search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் விடிய விடிய பரவலாக மழை; அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    குமரி மாவட்டத்தில் விடிய விடிய பரவலாக மழை; அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    • களியலில் 69.2 மில்லி மீட்டர் பதிவு
    • தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்களும் நிரம்ப தொடங்கியுள்ளன.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழுவதும் கடந்த 3 வாரங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது.

    இந்த நிலையில் நேற்று காலையில் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இரவும் விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. களியல் பகுதியில் நேற்று மாலை 4 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் சாலை களில் வெள்ளம் பெருக்கெ டுத்து ஓடியது. இரவும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.

    இன்று காலையிலும் வானம் மப்பும் மந்தார முமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. அங்கு அதிகபட்ச மாக 69.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கோழிப்போர்விளை, கொட்டாரம், மயிலாடி, குழித்துறை, சுருளோடு, தக்கலை, குளச்சல், இரணி யல், ஆணைக்கிடங்கு மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக குளிர் காற்று வீசி வருகிறது. இன்று காலையிலும் மழை பெய்து கொண்டே இருந்தது. திற்பரப்பு அருவி பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதியிலும், மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு வரக்கூடிய நீர்வ ரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து 783 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.28 அடியாக இருந்தது. அணைக்கு 1134 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 583 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.05 அடியாக உள்ளது. அணைக்கு 447 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்களும் நிரம்ப தொடங்கியுள்ளன.

    300-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பி வழி கிறது. குளங்கள் நிரம்பி வழிவதையடுத்து விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 57.6, பெருஞ்சாணி 27.6, சிற்றாறு 1-30.4, சிற்றாறு 2- 28.2, பூதப்பாண்டி 30.6, களியல் 69.2, கன்னிமார் 32.2, கொட்டாரம் 16.2, குழித் துறை 35.8, மைலாடி 20.8, நாகர்கோவில் 2.4, புத்தன் அணை 26.8, சுருளோடு 31.6, தக்கலை 28.4, குளச்சல் 12.2, இரணியல் 26, பாலமோர் 60.4, மாம்பழத்து றையாறு 26, திற்பரப்பு 65.7, ஆரல்வாய்மொழி 7.2, கோழிபோர்விளை 50.4, அடையாமடை 33.1, குருந் தன்கோடு 42, முள்ளங்கினா விளை 25.4, ஆணைகிடங்கு 22.4, முக்கடல் 17.

    Next Story
    ×