என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • சங்கராபுரம் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்- 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சின்னசேலத்தார் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவ்டம் சங்கராபுரம் அருகே பரமநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி. அவரது மகன் பிரபு(32). இவரது மனைவி சுஜாதா(28), இவர்களுக்கு கிருத்திஷா என்ற மகள் உள்ளார். கணவன், மனைவிக்குமிடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு கோர்ட்டில் உள்ளது. இந்நிலையில், சுஜாதா தனது அக்கா மகன் சதீஷ்(38) என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த பிரபு மற்றும் அவருடன் வந்த கொளஞ்சி(52), இவரது மனைவி சரோஜா(45), பாலன் மனைவி விஜலட்சுமி(28) ஆகியோர் சதீஷிடம் எப்படி பேசலாம் எனக் கேட்டு, சுஜாதாவை தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் பிரபு, கொளஞ்சி, சரோஜா, விஜயலட்சுமி ஆகியோர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி அருகே குண்டர் தடுப்புச்சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • கள்ளக்குறிச்சி மாவ–ட்டம் எறையூர்கி ராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சன் (வயது23). இவர் அதே ஊரைச் சேர்ந்த ரெய்மண்ட் என்பவரை முன்விரோ–தத்தின் காரணமாக கட்டையால் அடித்து கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் காவல்துறையினரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் எறையூர்கி ராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சன் (வயது23). இவர் அதே ஊரைச் சேர்ந்த ரெய்மண்ட் என்பவரை முன்விரோ–தத்தின் காரணமாக கட்டையால் அடித்து கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் காவல்துறையினரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தொடர்ந்து எறையூர் கிராமத்தில் பொது–அமைதிக்கு குந்த–கம் ஏற்படுத்தும் வகை–யில், அடிதடி சண்டை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச் செய––லில் ஈடுபட்டு பொதுமக்களைஅச்சத்தில் ஆழ்த்தியும், அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாக்கி வந்தார். மேலும் இவர் வெளியே இருந்தால் வரும் காலங் களில்தொ டர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடு படக்கூடும் என்பதால், இவர் நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மேற்படி நபரை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி ஜெய்சனை போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • சங்கராபுரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • காயமடைந்த 3 பேர் சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டை சேர்ந்தவர் சவுரிராயன்(68). இவர் தனது உறவினர் செல்வராஜின் குழந்தைகளான ரோமியோ(13), அனார்(10), மடோனா(6) ஆகியோரை ஒரு மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு இளையாங்கண்ணி கூட்டுரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    சங்கராபுரம்-திருவண்ணாமலை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, சங்கராபுரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் ஒன்று, இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் குழந்தைகள் ரோமியோ, அனார், மடோனா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். சவுரிராயன் காயமின்றி உயிர் தப்பினார்.

    இதையடுத்து படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கோடை விடுமுறைக்கு பிறகு அரசு பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன.
    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கி வருகிறது.

    இதற்காக தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தில் இருந்து பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

    அவ்வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரசு பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், புத்தகங்கள் வந்து சேர்ந்துள்ளன. அவற்றை பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

    • கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் உட்கட்சி அமைப்புத் தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சின்னசேலத்தார் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உட்கட்சி அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சின்னசேலத்தார் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி வட்டாரத் தலைவர் இளவரசன், நகராட்சி கவுன்சிலர் தேவராஜ், மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வீரமுத்து, துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் குமார் வரவேற்றார். கூட்த்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தலா 10 ஆயிரம் உறுப்பினர்கள் வீதம் 40 ஆயிரம் உறுப்பினர்களை டிஜிட்டல்முறையில் காங்கிரஸ்கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளது. முதலில் பூத் கமிட்டி தேர்தலை நடத்தி முடித்த பின்னர்வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் படிப்படியாக தேர்தல் நடத்தி முடிக்கப்படும். தேர்தல் முடிவுகளை மாநிலத் தலைமைதான் அறிவிக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் அமைப்பு தேர்தல் நடத்துவதற்கான பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் வெளியிட்டார். தொடர்ந்து முன்னாள் மாவட்ட தலைவர்கள் தனபால், வழக்கறிஞர் இளையராஜா, வழக்கறிஞர் ராஜ்மோகன், ஆகியோர் கலந்து கொண்டு உட்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் வழங்கினர். இதில் வட்டார தலைவர்கள் கிருபானந்தம், சின்னையன், கணேசன், அப்துல்கலாம், பெரியசாமி, கொளஞ்சி யப்பன், நகர தலைவர்கள் ஏழுமலை, கபீர் பாஷா, செந்தமிழ்ச்செல்வன் சோசியல் மீடியா கார்த்தி, சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • தியாகதுருகம் அருகே கார் மோதி விவசாயி பலியானார்.
    • கள்ளக்குறிச்சி அருகே தென்னேரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 64) விவசாயி.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தென்னேரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 64) விவசாயி, இவர் நேற்று சொந்த வேலை காரணமாக எலவனாசூர்கோட்டை க்கு சென்றார். வேலை முடித்துவிட்டு மீண்டும் ஊருக்கு தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது திம்மலை பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடந்த போது அவருக்கு பின்னால் சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் இவரது மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார். மேலும் கார் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி சாலையோர பள்ளத்தில் இறங்கியது. காரில் வந்தவர்கள் காயமின்றி தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெங்கடேசன் மனைவி கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில் கார் டிரைவர் கோவை வடமதுரை பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகள் பிரியதர்ஷினி (29) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சியில் 4 சிறுவர்கள் அதிரடி கைது செய்யப்பட்டனர்.
    • கோயம்புத்தூரில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கோயம்புத்தூரில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் சென்றபோது அங்கு நின்ற 16 மற்றும் 17 வயதுடைய 4 சிறுவர்கள் பஸ்ஸை நிறுத்துமாறு கை காட்டி உள்ளனர். ஆனால் பஸ் நிற்காமல் சென்றது இதில் ஆத்திரமடைந்த சிறுவர்கள் பஸ்சை துரத்திச் சென்று வழிமறித்து டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆபாசமாக திட்டி, கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை பஸ் பக்கவாட்டில் அடித்தனர். இதில் பீர் பாட்டில் உடைந்து சிதறியது. இதில் பஸ்சில் பயணம் செய்த கோயம்புத்தூர் மாவட்டம், செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சீனிவாசன் (வயது 38) என்பவரின் கண்ணில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நடத்துனர் மற்றும் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அந்த 4 நபர்களையும் மடக்கி பிடித்து ஆட்டோவில் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயமடைந்த சீனிவாசன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். 4 சிறுவர்கள் பஸ்சை வழிமறித்து பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சங்கராபுரம் பகுதியில் பொது இடங்களில் புகைப்பிடித்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் நகரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதுப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சம்பத்குமார் தலைமையில் சுகாதார துறையினர் ஆய்வு மேற்கெண்டனர்.அப்போது, பொது இடங்களில் புகை பிடித்த நபர்களுக்கு அபாரதம் விதித்து, பொது இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு கடைகளில் பான்மசாலா, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாசில் பாலசேகரன், ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • சின்ன சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • திருவண்ணாமலை வேளாண்மை கல்லூரி முதல்வர் விளக்கம் அளித்து பேசினார்.

    கள்ளக்குறிச்சி:

    வேளாண்மைத்துறை சார்பில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் சின்ன சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வி கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசினார். வேளாண்மை அலுவலர் அனுராதா முன்னிலை வகித்தார். அட்மா தொழில்நுட்ப மேலாளர் சாமுண்டீஸ்வரி வரவேற்றார்.

    இயற்கை விவசாயம் செய்யும் முறைகள், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்து ஆன்லைன் மூலம் திருவண்ணாமலை வேளாண்மை கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன் விளக்கம் அளித்து பேசினார். இதில் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், வேளாண்மை துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உறவினர் வீட்டுக்கு சென்று மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டுக் கொண்டார் மாணவி.
    • சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள செம்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகள் அபிநயா(16). இவர் சங்கராபுரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த கோவிந்தன் மகன் அஜித் என்பவருடன் அபிநயா பழகி வந்ததாக தெரிகிறது. மேலும் சம்பவத்தன்று அஜித், அபிநயாவை வெளியில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த அபிநயாவின் தாய் மதுராம்பாள் விஷம் குடித்து விட்டார்.

    இதையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவரை, அபிநயா மற்றும் அஜித்தின் உறவினர்கள் பார்க்க வந்தனர். அப்போது மதுராம்பாளின் உறவினர்கள், அபிநயா மற்றும் அஜித்தின் உறவினர்களை பார்க்க அனுமதிக்கவில்லை.

    போலீசார் விசாரணை இதில் மனவேதனை அடைந்த அபிநயா, அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டுக் கொண்டார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி அபிநயா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

    • சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார்
    • கள்ளக்குறிச்சி மகளிர் காவல்துறையினர் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கீழ்நிலவூர் கிராமத்தை சேர்த்த சுதாகர் (வயது 22). லாரி கிளீனர். இவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ம் தேதி சுதாகர் வீட்டில் இரு தரப்பினர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட பிறகு இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்ததார்.

    இதனிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறுமியை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று காண்பித்தபோது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. அங்கு குழந்தைக்கு விட்டமின் குறைவாக உள்ளது என மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்வதற்கு அறிவுறுத்தியுள்ளனர்.

    அதன்பிறகு சிறுமியை கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமி கர்ப்பமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் மருத்துவ நிலைய காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல்துறையினர் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று குழந்தைத் திருமணத் சட்டம், போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுதாகரை கைது செய்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் சிறுமியை கர்ப்பமாக்கிய லாரி கிளீனரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கீழ்நிலவூர் கிராமத்தை சேர்த்த சுதாகர் (வயது 22) லாரி கிளீனர். இவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதி சுதாகர் வீட்டில் இரு தரப்பினர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட பிறகு இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    இதனிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறுமியை கிளாக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று காண்பித்தபோது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. அங்கு குழந்தைக்கு விட்டமின் குறைவாக உள்ளது என மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

    அதன்பிறகு சிறுமியை கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமி கர்ப்பமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மருத்துவ நிலைய காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல்துறையினர் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று குழந்தைத் திருமணத் சட்டம், போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுதாகரை கைது செய்துள்ளனர்.

    ×