என் மலர்
உள்ளூர் செய்திகள்

குலசேகரம் அருகே கூலி தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி
- தினமும் வேலைக்கு சென்றுவிட்டு தன் வீட்டின் அருகில் உள்ள வாய்காலில் குளிக்க செல்வது வழக்கம்.
- உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
திருவட்டார் :
குலசேகரம் அருகே சேக்கல் பகுதியை சேர்ந்தவர் கிருஸ்துதாஸ் (வயது 55). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தன் அம்மாவுடன் வசித்து வருகிறார். தினமும் வேலைக்கு சென்றுவிட்டு தன் வீட்டின் அருகில் உள்ள வாய்காலில் குளிக்க செல்வது வழக்கம்.
சம்பவத்தன்று நேற்று மாலை வேலை முடிந்து வாய்க்காலில் குளிக்க சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அந்த பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் குளிக்க செல்லும் போது முதியவர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இவருடைய அண்ணன் சைமன் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கிறிஸ்துதாசின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.