search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை
    X

    குமரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை

    • போலீசார் தீவிர கண்காணிப்பு
    • காலை, மாலை இருவேளைகளிலும் பூஜைகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    விநாயகர் சதுர்த்தி விழா குமரி மாவட்டம் முழுவதும் வெகு விமர்சையாக கொண் டாடப்பட்டது. இந்து முன் னணி, இந்து மகா சபா, சிவசேனா, பாரதிய ஜனதா மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் கோவில்களிலும், பொது இடங்களிலும், வீடுகளிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.

    இந்து முன்னணி சார்பில் ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட 14 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய போலீசார் அனுமதி மறுத்துள்ள னர். மற்ற இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று இரவு பூஜைகள் நடந்தது.

    இன்று 2-வது நாளாக காலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. அவல், பொரி, சுண்டல், சர்க்கரை பொங்கல் படைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இடங்களில் 2 தன்னார்வலர்கள் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்தந்த பகுதியில் உள்ள போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இரவு நேரங்களில் 2 ஷிப்டுகளாக போலீசார் ரோந்து சுற்றி வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார் கள். பிரதிஷ்டை செய்யப் பட்ட விநாயகர் சிலை களுக்கு தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் பூஜைகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வருகிற 22, 23, 24 ஆகிய தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்படுகிறது.

    சிலைகள் கரைப்பதற்கு போலீசார் பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளனர். 4 சக்கர வாகனங்களில் மட்டுமே விநாயகர் சிலை களை எடுத்துச்செல்ல வேண்டும். கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்தக் கூடாது. பட்டாசு வெடிக்க கூடாது. அனுமதித்த வழித் தடத்தில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள் ளது.

    விநாயகர் சிலை கரைப் பதற்கு மாவட்ட நிர்வாகம் 10 இடங்களில் அனுமதி வழங்கி உள்ளது. அங்கு அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டுள் ளனர். மின்விளக்கு வசதி உட்பட அனைத்து ஏற்பாடுகளும் அங்கு செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×