search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் தொகுதியில் உள்ள பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும்
    X

    நாகர்கோவில் தொகுதியில் உள்ள பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும்

    • தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு
    • முதல் முறையாக ஒரு பெண் பேரூர் செயலாளராக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நியமனம் செய்தார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சி 11-ம் வார்டு பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் வடசேரியில் நடந்தது.

    கூட்டத்திற்கு மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாநில எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் கிருஷ்ன தாஸ், பகுதி கழக செய லாளர்கள் ஜெயகோபால், முருகேஷ்வ ரன், கவுன்சிலர்கள் அக்யா கண்ணன், கோபாலசுப்பிர மணியன், அணி செயலாளர் சுகுமாரன், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் பேசியதாவது:-

    நாகர்கோவில் மாநகரத் தில் நான்கு பகுதி செய லாளர் உள்ளனர். வடக்கு பகுதி செயலாளராக தமிழகத்திலேயே ஒரு பெண், அதாவது நாகர்கோவில் வடக்கு பகுதி செயலாளராக மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா நியமனம் செய்யப் பட்டுள்ளார். ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத் தில் தான் முதல் முறையாக ஒரு பெண் பேரூர் செயலாளராக மறைந்த முதல்-அமைச்சர் ஜெய லலிதா நியமனம் செய்தார்.

    அவர் சிறப்பாக செயல்பட்டு மேல் பதவியை அடைந்துள்ளார். மதுரையில் அ.தி.மு.க. மாநாடு வெற்றி பெற்றதை தொடர்ந்து சென்னையில் ஸ்ரீலிஜா எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அப்போது ஸ்ரீலிஜாவுக்கு நாகர்கோவில் சட்டமன்ற வேட்பாளராக நிற்க வாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் உள்ள வடக்கு மண்டலத்தில் 70 பூத்கள் உள்ளது. அந்த 70 பூத்களிலும் பூத் கமிட்டி அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் தொகுதியில் உள்ள ராஜாக்கமங்கலம் ஒன்றியம் மற்றும் நாகர்கோவில் மாநகர பகுதி என நாகர்கோவில் தொகுதியில் மொத்தம் 275 பூத்கள் உள்ளது.

    ஒவ்வொரு பூத்-க்கும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் செய்து கட்சியை பலப்படுத்த வேண்டும். தி.மு.க. ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஊழல், மணல் கொள்ளை, சட்ட ஒழுங்கு சீர்கேடு ஆகியுள்ளது. தமிழகத்திற்கு எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சி மலரும் என்பதில் சந்தேகம் இல்லை. கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. பலமாக உள்ளது. தற்பொழுது பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளது. பாராளுமன்றத்தில் பா.ஜ.க. வேட்பாளர் களம் இறங்கினால் அவருடன் நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். ஒற்றுமையாக பணியாற்றினால் தான் நாம் வெற்றி பெற முடியும். எடப்பாடி பழனிசாமி மீது எந்த வழக்கும் இல்லை. அதனால் தான் அவர் தலைநிமிர்ந்து நிற்கிறார்.

    தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடந்து வருகிறது. நாகர்கோ வில் மாநகராட்சியில் பல பிரச்சினைகள் உள்ளது. சாலைகள் மிகவும் மோசம டைந்தது. பழுதடைந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்ட முடிய வில்லை. கட்சியில் உழைக் கின்றவர்களுக்கு பதவி தேடி வரும். உழைப்பின் மூலம் உயர்ந்தவர்கள் அ.தி.மு.க. வில் அதிகமானோர் உள்ள னர். கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்கள் யாராக இருந்தாலும் மேயர், எம்.எல்.ஏ., நாடாளுமன்ற உறுப்பினராகலாம். எனவே கட்சி நிர்வாகிகள் பூத் கமிட்டியை வலுப்படுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×