என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 people injured"

    • பஸ் சாலையோர ஓட்டலுக்கு திரும்ப முற்பட்டபோது கார்மீது பயங்கரமாக மோதியது.
    • இந்த விபத்தில் காரில் வந்த 3 பேரும் படுகாயமடைந்தனர்.

    வேடசந்தூர்:

    கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த மதுசூதனரெட்டி(33), மதுசூதனராவ்(45), ரவி(37) ஆகியோர் காரில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே மதுரையில் இருந்து சேலம் நோக்கி அரசு பஸ் வந்தது.

    அந்த பஸ் சாலையோர ஓட்டலுக்கு திரும்ப முற்பட்டபோது கார்மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.

    இந்த விபத்தில் காரில் வந்த 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து கூம்பூர் போலீசார் அரசு பஸ் டிரைவர் கணேசனிடம் விசாரித்து வருகின்றனர்.

    • திண்டுக்கல்- மதுரை சாலையில் வந்த கார் டயர் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது
    • இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

    குள்ளனம்பட்டி :

    வேலூர் மாவட்டம் காந்திநகரை சேர்ந்தவர் மோகன் (வயது42). இவர் தனது மனைவி சோனியா (36), மகள் அனுஷியா (12) ஆகியோருடன் காரில் வேலூரில் இருந்து திருநெல்வேலிக்கு சென்றார்.

    திண்டுக்கல்- மதுரை சாலையில் போக்குவரத்து நகர் அருகே வந்தபோது திடீரென கார் டயர் வெடித்தது. இதில் தாறுமாறாக ஓடிய கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் மோகன் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு அவர்களை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அம்பாத்துரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • சங்கராபுரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • காயமடைந்த 3 பேர் சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டை சேர்ந்தவர் சவுரிராயன்(68). இவர் தனது உறவினர் செல்வராஜின் குழந்தைகளான ரோமியோ(13), அனார்(10), மடோனா(6) ஆகியோரை ஒரு மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு இளையாங்கண்ணி கூட்டுரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    சங்கராபுரம்-திருவண்ணாமலை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, சங்கராபுரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் ஒன்று, இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் குழந்தைகள் ரோமியோ, அனார், மடோனா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். சவுரிராயன் காயமின்றி உயிர் தப்பினார்.

    இதையடுத்து படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×