு செயல்படும் ஒரு நிறுவனத்தின் கிளையை தக்கலையில் நடத்தி வருவதாக கூறினார். அந்த நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறினார்.
இதை நம்பி நான் அந்த நிறுவனத்தில் 2 தவணைகளாக ரூ.50 லட்சம் பணம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் கூறியது போல எந்த லாபமும் கிடைக்கவில்லை. நான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டேன். அதற்கு ரூ.25 லட்சத்துக்கு 2 காசோலைகள் கொடுத்தார்.
அந்த காசோலையை வங்கியில் கொடுத்து கேட்டபோது சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறி விட்டார்கள். எனவே என்னிடம் பணத்தை வாங்கி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி நடவ டிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபர் இன்று போலீசில் சிக்கி உள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.
- ரூ.50 ஆயிரம் வரை பணம் வசூல் செய்தனர்.
- மாணவர்களும், பயிற்சி டாக்டர்களும், பொதுமக்களும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மாலை ஒரு ஆணும், பெண்ணும் வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரி ஊழியர்களிடமும், டாக்டர்களிடமும் தாங்கள் தனியார் தொண்டு நிறுவனத்தில் இருந்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய ஏதாவது பணம் தருமாறும் கூறினார்கள். அதை உண்மை என்று நம்பி பயிற்சி டாக்டர்களும், மருத்துவர்களும் பணம் கொடுத்ததாக தெரிகிறது. அந்த வகையில் ரூ.50 ஆயிரம் வரை பணம் வசூல் செய்தனர்.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனம் உண்மைதானா என்று ஆன்லைனில் டாக்டர்கள் சோதனை செய்தனர். அப்போது அது போலி தொண்டு நிறுவனம் என்பது தெரியவந்தது. உடனே அந்த பெண்ணையும், ஆணையும் மாணவர்களும், பயிற்சி டாக்டர்களும், பொதுமக்களும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் ஆசாரிபள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட ஆண் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், பெண் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பயிற்சி டாக்டர்கள் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
- குமரி மாவட்ட உழவர் பயிற்சி மையம் சார்பில் காளான் வளர்ப்பு பயிற்சி 6 நாட்கள் நடைபெற்றது.
- இலவச மதிய உணவு மற்றும் தேநீர் மற்றும் ஊக்கத்தொகை ரூ.50 வழங்கப்பட்டது.
ராஜாக்கமங்கலம் :
கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை நலத்துறை சார்பில் ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் நோக்கத்தில் குமரி மாவட்ட உழவர் பயிற்சி மையம் சார்பில் காளான் வளர்ப்பு பயிற்சி 6 நாட்கள் நடைபெற்றது.
இப்பயிற்சியினை ஸ்டாமின் இயக்குனர் சங்கரலிங்கம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வேளாண் துறை இணை இயக்குனர் வாணி முன்னிலை வகித்தார். வேளாண் துறை துணை இயக்குனர் ஆல்பட் ராபின்சன் 6 நாள் நடைபெற்ற முகாமிற்கு தலைமை ஏற்று நடத்தினார். முகாமில் துணை இயக்குனர் கீதா மற்றும் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.பயிற்சியில் ராஜாக்கமங்கலம், அகஸ்தீஸ்வரம், கிள்ளியூர், தக்கலை, திருவட்டார், மேல்புறம், முஞ்சிறை ஆகிய வட்டாரங்களை சேர்ந்த 28 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சியில் வேளாண் அறிவியல் நிலையம் வேளாண் துறை விற்பனை நிலையம் மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டுதல், சந்தைப்படுத்துதல், தொழில்முனைவோர் ஆக்குதல் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது. பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இலவச மதிய உணவு மற்றும் தேநீர் மற்றும் ஊக்கத்தொகை ரூ.50 வழங்கப்பட்டது. பயிற்சி முடிவில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் துறை அலுவலர் சுபாஷ் செய்திருந்தார்.
- சாலையில் விபத்து நடந்தால் உயிர்களை எப்படி காப்பாற்றுவது
- அனைவரும் கண்டிப்பாக தலைகவசம் அணியவேண்டும்
குளச்சல் :
தலக்குளம் புதுவிளை பி.எஸ்.மூளை நரம்பியல் மருத்துவமனை மற்றும் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு குளச்சல் போக்குவரத்து போலீசார் சார்பில் கல்லூரி கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து குளச்சல் போக்குவரத்து போலீஸ் ஆய்வாளர் வில்லியம் பென்ஜமின் கலந்துகொண்டு சாலைகளில் விபத்துக்களை எப்படி தடுப்பது, சாலையில் விபத்து நடந்தால் உயிர்களை எப்படி காப்பாற்றுவது, அனைவரும் கண்டிப்பாக தலைகவசம் அணியவேண்டும் என்றும் சாலை ஓரங்களில் வைத்திருக்கும் பதாகைகளில் இருக்கும் வரைபடங்கள், சாலையின் மீது போடப்பட்டிருக்கும்.
மஞ்சள், வெள்ளை கோடுகள் குறித்தும் காணொலி காட்சி மூலம் விளக்கி பேசினார். இதில் டாக்டர்கள் ஆறுமுகம், சரோஜினி, சுனிதா, ஜூலியா, சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன், சிதம்பரதாணு, சுரேஷ்குமார் மற்றும் கல்லூரி முதல்வர் அமுது, துணை முதல்வர் ஜோஸ்மின், முருகன், பழனியாண்டி, திலீப் மற்றும் ஆசிரியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- சாலைகள் செப்பனிட வேண்டும் என்றால் வனத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும்
- விரைந்து அனுமதி வழங்க ஆவண செய்யப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் உறுதி அளித்தார்
திருவட்டார் :
குமரி மாவட்டம் பாலமோர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள் பெரும்பாலும் மலைபிரதேசங்கள் சார்ந்த பகுதி. இந்த பகுதிகளில் ரோடுகள், சாலைகள் செப்பனிட வேண்டும் என்றால் வனத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
இதனால் ரோடுகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. வனத்துறையினர் அனுமதி கொடுப்பதில் பெரும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் சாலைகள் போடுவதில் முட்டுக்கட்டை ஏற்படுவதால் ஊராட்சி பணிகள் தாமதம் ஆகிறது.
இதை சரி செய்வதற்காக தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை பாலமோர் ஊராட்சி தலைவர் லில்லிபாய் சாந்தப்பன் சந்தித்து பாலமோர் ஊராட்சி சாலைகள், நெடுஞ்சாலைத்துறை சாலைகள் செப்பனிட வனத்துறை அனுமதி வழங்குவதில் காலதாமதம் செய்வதால் சேதமான நிலையில் உள்ள சாலைகளை செப்பனிட விரைந்து அனுமதி வழங்க ஆவண செய்ய வேண்டி மனு அளித்தார். அவர்களின் கோரிக்கைகளை பரிசீலினை செய்து விரைந்து அனுமதி வழங்க ஆவண செய்யப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் உறுதி அளித்தார்.
அப்போது ஊராட்சி மன்ற உறுப்பினர் சாந்தப்பன் உடனிருந்தார்.
- உலக சாதனை படைத்தார்
- முகாமில் வேலை வாய்ப்பு, மருத்துவம், சிறுதானிய உணவுகள், கண் சிகிச்சை, பொது மருத்துவம், பெண்களுக்கான சிகிச்சை,
என். ஜி. ஓ. காலனி :
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 73- வது பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜ.க பொருளாதார பிரிவு குமரி மாவட்ட தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சி 50-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஜவான் அய்யப்பன் தலைமையில் நாகர்கோவில் அருகே உள்ள முகிலன்விளை முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பிரதமர் மோடி கொண்டு வந்த 73 திட்டங்களும் ஒரே இடத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் உலக சாதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
முகாமில் வேலை வாய்ப்பு, மருத்துவம், சிறுதானிய உணவுகள், கண் சிகிச்சை, பொது மருத்துவம், பெண்க ளுக்கான மருத்துவ சிகிச்சை, மருத்துவ காப்பீடு அட்டை பெற நடவடிக்கை, பான் கார்டு பெற நடவடிக்கை, விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய பொருட் கள் கிடைக்க நடவடிக்கை, விவசாயம் செய்ய விவசாய நிலத்தின் மண் பரிசோதனை, இலவச கியாஸ் இணைப்பு பெறாதவர்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு பெற்று தருதல், இலவச வீடு கிடைக்காதவர்களுக்கு இலவச வீடு பெற்று தர ஏற்பாடு செய்தல், இஸ்லாமிய பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம், மீனவர்களுக் கான முத்ரா கடன் திட்டம், மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட விஸ்வகர்மா திட்டம் உள்ளிட்ட பாரதபிரதமர் மோடியின் 73 திட்டங்களும் ஒரே இடத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் பொது மக்களின் பார்வைக்காக மத்திய அரசின் நலத்திட்டங் களை பிரதிபலிக்கும் வகை யிலான 73 ஸ்டால் வைக்கப்பட்டு அதன் மூலம் பொது மக்களுக்கு மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்தான ஆலோசனையும் வழங்கப்பட்டது. இந்த உலக சாதனை நிகழ்வினை அமெரிக்காவில் இருந்து கிறிஸ்டோபர் என்பவர் வேர்ல்ட் ரிக்கார்ட் யூனியன் என்ற புத்தகத்தில் பதிவு செய்ய நேரில் பார்வையிட்டு மேலும் பிரதமர் மோடியின் 73 திட்டங்களை ஒரே இடத்தில் பொதுமக்களுக்கு வழங்கி யமைக்காக நாகர்கோவில் மாநகராட்சி 50-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜவான் அய்யப்பனுக்கு உலக சாதனை படைத்தமைக்காக உள்ள சான்றிதழையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க பொருளாதாரப் பிரிவு குமரி மாவட்ட துணைத்தலைவர் எஸ். ஜெயக்குமார், பா.ஜ.க. மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநில மகளிர் அணி தலைவர் உமாரதி ராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் வக்கீல் ஜெகநாதன், கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணகுமார், முன்னாள் மாவட்ட தலை வர்கள் கணேசன், முத்து கிருஷ்ணன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் முரளி மனோ கர்லால், ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜேஷ், மாநகராட்சி மாமன்ற உறுப்பி னர்கள் வீரசூரபெருமாள், சதீஷ், ஆட்சியம்மாள், தேரூர் பேரூராட்சி துணைத் தலைவர் மாதவன்பிள்ளை, மாவட்ட தொழில் பிரிவு தலைவர் டாக்டர் மோகன்ராஜ், பா.ஜ.க. முன்னாள் தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செய லாளர் ரூபின், அகஸ்தீஸ்வரம் வடக்கு மண்டல தலைவர் சுயம்பு, முகிலன்விளை மிசா. ரெத்தினஜோதி, பா.ஜ.க. மாநில பொருளாதாரப் பிரிவு செயலாளர் பார்வதி விஜயகுமார், அக்ரி சிவா, மற்றும் பயனாளிகள், பொது மக்கள் தன்னார்வலர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு
- முதல் முறையாக ஒரு பெண் பேரூர் செயலாளராக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நியமனம் செய்தார்
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநக ராட்சி 11-ம் வார்டு பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் வடசேரியில் நடந்தது.
கூட்டத்திற்கு மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாநில எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் கிருஷ்ன தாஸ், பகுதி கழக செய லாளர்கள் ஜெயகோபால், முருகேஷ்வ ரன், கவுன்சிலர்கள் அக்யா கண்ணன், கோபாலசுப்பிர மணியன், அணி செயலாளர் சுகுமாரன், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் பேசியதாவது:-
நாகர்கோவில் மாநகரத் தில் நான்கு பகுதி செய லாளர் உள்ளனர். வடக்கு பகுதி செயலாளராக தமிழகத்திலேயே ஒரு பெண், அதாவது நாகர்கோவில் வடக்கு பகுதி செயலாளராக மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா நியமனம் செய்யப் பட்டுள்ளார். ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத் தில் தான் முதல் முறையாக ஒரு பெண் பேரூர் செயலாளராக மறைந்த முதல்-அமைச்சர் ஜெய லலிதா நியமனம் செய்தார்.
அவர் சிறப்பாக செயல்பட்டு மேல் பதவியை அடைந்துள்ளார். மதுரையில் அ.தி.மு.க. மாநாடு வெற்றி பெற்றதை தொடர்ந்து சென்னையில் ஸ்ரீலிஜா எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அப்போது ஸ்ரீலிஜாவுக்கு நாகர்கோவில் சட்டமன்ற வேட்பாளராக நிற்க வாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் உள்ள வடக்கு மண்டலத்தில் 70 பூத்கள் உள்ளது. அந்த 70 பூத்களிலும் பூத் கமிட்டி அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் தொகுதியில் உள்ள ராஜாக்கமங்கலம் ஒன்றியம் மற்றும் நாகர்கோவில் மாநகர பகுதி என நாகர்கோவில் தொகுதியில் மொத்தம் 275 பூத்கள் உள்ளது.
ஒவ்வொரு பூத்-க்கும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் செய்து கட்சியை பலப்படுத்த வேண்டும். தி.மு.க. ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஊழல், மணல் கொள்ளை, சட்ட ஒழுங்கு சீர்கேடு ஆகியுள்ளது. தமிழகத்திற்கு எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சி மலரும் என்பதில் சந்தேகம் இல்லை. கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. பலமாக உள்ளது. தற்பொழுது பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளது. பாராளுமன்றத்தில் பா.ஜ.க. வேட்பாளர் களம் இறங்கினால் அவருடன் நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். ஒற்றுமையாக பணியாற்றினால் தான் நாம் வெற்றி பெற முடியும். எடப்பாடி பழனிசாமி மீது எந்த வழக்கும் இல்லை. அதனால் தான் அவர் தலைநிமிர்ந்து நிற்கிறார்.
தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடந்து வருகிறது. நாகர்கோ வில் மாநகராட்சியில் பல பிரச்சினைகள் உள்ளது. சாலைகள் மிகவும் மோசம டைந்தது. பழுதடைந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்ட முடிய வில்லை. கட்சியில் உழைக் கின்றவர்களுக்கு பதவி தேடி வரும். உழைப்பின் மூலம் உயர்ந்தவர்கள் அ.தி.மு.க. வில் அதிகமானோர் உள்ள னர். கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்கள் யாராக இருந்தாலும் மேயர், எம்.எல்.ஏ., நாடாளுமன்ற உறுப்பினராகலாம். எனவே கட்சி நிர்வாகிகள் பூத் கமிட்டியை வலுப்படுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
- தினமும் வேலைக்கு சென்றுவிட்டு தன் வீட்டின் அருகில் உள்ள வாய்காலில் குளிக்க செல்வது வழக்கம்.
- உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
திருவட்டார் :
குலசேகரம் அருகே சேக்கல் பகுதியை சேர்ந்தவர் கிருஸ்துதாஸ் (வயது 55). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தன் அம்மாவுடன் வசித்து வருகிறார். தினமும் வேலைக்கு சென்றுவிட்டு தன் வீட்டின் அருகில் உள்ள வாய்காலில் குளிக்க செல்வது வழக்கம்.
சம்பவத்தன்று நேற்று மாலை வேலை முடிந்து வாய்க்காலில் குளிக்க சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அந்த பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் குளிக்க செல்லும் போது முதியவர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இவருடைய அண்ணன் சைமன் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கிறிஸ்துதாசின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.






